நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பகுத்துணர்வோடு
1 வித்தியாசப்பட்ட நம்பிக்கைகளையும் பின்னணிகளையும் கொண்ட ஆட்களிடம் நற்செய்தியை அளிப்பதில் நாம் பகுத்துணர்வை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை அப்போஸ்தலனாகிய பவுல் வலியுறுத்தினான். நம்முடைய நாளில் ஒரு சில ஆட்கள் தாங்கள் மத வாதிகள் என்று உரிமைப் பாராட்டுகின்றனர். மற்றவர்களோ ஆவிக்குரிய மனச்சாய்வு எதுவுமில்லாதவராயிருக்கின்றனர். ஆவிக்குரிய மதிப்பீடுகளை அவர்கள் போற்றுவது இல்லை. ஆகவே ஊழியத்தில் பகுத்துணர்வை பயன்படுத்துவதன் மூலம் நாம் நற்செய்தியின் அறிவிப்பாளர்களாக “எல்லா வகையான மனுஷருக்கும்” சுவையுள்ளதாக ஆக்க வேண்டும்.—1 கொரி. 9:19-23.
வீட்டுக்காரரை புரிந்துகொள்ள வேண்டும்
2 வெளி ஊழியத்தில் பகுத்துணர்வை நடைமுறையில் பயன்படுத்துவதானது வீட்டுக்காரருடைய ஆர்வத்துக்கு ஏற்றார்போல் நம்முடைய பிரசங்கத்தை மாற்றியமைத்துக்கொள்ளும் திறமையை உட்படுத்துகிறது. இது நல்ல தயாரிப்பைத் தேவைப்படுத்துகிறது. கையிருப்பிலிருக்கக்கூடிய புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றில் கலந்தாராயப்பட்டிருக்கும் பல்வேறு பொருளடக்கங்களை முழுவதும் நன்றாக தெரிந்து வைத்திருப்பதன் மூலம் நற்செய்தியை பல்வேறு பேச்சு குறிப்புகளோடு எடுத்துரைப்பதற்குப் பிரஸ்தாபி ஆயத்தமாக இருக்கலாம். நாம் முதியவர்களோடு, இளைஞரோடு, குடும்பத்தலைவர்களோடு, குடும்ப ஸ்திரீகளோடு, வேலைசெய்யும் பெண்களோடு மற்றும் வேறு அநேகரோடு பேசுகையில் அவர்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைமைகளை நாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். பேசுவதற்கான தகவலை தேர்ந்தெடுக்க பகுத்துணர்வை பயன்படுத்த வேண்டும்.
3 நீங்கள் வீட்டுக்காரரை அணுகும்போது சுற்றியுள்ள காரியங்களை கவனிக்க விழிப்புணர்வோடிருங்கள். வீட்டுக்காரர் ஒரு பெற்றோர், ஒரு குறிப்பிட்ட மத பின்னணியுடையவர், வீட்டைப் பராமரிப்பதில் அதிக அக்கறையுள்ளவர் போன்ற காரியங்களை நீங்கள் பகுத்துணரக்கூடும். இந்தத் தகவலைக் கொண்டு வீட்டுக்காரரின் சூழ்நிலைமைகள் மற்றும் ஆர்வம் ஆகியவற்றிற்கு ஏற்ப உங்களுடைய முன்னுரையை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடும். சாதுரியமுள்ள, விவேகமான கேள்விகள் மூலமும் ஆட்களுடைய குறிப்புகளுக்குக் கவனமாக செவிகொடுப்பதன் மூலமும் அவருடைய நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் நீங்கள் பகுத்துணரலாம். பின்பு உங்களுடைய பிரசங்கத்தைத் தொடருவதற்குரிய மிகச் சிறந்த வழியைத் தீர்மானிக்கலாம்.
உங்களுடைய பிரசங்கத்தைத் தேவைக்கேற்றார்போல் அமைத்தல்
4 ஒரு வீட்டை அணுகுகையில் நீங்கள் விளையாட்டு பொருட்களையோ அல்லது பிள்ளைகளையோ கவனித்தால் நீங்கள் இந்த மாத சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு துவங்கலாம்: “நாங்கள் இந்தச் சமுதாயத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் வழிக்காட்டி நியமங்களைக் குறித்து பேசி வருகிறோம். பள்ளிகளிலே பிள்ளைகளுக்கு ஒழுக்க சம்பந்தமான வழிகாட்டி நியமங்கள் கொடுக்கப்படாததைக் குறித்து அநேக பெற்றோர் கவலைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட விஷயங்களின் பேரிலுள்ள பிரச்னைகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?” வீட்டுக்காரரின் பதிலுக்காக காத்திருங்கள். வீட்டுக்காரருக்கு மத சம்பந்தமான ஆர்வம் இருப்பதை அவருடைய பதில் சுட்டிக் காட்டுமானால் நீங்கள் பின்வருமாறு தொடரலாம்: “நாமும் நம்முடைய பிள்ளைகளும் ஞானமுள்ள வழிநடத்துதலைப் பெறுவதற்கான அவசியத்தை பைபிள் காட்டுகிறது என்பதை அறிவது அக்கறைக்குரியதாக இருக்கிறது. நீதிமொழிகள் 14:12-ல் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்பதை கவனியுங்கள்.” வேத வசனத்தை வாசித்த பின்பு, நீங்கள் பின்வருமாறு சொல்லலாம்: “பைபிள் அறிவுரைகள் நமக்கு எவ்வளவு நடைமுறையான ஒன்று என்பதை வலியுறுத்தக்கூடிய ஒன்றை நான் படித்துக் கொண்டிருந்தேன்.” தப்பிப்பிழைத்தல் பக்கம் 30-ஐ திருப்பி பாரா 1-ஐ வாசியுங்கள். அடுத்தப்படியாக பக்கம் 33-க்குத் திருப்பி அதிலுள்ள படத்தைக் காண்பியுங்கள். பக்கம் 37-லுள்ள கடைசி இரண்டு வாக்கியங்களை வாசித்து முடியுங்கள். பிரசுரத்தை ரூ10-க்கு அளியுங்கள்.
5 வீட்டுக்காரரின் பிரதிபலிப்பு அவர் ஒரு வித்தியாசப்பட்ட பரிசுத்த புத்தகத்தை பின்பற்றுகிறார் என்பதைக் காட்டுமானால் உங்கள் பிரசங்கத்தை மாற்றியமைத்துக்கொண்டு பின்வருமாறு சொல்வதன் மூலம் நீங்கள் பகுத்துணர்வைக் காட்டலாம்: “ஒருவருடைய மத நம்பிக்கைகள் எதுவாக இருப்பினும் சரியான சிந்தனையுள்ள அனைவரும் இந்தத் தற்போதைய திருப்தியற்ற உலகம் மேம்பட்ட ஒன்றால் மாற்றியமைக்கப்படுவதை காண ஏங்குகின்றனர். இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை குறித்து இந்தப் பிரசுரம் என்ன சொல்லுகிறது என்று கவனியுங்கள்.” அதிகாரம் 7 பாராக்கள் 1-3-ல் உள்ள குறிப்புகளையும், மேலும் அதிகாரம் 24, பாரா 5 அல்லது 14-ஐயும் பயன்படுத்துங்கள். புத்தகத்தை ரூ10-க்கு அளிக்கவும்.
6 நன்றாக தயாரித்து யெகோவாவின் சேவையில் பகுத்துணர்வை காண்பிக்கும்போது அப்போஸ்தலனாகிய பவுலைப் போன்று நாமும் சொல்லக்கூடும்: “எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.”—1 கொரி. 9:22; நீதி. 19:8.