உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 7/1 பக். 31
  • 2003-ல் சர்வதேச மாநாடுகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 2003-ல் சர்வதேச மாநாடுகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • இதே தகவல்
  • யெகோவாவின் சாட்சிகள் நடத்தவிருக்கும் சர்வதேச மாநாடுகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • விசேஷ மாநாடுகள் யெகோவாவை கனப்படுத்துகின்றன
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • மாநாடுகளில் களிகூருவதும் கடவுளைத் துதிப்பதும்
    கடவுளுடைய சித்தத்தைச் செய்தல்
  • மாநாடுகள் —யெகோவாவின் மக்களுக்குச் சந்தோஷமான தருணங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 7/1 பக். 31

2003-⁠ல் சர்வதேச மாநாடுகள்

அக்டோபர் 6, 2001 சனிக்கிழமை அ.ஐ.மா., நியூ ஜெர்ஸியிலுள்ள ஜெர்ஸி நகரில் உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்சில்வேனியாவின் அங்கத்தினர்களுடைய வருடாந்தர கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்குப்பின் அங்கு கூடிவந்திருந்த அங்கத்தினர்களும் விருந்தினர்களும் விசேஷித்த ஒரு நிகழ்ச்சிநிரலை அனுபவித்து மகிழ்ந்தனர். அதற்கு அடுத்த நாள், கனடாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் உள்ள நான்கு நகரங்களில் நடத்தப்பட்ட துணைக் கூட்டங்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினர்கள் தங்களுடைய கடைசி பேச்சிற்குப் பிறகு இவ்வாறு அறிவித்தனர்:

“வருங்காலத்தை குறித்ததில், கடவுளுடைய ஜனங்கள் அனைவரும் ஒன்றாக கூடிவருவதை விட்டுவிடாதிருப்பது மிகவும் முக்கியம். யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் சமீபித்து வருகிறதை நாம் எவ்வளவாய் பார்க்கிறோமோ அவ்வளவாய் ஒருவருக்கொருவர் ஊக்கமளிக்க கூடிவர வேண்டும் என அப்போஸ்தலன் பவுல் அறிவுறுத்தினார். (எபிரெயர் 10:24, 25) இந்த வேதப்பூர்வ கட்டளைக்கு இசைவாக, அடுத்த வருடம் [2002] உலகெங்கிலும் மாவட்ட மாநாடுகள் நடத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம். யெகோவாவுக்கு சித்தமானால் 2003-⁠ல் உலகின் சில பகுதிகளில் விசேஷித்த சர்வதேச மாநாடுகள் நடத்தப்படும். இந்த உலகமெனும் மேடையில் சம்பவங்கள் எப்படி அரங்கேறுகின்றன என்பதை பகுத்துணர்ந்து விழிப்புடன் கவனிப்பதற்கு சமயம் இதுவே.”

இந்த ஒழுங்குமுறையின் முடிவு நெருங்கி வருகையில் அநிச்சயமும் அழுத்தங்களும் ஒருபுறம் பெருகி வந்தாலும் கடவுளுடைய ஜனங்களின் வேலை தொடர்ந்து முன்னேற வேண்டும். ‘தேவன் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை மிகவும் சமீபித்திருப்பதால் அவருக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துவதற்கு,’ பைபிளின் எச்சரிப்பு செய்தி உட்பட, ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி சகல தேசத்தாருக்கும் இனத்தாருக்கும் மொழியினருக்கும் ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட வேண்டும். (வெளிப்படுத்துதல் 14:6, 7) ஆகவே, நம் பரலோக தகப்பனின் சித்தத்திற்கும் விருப்பத்திற்கும் இணங்க 2003-⁠ல் உலகின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

அதற்கு ஆரம்பமாக, தற்சமயத்திற்கு வட அமெரிக்காவிலுள்ள சில நகரங்களிலும் பிற்பாடு ஐரோப்பாவிலும் அப்படிப்பட்ட மாநாடுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2003-⁠ன் பிற்பகுதியில் ஆசியாவின் சில நகரங்களுக்கு மாநாட்டு பிரதிநிதிகள் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்; அந்த வருடத்தின் கடைசியில், இன்னும் சில பிரதிநிதிகள் ஆப்பிரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் பசிபிக் பகுதிகளுக்கும் செல்வார்கள். குறிப்பிட்ட மாநாடுகளுக்குச் செல்வதற்கு குறைந்த எண்ணிக்கையான பிரதிநிதிகளை அனுப்பும்படி சில கிளை அலுவலகங்கள் கேட்டுக்கொள்ளப்படும்; ஆகவே, அனைவருக்குமே இந்த அழைப்பு கிடைப்பது சாத்தியமல்ல. இருந்தாலும், ஒவ்வொரு இடத்திற்கும் பல்வேறு நாடுகளின் சார்பாக சில பிரதிநிதிகள் மட்டுமே செல்வது ஊக்கமளிப்பதாய் இருக்கும்.

இந்த மாநாடுகளைப் பற்றிய விவரங்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளுக்கு விரைவில் அனுப்பப்படும். மாநாடு நடைபெறும் சரியான தேதிகளும் நகரங்களும் கிளை அலுவலகங்கள் மூலம் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்படும். ஆகவே, இப்பொழுது இந்த விஷயம் சம்பந்தமாக நீங்கள் எழுதிக் கேட்கவோ விசாரிக்கவோ வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்.

ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் சாட்சிகளே பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; அவர்கள் செல்லும் இடங்களில் சிறந்த முன்மாதிரி வகிப்பார்கள்; உள்ளூர் சகோதரர்களிடத்தில் சகோதர அன்பைக் காட்டுகிறவர்களாகவும் இருப்பார்கள். அந்த உள்ளூர் சகோதரர்களும், மாநாடுகளுக்கு வருகை தருவோரை அன்புடன் வரவேற்பதற்கும் உள்ளப்பூர்வமாக உபசரிப்பதற்கும் சிறந்த வாய்ப்புகளை பெற்றிருப்பர். (எபிரெயர் 13:1, 2) இது ‘உற்சாக பரிமாற்றத்தில்’ விளைவடையும். (ரோமர் 1:11, 12, NW) இந்த ஏற்பாடுகளைப் பற்றிய கூடுதலான விவரங்கள், குறிப்பிட்ட நாட்டிற்கோ நாடுகளுக்கோ பிரதிநிதிகளை அனுப்பும் கிளை அலுவலகங்கள் மூலமாக தெரிவிக்கப்படும்.

2003-⁠ம் வருடத்திற்கான மூன்று நாள் மாவட்ட மாநாடுகள் வழக்கம்போல் பல நாடுகளிலும் ஏற்பாடு செய்யப்படும். அவற்றிற்கு ஒன்றுகூடி வருவதன் மூலம், ‘கேட்டு, கற்று, தேறுவதற்கு’ அனைவருக்கும் வாய்ப்பிருக்கும். (உபாகமம் 31:12; 1 கொரிந்தியர் 14:31) ‘யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பார்ப்பதற்கு’ கடவுளுடைய ஜனங்கள் அனைவருக்கும் இது சந்தர்ப்பம் அளிக்கும். (சங்கீதம் 34:8, NW) அனைத்து சர்வதேச மாநாடுகளிலும் மாவட்ட மாநாடுகளிலும் மிஷனரிகள் கலந்துகொள்வார்கள்; அவர்களில் சிலர் நிகழ்ச்சிநிரலிலும் பங்குகொள்வர்.

இந்த வருடத்தில் [2002] “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” என்ற தலைப்பிலான மாவட்ட மாநாடுகளை நாம் அனுபவிக்கிறோம்; அது மகத்தான சாட்சியளிக்க நம்மை உந்துவிக்கிறது. நாம் அதைச் செய்கையில், வருகிற வருடத்திற்காக யெகோவா என்ன செய்திருக்கிறார் என்பதில் நம் எதிர்பார்ப்பு நிச்சயமாகவே அதிகரிக்கும். இந்தக் கொடிய, குறிப்பிடத்தக்க காலத்தை கருத்தில் கொண்டு ‘விழிப்புடன் ஆயத்தமாயிருப்பதற்கு’ இது நமக்கு உதவும்.​—⁠மத்தேயு 24:42-44.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்