கடவுளுடைய வார்த்தையை ஏற்பதும், பயன்படுத்துவதும்,அதிலிருந்து பயனடைவதும்
1 இலட்சக்கணக்கான மக்கள் பைபிள் பிரதியை வைத்திருக்கிறபோதிலும், அதைக் கடவுளுடைய வார்த்தையென பலர் ஏற்பதில்லை, பெரும்பான்மையர் அதன் ஞானமான அறிவுரையைப் பயன்படுத்துவதில்லை, இவ்வாறு சிலரே அதிலிருந்து பயனடைகின்றனர். எனினும், யெகோவாவின் ஜனங்கள் அது கடவுளுடைய வார்த்தையென்றும் எல்லா காரியங்களுக்கும் அது பயனுள்ளதென்றும் உண்மையாக நம்புகின்றனர். (2 தீமோ. 3:16, 17) ஆகையால், 1993 ஊழிய ஆண்டுக்கு வட்டார மாநாட்டின் பொருள் “கடவுளுடைய வார்த்தையை ஏற்பதும், பயன்படுத்துவதும், அதிலிருந்து பயனடைவதும்,” என்பதாயிருக்கும்.
2 கடவுளுடைய வார்த்தைக்கான நம்முடைய மதித்துணர்வை ஆழமாக்குவதற்கும், அதை வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் இன்னும் முழுமையாய்ப் பொருத்திப் பயன்படுத்த நமக்கு உதவிசெய்யவும் நம்மை ஊக்கப்படுத்துவதற்கு, பேச்சுகளும், நடிப்புகளும், சிறு துணுக்குகளும், அனுபவங்களும், பேட்டி காண்பவையும் இருக்கும். சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ச்சிநிரல், குடும்ப வட்டாரத்துக்குள், பொழுதுபோக்கு, கூட்டுறவு, மற்றும் பொருளாசை சம்பந்தப்பட்டவற்றில் அறிவுரையையும் சிட்சையையும் ஆலோசிக்கும். நாம் எவ்வாறு இவ்வுலகத்திலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும், அதன் கெட்ட நடைபாங்குகளையும் பணிவிணக்கமற்ற அல்லது இழிவான பேச்சுநடையையும் ஏற்கக்கூடாதென அது காட்டும். கூடுதலாக, ஒற்றையாயுள்ள பெற்றோருக்கும் தகப்பனில்லாத பிள்ளைகளுக்கும் நன்மைபயக்கும் ஊக்கமூட்டுதலும் அளிக்கப்படும்.
3 மேலும், சனிக்கிழமையன்று, புதிதாய் ஒப்புக்கொடுத்துள்ள ஆட்கள், முழுக்காட்டுதலின்பேரில் வேதப்பூர்வ பேச்சைக் கேட்ட பின்பு முழுக்காட்டப்படுவதற்கு வாய்ப்பிருக்கும். இந்த வட்டார மாநாட்டில் முழுக்காட்டப்படும்படி திட்டமிடுவோர், முழுக்காட்டப்படுவதற்குரிய கேள்விகளைத் தங்களோடு ஆலோசிப்பதற்குச் சபையின் நடத்தும் கண்காணி மூப்பர்களை ஏற்பாடு செய்ய போதிய நேரம் அவருக்கு இருக்கும்படி, சபையின் நடத்தும் கண்காணியினிடம் தங்கள் விருப்பத்தைக் கூடிய சீக்கிரம் தெரிவிக்க வேண்டும்.
4 ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ச்சிநிரல், நாம் கடவுளுடைய வார்த்தைக்கு ஒத்திசைந்திருப்பதால் உலகத்திலிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும் வழிகளை ஆராயும். நம்முடைய தோற்றத்தின் முக்கியத்துவமும் நம்முடைய மனதைக் கறைப்படுத்துவதிலிருந்து எவ்வாறு தவிர்ப்பதென்பதும் ஆராயப்படும் பேச்சுப் பொருள்களுக்குள் அடங்கியிருக்கும். பிற்பகல், மாவட்ட கண்காணி, “எது பைபிளை நம்பத்தக்கதெனக் குறித்துக் காட்டுகிறது?” என்ற தலைப்பைக்கொண்ட பொதுப்பேச்சைக் கொடுப்பார். அக்கறைகாட்டும் எல்லா ஆட்களையும் இந்தச் சிறந்த நிகழ்ச்சிநிரலுக்கு வரும்படி அழைக்க நிச்சயமாயிருக்கும்படி நாம் விரும்புகிறோம்.
5 இந்த வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல் நடக்கும் தேதிகளையும் இடங்களையும் உங்கள் வட்டாரக் கண்காணி உங்களுக்குத் தெரிவிப்பார், கடவுளுடைய வார்த்தையின் அறிவுரையை ஏற்று, பயன்படுத்தி, அதிலிருந்து பயனடைவதற்கு ஆஜராயிருக்கும்படி எல்லாரையும் நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம்.—யாக். 1:22-25.