செவிகொடுக்கும் மனச்சாய்வுள்ளவர்களிடம் “வாருங்கள்!” என்று தொடர்ந்து சொல்லுங்கள்
1 சத்தியத்தின் செய்திக்குக் கவனமாய் செவிகொடுக்க வேண்டிய அவசியத்தை இயேசு வலியுறுத்தினார். (மத். 11: 15; 13:9, 43) தம்முடைய போதனையின் கருத்தை அவர்கள் உணர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தை அவர் அறிந்திருந்தார். ஏனெனில் மதித்துணர்வுடன் செவி கொடுப்பவர்களை நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடிய அறிவை அவர் கற்பித்துக் கொண்டிருந்தார்.—யோவான் 17:3.
2 இப்படிப்பட்ட ஜீவனைக் கொடுக்கும் அறிவானது “ஜீவத்தண்ணீரு”டைய முக்கிய பாகமாக இருக்கிறது. இதுவே இப்பொழுது தாகமுள்ள ஆட்களுக்குக் கிடைக்கும்படி செய்யப்படுகிறது. (வெளி. 22:17) யோவானின் வார்த்தைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறபடி, இது ஏதோ கருணை காட்டப்படும் ஒரு சில ஆட்களுடைய தனிப்பட்ட உடமையல்ல. அல்லது பணமுள்ளவர்களுக்கு விற்கப்பட்டு பணமில்லாதவர்களுக்கு மறுக்கப்படும் ஒன்றும் அல்ல. இப்பொழுது நீதியின் பேரில் தாகமுள்ள எல்லாரும் யெகோவாவின் இந்த இலவச வெகுமதியை அனுகூலப்படுத்திக்கொள்ளும்படி உற்சாகப்படுத்தப்பட வேண்டும். (ஏசா. 55:1) செவி கொடுக்கும் மனச்சாய்வுள்ளவர்களிடம் “வாருங்கள்!” என்று சொல்லக்கூடிய அந்த இலட்சக்கணக்கானோருடைய எண்ணிக்கையில் நீங்களும் ஒருவரா?
“வாருங்கள்!” என்று நீங்கள் எப்படி சொல்லலாம்
3 ஜூன் மாதம் நமது காவற்கோபுர சந்தா அளிப்பு திட்டத்தில் இரண்டாவது மாதம். யெகோவாவினுடைய அதிசயமுள்ள ஜீவனுக்கான ஏற்பாடுகளுக்குக் கவனத்தை இழுக்க வேறு எந்த சிறந்த உபகரணம் இருக்க முடியும்? மகா பாபிலோனின் பொல்லாத செயல் திட்டங்களை வெட்ட வெளிச்சமாக்குவதற்கு விசேஷ முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த காவற்கோபுரம் மத மூடநம்பிக்கைகளிலிருந்தும் பொய்மைகளிலிருந்தும் விடுதலையை அடைவதற்கு உதவி செய்யக்கூடும். காவற்கோபுர சந்தா அளிக்க நீங்கள் என்ன வாய்ப்பைக் காண்கிறீர்கள்?
4 சந்தாவை அளிப்பதற்கான ஒரு சிறந்த வழி வீட்டுக்கு வீடு ஊழியமாகும். ஆனால் மற்ற எண்ணிறைந்த வழிகளும் உண்டு, உதாரணமாக, மறுசந்திப்பு செய்கையில், மற்றும் பத்திரிகை மார்க்கத்தில் புதிய இதழ்களை கொடுக்கச் செல்லும்போதும் ஒருசில பிரஸ்தாபிகள் தெரு ஊழியத்தில் தாங்கள் சந்திக்கக்கூடிய ஆர்வமுள்ள ஆட்களிடம் சந்தா பெறுவதில் வெற்றிபெறுகிறவர்களாக இருக்கின்றனர். ஏற்கெனவே சந்தா பெற்றிருக்கக்கூடியவர்களை தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசு சந்தாக்களை அனுப்பும்படி நாம் உற்சாகப்படுத்தலாம். நீங்களும்கூட ஒருசில சந்தாக்களை அனுப்ப விரும்பக்கூடும். வியாபாரத் தொடர்புள்ளவர்களிடம், உடன் வேலையாட்கள் அல்லது பள்ளித் தோழர் போன்றவர்களிடமும் சந்தா அளிக்கப்படலாம். மற்ற வாய்ப்புகளை குறித்தும்கூட நீங்கள் சிந்தித்துப் பார்க்கலாம்.
“வாருங்கள்!” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருங்கள்.
5 மே மாதத்தின்போது சந்தா எடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் தொடர்ந்து அக்கறை காட்டுங்கள். விரைவில் மறுசந்திப்பு செய்ய நிச்சயமாயிருங்கள். அவர்கள் பத்திரிகைகளை பெற்றுக்கொண்டிருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள். இப்படிப்பட்ட சந்திப்புகளில் நீங்கள் ஒரு திட்டவட்டமான கட்டுரையைச் சுட்டிக்காட்டி அதை வாசிக்க உற்சாகப்படுத்துங்கள். ஒருவேளை நீங்கள் அவர்களுடன் ஒரு பைபிள் படிப்பையும்கூட ஆரம்பிக்கலாம். உங்களுடன் சபை கூட்டங்களுக்கு ஆஜராயிருக்கவும் யோசனை கூறலாம். நீங்கள் அவர்கள் பேரில் காட்டும் மனமார்ந்த அக்கறை மூலம் அவர்கள் சாதகமாக பிரதிபலித்து ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்ய உந்துவிக்கப்படக்கூடும்.
6 இந்தியாவுக்கான ஞாபகார்த்த ஆஜர் எண்ணிக்கையானது நற்செய்தியின் பிரஸ்தாபிகளாக இராத 14,500-க்கும் அதிகமான பேர் இந்த மிக முக்கிய நிகழ்ச்சிக்கு ஆஜராகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. உங்கள் சபையில் இந்த அக்கறையுள்ள ஆட்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் காவற்கோபுரத்துக்குச் சந்தா செய்திருக்கிறார்களா? ஆவிக்குரிய பிரகாரமாய் வளரும்படி அவர்களுக்கு உதவ என்ன செய்யப்படுகிறது?
7 “வாருங்கள்!” என்ற இந்த அழைப்பு எல்லாத் தேசத்து மக்களுக்கும் கொடுக்கப்படுகிறது. “வாருங்கள்!” “இலவசமாய் ஜீவத்தண்ணீரை வாங்கிக் கொள்ளுங்கள்” என்ற அழைப்புக்குப் பிரதிபலிக்கக்கூடிய எல்லாருக்கும் தம்முடைய குமாரன் மூலமாக இந்தப் பரிசாகிய ஜீவன் கிடைக்கும்படி யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார். ஜூன் மாதத்தில் இந்த அழைப்பை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் நீங்கள் முழுப் பங்கை கொண்டிருப்பீர்களா?