எளிமையாக்கப்பட்ட சந்தா புதுப்பித்தல் முறை
காவற்கோபுரம், விழித்தெழு! சந்தாதாரர்கள் தங்கள் சந்தா முடியும் தறுவாயில் இரு அறிவிப்புகளை வழக்கமாக பெற்றனர். அச்சடிக்கப்பட்ட எக்ஸ்பைரிங் ஸப்ஸ்கிரிப்ஷன் (Expiring Subscription) சீட்டு முதலாவது. இது சபை மூலமாக சந்தாதாரர்களிடம் கொடுக்கப்பட்டது. சந்தாவை புதுப்பிக்க சிபாரிசு செய்யப்பட்ட படிவம் இது.
அடுத்த அறிவிப்பு, சந்தா புதுப்பித்தல் நமூனா. இது பத்திரிகையினுள் வைத்து நேரடியாக சந்தாதாரருக்கு அனுப்பப்பட்டது. எளிமையாக்கப்பட்ட பிரசுர அளிப்பு ஏற்பாடு அமலுக்கு வந்ததிலிருந்து இது நிறுத்தப்பட்டது. என்றாலும், பிரெயில் லேபல்களைப் பெறுகிறவர்களுக்கு புதுப்பித்தல் அறிவிப்புகள் தொடர்ந்து அனுப்பப்படும்.
பிரஸ்தாபிகளும் பயனியர்களும் தங்கள் பத்திரிகைகளை பெற சந்தா செய்வதற்கு பதிலாக அவற்றை ராஜ்ய மன்றத்தில் சபைக்கு வரும் பத்திரிகைகளிலிருந்து பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது சொஸைட்டியின் வேலையையும் செலவையும் மிச்சப்படுத்தும்.—இந்தியாவிலுள்ள எல்லா சபைகளுக்கும் அனுப்பப்பட்ட அக்டோபர் 15, 1999 தேதியிட்ட கடிதத்தில் பக்கம் 2-ல், “காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்களை எவ்வாறு பெறுவது?” என்ற பகுதியை பார்க்கவும்.
வெளி ஊழியத்தில் பெறும் சந்தாக்களைப் பொறுத்தமட்டில், சந்தா தீர்ந்துபோவதை அறிவிக்க சபையின் மூலமாக எக்ஸ்பைரிங் ஸப்ஸ்கிரிப்ஷன் சீட்டை சந்தாதாரரிடம் கொடுப்பதே பிரதான முறையாக பயன்படுத்தப்படும். இந்த சீட்டுகள் சபைக்கு வந்ததும், அந்த சந்தாக்களை முதலில் எடுத்த பிரஸ்தாபிகளிடம் அவற்றைக் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சந்தாவைப் புதுப்பிப்பதற்கான படிவம் பத்திரிகையின் உள்ளே வைத்து இனி சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படாது என்பதால், அக்கறைகாட்டும் இவர்களை உடனுக்குடன் போய் பார்ப்பது அவசியம். அந்த நபர் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறாரா, பத்திரிகையை தொடர்ந்து அனுப்புவதால் பயனடைவாரா என்பதை கண்டுபிடிக்க முயல வேண்டும். அப்படியானால், சந்தா அனுப்பும் செலவுகளை மிச்சப்படுத்த, நம் பத்திரிகை மார்க்கத்தில் அவரை சேர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு, சந்தாவை புதுப்பிப்பதற்கு பதிலாக ஒவ்வொரு பத்திரிகையையும் நேரில் போய் கொடுத்து அக்கறையை வளர்க்கலாம். நேரில் போய் கொடுப்பது நடைமுறையானதாக இராவிட்டால், சந்தாவை புதுப்பிக்க தீர்மானிக்கலாம். புதுப்பிக்கும்போது, சபையிலிருந்து பெற்ற எக்ஸ்பைரிங் ஸப்ஸ்கிரிப்ஷன் சீட்டையே அனுப்புவது பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் அது புதுப்பித்தலை துரிதப்படுத்துகிறது. புதுப்பிக்கப்பட்ட சந்தாக்களை எப்போதும் சபையின் மூலமாகவே அனுப்ப வேண்டும்.—ஆங்கில நம் ராஜ்ய ஊழியம், நவம்பர் 1988, பக்கம் 4, பிப்ரவரி 1986, பக்கம் 4 ஆகியவற்றைப் பார்க்கவும்.
நேரில் சந்திக்க முடியாத இடங்களிலோ ஒதுக்கமான பிராந்தியங்களிலோ இருக்கிறவர்களுக்கு எக்ஸ்பைரிங் ஸப்ஸ்கிரிப்ஷன் சீட்டுகளை சபை தபாலில் அனுப்பலாம்.
இருண்ட உலகில் காலத்திற்கேற்ற இந்த பத்திரிகைகள் தொடர்ந்து ஒளியை பிரகாசித்து வரும். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் ஒவ்வொரு பிரதியையும் சந்தாதாரர்கள் தவறாமல் பெறுவதற்கு இந்த புதிய ஏற்பாட்டுடன் அனைவரும் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.