நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பத்திரிகைகளைக் கொண்டு
1 காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளைப்போல வேறு எந்தப் பத்திரிகைகளும் ஆட்களின் பேரில் இப்பேர்ப்பட்ட மிகச்சிறந்த செல்வாக்கைக் கொண்டில்லை. ஒவ்வொரு பிரதியிலும் உயிரை அளிக்கும் ஆவிக்குரிய உணவு நிறைந்திருக்கிறது. பலமான ஆவிக்குரிய ஆதரவுடன் அளிக்கப்படும் ஆழமான ஆராய்ச்சியின் விளைவானது சத்தியத்தின் செய்தியை நமது மனங்களிலும் இருதயங்களிலும் ஆழமாக பதியவைக்கிறது.
2 காவற்கோபுரம், அதன் பக்கங்களின் மூலம் பைபிள் போதகங்களை விளக்கி, பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்திற்கு நமது கவனத்தை திருப்புகிறது. ஆவிக்குரிய விதத்தில் பசியுள்ள யாவரும் தங்கள் மனதை மாற்றி, புதிய மனிதனைத் தரித்துக்கொள்ள அது உற்சாகப்படுத்துகிறது. (ரோ. 12:2; எபே. 4:22-24) விழித்தெழு! அதன் வாசகர்களை உலகத்தில் நடக்கும் குறிப்பிடத்தக்க சம்பவங்களுக்கு விழிப்பூட்டுகிறது. சிருஷ்டிப்பின் அதிசயங்களை எடுத்துக் காட்டும் அதன் கவனத்தைக் கவரும் படங்கள் புதிய உலகத்தில் அக்கறையைத் தூண்டி, அன்புள்ள சிருஷ்டிகருக்கு நம்முடைய போற்றுதலை ஆழமாக்குகிறது.
உலகப்பிரகாரமான பத்திரிகைகளைப் போலல்ல
3 இந்த உலகத்தில் திருப்திகரமான வாழ்க்கையை எவ்வாறு அனுபவிப்பது என்று உலகப்பிரகாரமான பத்திரிகைகள் காட்டுவதில்லை. எதிர்காலத்துக்கு எந்த நம்பிக்கையும் அளிப்பதில்லை, மேலும் நித்திய ஜீவனை எப்படி பெறுவது என்று அவை ஜனங்களுக்குக் கற்பிக்கத் தவறுகின்றன. உலகப்பிரகாரமான பத்திரிகைகள் உலகக் காரியங்களை முன்னேற்றுவிப்பதற்காகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து எவ்வளவு வித்தியாசப்பட்டவை அவை!—1 யோவான் 2:15-17.
4 சந்தேகமில்லாமல் நீங்கள்தாமே காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் ஒவ்வொரு பிரதிக்கும் ஆழ்ந்த நன்றியுணருதலை உடையவர்களாய் இருக்கிறீர்கள். அவை ‘உண்மையுள்ள ஊழியக்கார’ வகுப்பினரிடமிருந்து வரும் சத்தியத்தின் அருமையான வாசனையைக் கொண்டிருக்கின்றன. (லூக்கா 12:42) பத்திரிகை விநியோகிப்பை அதிகரித்து, இப்படியாக நம்முடைய பத்திரிகைகளிலிருந்து மேலும் அநேகர் பயனடையச் செய்வதற்கு நாம் என்ன செய்யக்கூடும்?
நம்முடைய பாகத்தைச் செய்தல்
5 நம்முடைய பத்திரிகைகளை நேர்மை இருதயமுள்ளோர் வாசிக்கும்படி நாம் சரியானபடி உற்சாகப்படுத்துவதற்கு முன்பு, ஒவ்வொரு பத்திரிகையிலும் என்ன அடங்கியிருக்கிறது என்று நாம் முதலாவதாக அறிந்திருக்க வேண்டும். இது நாம் அவற்றை ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு, ஒவ்வொரு பிரதியையும் வாசிப்பதை அவசியப்படுத்துகிறது. அதன் பொருளடக்கத்தை முற்றிலும் அறிந்தவர்களாக, நாம் வீட்டுக்கு-வீடு வேலை, தெரு ஊழியம், முறைப்படியல்லாத ஊழியம் ஆகிய எல்லா அம்சங்களையும் பயன்படுத்தி பத்திரிகைகளை விநியோகிக்கலாம்.
6 மேலுமாக, நாம் கடைக்குச் செல்லுகையில், பொதுப் பேருந்துகளில் பிரயாணம் செய்கையில், பள்ளியில், வேலை செய்யுமிடங்களில் அல்லது எங்கு சென்றாலும் புதிய பத்திரிகைகளை நம்முடன் வைத்திருப்பதன் மூலம், சாட்சி கொடுக்க பொருத்தமான சந்தர்ப்பங்களை பற்றிக்கொள்ளக்கூடும். நியாயங்கள் புத்தகத்திலிருந்து நன்கு தெரிந்தெடுக்கப்பட்ட ஓர் அறிமுகமும், அதோடுகூட பத்திரிகைகளிலுள்ள கட்டுரைகளில் ஒன்றிலிருந்து ஒரு குறிப்பும் நம்முடைய பத்திரிகைகளை வாசிக்க ஒருவரின் ஆவலைத் தூண்டிவிடலாம்.
7 பத்திரிகைகளை அளிக்கையில் நம்முடைய சம்பாஷணை சுருக்கமாக இருந்தாலும், நாம் இரண்டொரு நிமிடத்துக்கு அதைக் கட்டுப்படுத்த அவசியமில்லை. அவர் உண்மையில் நம்முடைய செய்தியில் அக்கறையுள்ளவராக இருக்கிறாரா பத்திரிகைகளை அவர் வாசிப்பாரா என்று தீர்மானிக்க நாம் நேரம் எடுத்துக்கொள்ள விரும்புவோம். கேள்விகள் எழும்பினால், நம்முடைய பைபிள் அல்லது நியாயங்கள் புத்தகத்தை முழுமையாக உபயோகித்து விடையளிக்க நாம் எப்போதும் பிரயாசப்பட வேண்டும். நம்முடைய விசுவாசத்தைக் குறித்து கேட்பவர்களுக்குப் பதிலளிக்க ஆயத்தமாக இருப்பதன் மூலம், நாம் மகத்தான ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம்.—1 பேதுரு 3:15.
8 அந்த நபர் பத்திரிகைகளை வாசிக்க ஒத்துக்கொண்டால், நாம் நம்முடைய வேலை எப்படிப்பட்டது, இந்தப் பத்திரிகைகள் உலகளாவிய பைபிள் கல்வி திட்டத்தின் ஒரு பாகமாக மாதத்திற்கு இருமுறை எவ்வாறு பிரசுரிக்கப்படுகிறது என்பதை விளக்கலாம். காவற்கோபுரம் பக்கம் 2, மற்றும் விழித்தெழு! பக்கம் 4-லுள்ள விஷயம் இதை நல்ல முறையில் விளக்குகிறது. அடுத்த பிரதியின் பொருளடக்கம் எப்போதுமே கொடுக்கப்பட்டிருப்பதனால், நாம் அதன் சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பலாம், அல்லது வரப்போகும் கட்டுரைகளுக்கு அவருடைய கவனத்தைத் திருப்பலாம். இது அவருடைய ஆவலைத் தூண்டிவிடக்கூடும், புதிய பிரதிகள் வெளிவரும்போது அவற்றைப் பெற்றுக்கொள்ள தன் விருப்பத்தைத் தெரிவிக்கும்படிச் செய்யக்கூடும். ஒரு பத்திரிகை மார்க்கத்தின் துவக்கமாக இது அமையலாம்.
9 இந்த ஒழுங்குமுறையின் முடிவு நெருங்குகையில், மகா பாபிலோனிலிருந்து தப்பியோடி சத்தியத்துக்குள் வருவதற்கு நேர்மை இருதயமுள்ளோருக்கு உதவி செய்வதில் நாம் நம்முடைய வேகத்தை அதிகரிப்போமாக. (வெளி. 18:4) காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் இந்த உலகளாவிய பைபிள் கல்வி வேலையில் ஒரு வல்லமை வாய்ந்த பங்கை வகிக்கின்றன. ஊழியத்தில் நம்முடைய உபயோகத்திற்காக யெகோவா இவற்றை ஏற்பாடு செய்திருப்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்தப் பத்திரிகைகளை நாம் கவனத்தோடும் ஊக்கமான முயற்சியோடும் உபயோகிப்பதை யெகோவா தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக!