வாருங்கள்“சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாட்டிற்கு
“சந்தோஷமாய் துதிப்போர்,” 1995 மாவட்ட மாநாடுகளுக்கு என்னே ஓர் அருமையான கருப்பொருள் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறது! யெகோவாவின் சாட்சிகள் இப்படியாகவே இருக்கின்றனர். யாரைத் துதிப்போர்? ஏன், யெகோவா தேவனையே!
யெகோவா பல்வேறு விதங்களில் ஈடு இணையற்றவராகவும் நிகரற்றவராகவும் ஒப்புமையற்றவராகவும் தனித்தன்மை வாய்ந்தவராகவும் இருக்கிறார். அவர் சர்வவல்லவரும் சர்வஞானியுமாய், நீதியிலே சம்பூரணரும் அன்பே உருவானவருமாயும் இருக்கிறார். வேறு எல்லாரையும்விட நம்முடைய வணக்கத்திற்கும் துதிக்கும் அவரே பாத்திரர்.
கட்டாயமாகவே, அவரைச் சந்தோஷமாய் துதிப்போராக இருக்க நாம் ஆசைப்படுகிறோம்! இதில் உதவுவதற்கு, யெகோவாவின் சாட்சிகளுடைய நிர்வாகக் குழு, 1995-ற்கு மிகச் சிறந்த மூன்று நாள் மாநாட்டு நிகழ்ச்சிநிரலை நமக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இம்மூன்று நாட்களும் சந்தோஷம் பொங்கும் நாட்களாகவே திகழும்; வெள்ளிக்கிழமை காலை அன்று துவங்கும் ஆரம்பப் பாட்டு முதல், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிறைவுபெறும் முடிவான பாட்டு, ஜெபம் வரை ஆஜராயிருக்க ஒவ்வொரு யெகோவாவின் சாட்சியும் தன்னால் ஆனதையெல்லாம் செய்ய விரும்பவேண்டும்.