கேள்விப் பெட்டி
● நாம் நம்முடைய பிரசுரங்களை நல்ல பலன்தரும் விதத்தில் உபயோகிக்க விரும்புவதால், தெரு ஊழியத்தில் பிரசுரங்களை அளிக்கையில் எந்த முறை அதிக உதவியானதாக இருக்கும்?
தெரு ஊழியம் செய்கையில், நம்முடைய கையில் பத்திரிகைகளோடு அல்லது பிரசுரங்களோடு ஜனங்களை அணுகுவது பொருத்தமானதாயிருக்கிறது. ஜனங்களோடு ஒரு சம்பாஷணையைக் கொண்டிருக்க முயற்சி செய்வது நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். நாம் சந்தித்த நபர் அக்கறையுள்ளவராக இருக்கிறாரா என்பதையும், நம்முடைய பத்திரிகைகளை வாசிப்பதற்கு விரும்புவாரா என்பதையும் நாம் அந்த விதத்தில் முடிவு செய்யலாம். ஒரு பத்திரிகையில் இருக்கும் கட்டுரைகளில் ஒன்றை சுருக்கமாக கலந்தாலோசிப்பதற்கு முடியுமானால் அது சிறந்ததாக இருக்கும். நம்முடைய வேலை மனமுவந்து செய்யப்படுகிறவர்களால் செய்யப்படுகிறது என்பதையும் வாணிகத் தொடர்புடைய வியாபாரம் அல்ல என்பதையும் விளக்குவது நல்லது. சில சந்தர்ப்பங்களில் பத்திரிகையில் உள்ள பொருளடக்கத்தையும், நன்மைகளையும் பற்றி சம்பாஷித்துக் கொண்டே ஒரு பிரஸ்தாபி அந்த நபரோடு கூட நடந்து செல்ல வேண்டியதாயிருக்கும்.
என்றபோதிலும், நாம் பகுத்தறிகிறவர்களாகவும், பிறர் நலத்தை எண்ணிப் பார்க்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். தெருக்களில் நாம் சந்திக்கும் அநேகர் அதிக அவசரமாகச் செல்வதால் அவர்களுடைய அக்கறையை கண்டுபிடிப்பது நமக்கு கடினமாயிருக்கும். அப்பேர்ப்பட்ட சமயங்களில் அவர்கள் நம்மை மறுபடியுமாக சந்திக்கையில் ஒரு கலந்தாலோசிப்புக்காக இடையில் நிற்க முடியும்போது நம்முடைய பிரசுங்களுக்கான அவர்களுடைய பசியைத் தூண்டுவதற்கு வெறுமென ஒரு துண்டுப்பிரதியை அளிப்பது மேலானதாயிருக்கும்.
குறிப்பிட்ட இடங்களிலும் நேரங்களிலும் நிலையாக தெரு ஊழியம் செய்தால் ஜனங்கள் நம்மோடு அறிமுகமாவார்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் இருக்கும் போது விஷயங்களை கலந்தாலோசிக்க சந்தோஷப்படுவர். இதன் மூலம் அவர்களுடைய அக்கறையை நிர்ணயிப்பதற்கு நமக்கு போதுமான நேரம் தருவர்.
நாம் நம்முடைய பிரசுரங்களை ஞானமாக உபயோகிக்க விரும்புவோம். ஆகையால், பிரசுரங்களை அளிப்பதற்கு ஒரு பொருத்தமான நேரத்தை தேர்ந்தெடுக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம் அவ்வாறு செய்வதன் மூலம், அக்கறையை தொடர்வதற்கு நாம் ஏற்பாடு செய்ய முடியும். நம்முடைய வேலையின் தன்மையைப் பற்றி விளக்குவதற்கும் நேரம் இருக்கும்.