வார மத்திப கூட்டத்தில் மாற்றம்
செப்டம்பர் 3-ல் துவங்கும் வாரத்திலிருந்து சபை பைபிள் படிப்பு 25 நிமிடங்களுக்குப் பதிலாக 30 நிமிடங்கள் நடக்கும். அதை நடத்துபவர் முந்தைய வாரம் படித்த விஷயங்களை ஒரு நிமிடத்திற்கு மறுபார்வை செய்வார். ஊழியக் கூட்டமும் 35-லிருந்து 30 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அறிவிப்புகளுக்கென்று ஒரு தனிப் பகுதி இருக்காது. முக்கியமான அறிவிப்புகள் இருந்தால், ஊழியக் கூட்டத்தின் முதல் பகுதியின்போது சொல்லலாம். அடுத்த பகுதியை அறிமுகப்படுத்த தேவையில்லை. வெளி ஊழியம், சுத்தம் செய்தல், வாழ்த்துதல் போன்றவற்றையும் அறிவிக்க வேண்டியதில்லை. (ராஜ்ய ஊழியம் 10/08 பக். 1, பாரா 4) நீண்ட அறிவிப்பு ஏதேனும் இருந்தால், மற்றப் பகுதிகளைக் கையாளுபவர்களிடம் முன்கூட்டியே சொல்லிவிடலாம். அப்போதுதான் அவர்களால் தங்களுக்குரிய பகுதியைச் சீக்கிரமாக முடிக்க முடியும்.