நம்முடைய சொந்த உத்தரவாத சுமையை தாங்குதல்
1 உத்தரவாதம் என்ற கருத்து இன்று ஜனங்களுக்கு பாரமானதாக தோன்றுகிறது. அநேகர் அதை தட்டிக்கழித்துவிட முயற்சி செய்கின்றனர். இதன் விளைவாக, கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை கைவிட்டுவிடுகின்றனர், தாய்மார்கள் பிள்ளைகளை புறக்கணிக்கின்றனர், இளைஞர்கள் பள்ளியிலிருந்து வெளியேறுகின்றனர், குடிமக்கள் வரிகளை தவிர்க்கின்றனர். உத்தரவாதமற்ற செயல்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. உத்தரவாதமுள்ள நபர் நம்பத்தக்கவராகவும், மனமுவந்து செய்பவராகவும், தன்னுடைய நடத்தைக்கு பதிலளிக்கக்கூடியவராகவும் இருப்பார். ஆகையால் “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே” என்று கிறிஸ்தவர்களுக்கு கடவுளுடைய வார்த்தை தெளிவாகக் கூறுகிறது. (கலா. 6:5) “நம்முடைய சொந்த உத்தரவாத சுமையை தாங்குதல்” என்ற 1992 ஊழிய ஆண்டுக்கான வட்டார அசெம்ளியின் பொருள் எவ்வளவு பொருத்தமானதாயிருக்கிறது! இந்தத் தொடர் ஜனவரி 1992-லிருந்து ஆரம்பமாகும். ஆஜராவதற்கு நாம் அனைவரும் திட்டவட்டமான திட்டங்களை போட வேண்டும்.
2 பேச்சுகள், சிறு துணுக்குகள், நடிப்புகள், அனுபவங்கள், பேட்டிகள் ஆகியவற்றின் மூலம் இந்தச் சிறந்த வட்டார அசெம்ளி நிகழ்ச்சிநிரல், கிறிஸ்தவர்களாக நாம் அனைவரும் கொண்டிருக்கும் பல்வேறு உத்தரவாதங்களை தெளிவாக குறிப்பிட்டுக் காட்டும். சனிக்கிழமை பிற்பகல், நாம் அனைவரும் எவ்வாறு நம்முடைய உத்தரவாதங்களை சந்தோஷமாக கவனித்துக் கொள்வது என்பதை விளக்கும் நான்கு பகுதிகளையுடைய தொடர்பேச்சு சிறப்பித்துக் காட்டப்படும். நம்முடைய இளைஞர்கள் தாங்கவேண்டிய உத்தரவாதம் ஒன்று இருக்கிறது. வட்டார கண்காணியால் கொடுக்கப்படும் சனிக்கிழமை பிற்பகல் பேச்சு விசேஷமாக அவர்களுக்கென இருக்கும். புதிதாக ஒப்புக்கொடுத்த நபர்கள் முழுக்காட்டப்படுவதற்காக ஒரு சந்தர்ப்பம் சனிக்கிழமை இருக்கும். வட்டார அசெம்ளியில் முழுக்காட்டுதல் பெற திட்டமிட்டிருக்கிற அனைவரும் முன்னதாகவே நடத்தும் கண்காணியிடம் தெரியப்படுத்த வேண்டும், அப்போது இதற்காக தயாரிப்பு செய்யப்படலாம்.
3 ஞாயிறு காலை மற்றொரு நான்கு–பகுதிகளையுடைய தொடர் பேச்சு, பிரசங்கம் செய்ய வேண்டிய நம்முடைய கிறிஸ்தவ உத்தரவாதத்தின் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்தும். பின்பு, ஞாயிறு பிற்பகல் “கடவுளுடைய புதிய உலகம்—அதில் பிரவேசிப்பதற்கு யார் தகுதியுடையவர் ஆவர்?” என்ற தலைப்பையுடைய பொது பேச்சு மாவட்ட கண்காணியால் கொடுக்கப்படும். இந்தப் பேச்சை கேட்பதற்கு புதிதாக அக்கறை காண்பிக்கும் அனைவரையும் அழைக்க விழிப்புள்ளவர்களாயிருங்கள்.
4 நாம் அனைவரும் நம்முடைய வேலைகளை ஒழுங்கு செய்து கொண்டு ஆஜராவதற்கும், இந்த இரண்டு–நாள் சிறப்பான நிகழ்ச்சி நிரலிலிருந்து முழுமையாக பயனடைவதற்கும் விரும்புவோம். உங்களுடைய சபைக்கு அட்டவணையிடப்பட்டிருக்கும் இடத்தையும், தேதிகளையும் உங்களுடைய வட்டார கண்காணி உங்களுக்கு தெரியப்படுத்துவார்.