உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 3/1 பக். 3-4
  • மாற்றான் குடும்பங்களுக்கே

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மாற்றான் குடும்பங்களுக்கே
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • குழந்தை வளர்ப்பில் பிரச்சினைகள்
  • மாற்றான் குடும்பங்கள் வெற்றி பாதையில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • என் பெற்றோரின் மறுமணத்தின்பேரில் நான் எவ்வாறு என்னை நடத்திக்கொள்வது?
    இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்
  • மாற்றாம் பெற்றோருக்கு உதவிக் குறிப்புகள்
    விழித்தெழு!—1993
  • உங்கள் குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 3/1 பக். 3-4

மாற்றான் குடும்பங்களுக்கே

சந்தோஷமான மாற்றான் குடும்பங்கள் சாத்தியமா?

உலகின் பல்வேறு பகுதிகளில் மாற்றான் குடும்பங்கள் சர்வசாதாரணமாகி வருகின்றன. இருந்தாலும், மாற்றான் குடும்பங்களுக்கே உரிய பிரச்சினைகளும் உள்ளன. இதில் மிகவும் சிக்கலானது குழந்தை வளர்ப்பே என்பதில் சந்தேகம் இல்லை. என்றாலும், பின்வரும் இரண்டு கட்டுரைகளும் காட்டும் வண்ணம் மாற்றான் குடும்பங்களிலும்கூட குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க முடியும்.

காலங்காலமாகவே மாற்றான் தாய் தந்தையர் என்றாலே எல்லாருக்கும் உரிய பிரச்சினைகள் இளக்காரம்தான். நாம் குழந்தைகளாய் இருக்கையில் எல்லாருமே சின்ரெல்லாவின் கதையை கேள்விப்பட்டிருப்போம் அல்லவா? அவளுடைய சித்தி அவளை படுத்தாத கொடுமைகளே இல்லை. ஐரோப்பாவில் இருக்கும் பிள்ளைகளும்கூட ஸ்நோ வைய்ட்டும் ஏழு குள்ளர்களும் என்ற கதையை படிக்கின்றனர். ஸ்நோ வைய்ட்டின் மாற்றான்தாய் கொடூரமான சூனியக்காரி!

இந்தக் கதைகள் மாற்றான் குடும்பங்களைப் பற்றிய சரியான சித்திரத்தைத் தீட்டுகின்றனவா? மாற்றான் பெற்றோர்கள் எல்லாருமே அவ்வளவு மோசமானவர்களா என்ன? இல்லை. திருமணம் மூலம் தங்களுக்கு கிடைக்கும் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் மானசீக ஆசை. ஆனாலும், மாற்றான் குடும்பங்களுக்கே உரிய கடினமான சில பிரச்சினைகளை அவர்கள் எதிர்ப்பட்டே ஆகவேண்டும்.

குழந்தை வளர்ப்பில் பிரச்சினைகள்

முதல் திருமணம் முறிவுறுகிறது என்றால் அநேகமாக திருமண துணைவர்கள் போதிய முதிர்ச்சி அடையவில்லை என்பதே அதற்கு காரணம். இரண்டாவது திருமணத்திலோ, பிள்ளைகளை வளர்ப்பதிலுள்ள பிரச்சினைகளால் தம்பதியினர் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்படலாம். மறுமணம் செய்துகொண்ட பெற்றோரையுடைய குடும்பங்களில் 10-ல் நான்கு, முதல் ஐந்து வருடங்களுக்குள் விவாகரத்தில் போய் முடிவடைகின்றன என்று அறிக்கைகள் காட்டுகின்றன.

மாற்றான் பெற்றோரின் வருகையால் மாற்றான் பிள்ளைகளில் ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்புகள், மனப்போராட்டங்கள், பொறாமை, கோபதாபம் போன்ற உணர்ச்சிகள் ஆகியவற்றை திருமணமான புதிதில் உணராதிருக்கலாம். தங்கள் சொந்த பெற்றோர், தங்களைவிட அந்த புதிய துணை மீதே அதிக அன்பு வைப்பதாக பிள்ளைகள் கற்பனைசெய்ய ஆரம்பித்துவிடலாம். அதோடு, தன்னை அம்போவென்று விட்டுவிட்டு சென்ற துணை மீதே தன் பிள்ளைகள் இன்னமும் அன்பு வைத்திருப்பதைப் பார்க்கையில் மற்ற துணைக்கு அதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். ஒரு பையன் தன் சொந்த அப்பாவிடம் தனக்கிருந்த நெருக்கமான உறவை இவ்வாறு விளக்க முயன்றான்: “அம்மா, அப்பா உன்ன கொடுமைபடுத்துனாருன்னு எனக்கு தெரியும், ஆனா என்கிட்ட நல்லவராதானே இருந்தாரு!” அவ்வார்த்தைகள் இருதயத்திலிருந்து வந்தாலும், ஒரு தாய் அந்தக் குழந்தையின் தகப்பன் மேல் இன்னும் அதிக கோபாவேசம் கொள்வதற்கே அது வழிநடத்தும்.

மாற்றான் தகப்பன் ஒருவர் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “என்னோட மாற்றான் பிள்ளைகள வளக்குறதுல இருக்குற எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்க நான் கொஞ்சம்கூட தயாரா இல்லை. அவங்களோட அம்மாவ கல்யாணம் செஞ்சுகிட்டதால நான்தான் அவங்களோட அப்பா அப்படீன்னு நெனச்சு வாழ்க்கைய ஆரம்பிச்சேன். அதுல எந்தப் பிரச்சினையும் இருந்த மாதிரி எனக்கு தெரியல! அந்தப் பிள்ளைங்க அவங்க சொந்த அப்பாமேல வெச்சிருந்த பாசத்த நான் புரிஞ்சுக்கல. அதனால் நிறைய தவறுகள் செஞ்சேன்.”

முக்கியமாக சிட்சைக் கொடுக்கும் விஷயத்தில் பிணக்கங்கள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு அன்பான சிட்சை அவசியம்; ஆனால் அந்தச் சிட்சை பெற்றவர்களிடமிருந்து வரும்போதே அவர்கள் பொதுவாக எதிர்ப்பார்கள். அப்படியிருக்க, மாற்றான் பெற்றோரிடமிருந்து வரும் சிட்சையை ஏற்றுக்கொள்வது எவ்வளவு கடினம்! அப்படிப்பட்ட சிட்சையை மாற்றான் பிள்ளை ஒன்றிற்கு கொடுக்கும்போது பொதுவாக, “நீங்க ஒன்னும் என்னோட அப்பா இல்ல!” என்றே சொல்லக்கூடும். உண்மையில் அக்கறையுள்ள மாற்றான் பெற்றோரை அந்த வார்த்தைகள் எவ்வளவாய் புண்படுத்தும்!

மாற்றான் குடும்பங்களில் பிள்ளைகளை நல்லவிதமாக வளர்க்க முடியுமா? நல்ல மாற்றான் குடும்பங்களை அமைப்பதில் மாற்றான் பெற்றோர் உதவ முடியுமா? இந்த இரண்டு கேள்விகளுக்கும், முடியும் என்பதே பதில். எப்போது? சம்பந்தப்பட்ட அனைவரும் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளில் உள்ள ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டால்.

[பக்கம் 3-ன் படம்]

“நீங்க ஒன்னும் என்னோட அப்பா இல்ல!”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்