‘கடவுளுக்கு நான் முக்கியமா?’
“நான் முக்கியத்துவமுடைய நபரா? கடவுள் என்மீது அக்கறை உள்ளவரா?” இன்றைய கிறிஸ்தவம் என்ற ஆங்கில பத்திரிகையிலிருந்த கட்டுரையின் தலைப்பு இவ்வாறு இருந்தது. “வலியின் பிரச்சினையைச் சுற்றியே ஒரு எழுத்தாளனாக என்னுடைய தொழில் அதிக காலமாக இருந்திருக்கிறது,” என்று அந்தக் கட்டுரையின் ஆசிரியரான பிலிப் யான்சீ கூறுகிறார். “எப்போதுமே முழுமையாக ஆறாத வெகுநாளைய புண்ணை, விரல்கள் திரும்பத்திரும்ப தொடுவதுபோல அதே கேள்விகளுக்கு என் மனம் அடிக்கடி திரும்புகிறது. என்னுடைய புத்தகங்களின் வாசகர்களிடமிருந்து நான் கேள்விப்படுகிறேன், அவர்களுடைய வேதனைக் கதைகள் என்னுடைய சந்தேகங்களை உறுதிப்படுத்துகின்றன.”
ஒருவேளை, உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி கடவுளுக்கு இருக்கும் அக்கறையைக் குறித்து நீங்கள்கூட நிச்சயமில்லாமல் இருந்திருக்கலாம். ஆம், யோவான் 3:16 கூறுகிறபடி, “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை . . . தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்,” என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது இயேசு “அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க” வந்தார் என்று சொல்கிற மத்தேயு 20:28-ஐ நீங்கள் படித்திருக்கலாம். இருந்தாலும், ‘கடவுள் என்னை கவனிக்கிறாரா? ஒரு தனிப்பட்ட நபராக என்னைக் குறித்து அவருக்கு அக்கறையிருக்கிறதா?’ என்று நீங்கள் கேட்கலாம். நாம் பார்க்கப்போகும் விதமாக, அவர் அப்படித்தான் இருக்கிறார் என்று நம்புவதற்கு நல்ல காரணம் உண்டு.