உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/92 பக். 3
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1992
  • இதே தகவல்
  • பல மொழி பிராந்தியத்தில் பிரசுரங்களை அளித்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—2003
  • நம்முடைய பிரசுரங்களை நீங்கள் மதிக்கிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • முன்நின்று வழிநடத்தும் கண்காணிகள்—ஊழியக் கண்காணி
    நம் ராஜ்ய ஊழியம்—1998
  • நம் பைபிள் பிரசுரங்களை ஞானமாக உபயோகியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2005
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1992
km 8/92 பக். 3

கேள்விப் பெட்டி

▪ புத்தக மற்றும் பத்திரிகை துறைகளைக் கையாளும் உதவி ஊழியர்களின் வேலையை ஊழியக் கண்காணி எவ்வாறு கண்காணிக்கலாம்?

ஊழியக் கண்காணியின் அக்கறைக்குரிய செயலெல்லை மாதந்தோறும் புத்தகப் படிப்பு தொகுதிகளைச் சந்தித்து வெளி ஊழியத்துக்கான தவறாத கூட்டங்களை ஏற்பாடு செய்வதோடு மட்டுப்படுத்தப்பட்டில்லை. இந்த ஆர்வமுள்ள மூப்பர் சபையின் நியமிக்கப்பட்ட பிராந்தியத்தில் பிரசங்க ஊழியத்தின் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய எல்லாவற்றிலும் ஆழ்ந்த அக்கறையுடையவர்.

ஒவ்வொரு மாதமும் அதற்குரிய அளிப்புக்குத் தேவைப்படும் புத்தகங்களும் பத்திரிகைகளும் வழங்குவதற்குத் தயாராய்ப் போதியளவு கையிருப்பில் வைத்திருக்கும்படியும் அவை மிக நல்ல நிலையில் இருக்கும்படியும் கவனிக்க அவர் நிச்சயப்படுத்திக்கொள்வார். இந்த நோக்கத்துடன் அவர், புத்தகம் மற்றும் பத்திரிகை துறைகளைக் கையாளும்படி நியமிக்கப்பட்ட உதவி ஊழியர்களின் பொறுப்புகள் பலவற்றை மேற்பார்வையிடுகிறார்.

வரவிருக்கும் புத்தக அளிப்புகளைப்பற்றிய அறிவிப்புகள் நம் ராஜ்ய ஊழியத்தில் தோன்றுகையில் ஊழியக் கண்காணி அவற்றிற்கு முக்கியமாய்க் கவனம் செலுத்துகிறார். பயன்படுத்துவதற்குப் போதிய அளவில் புத்தகங்கள் கிடைக்கக்கூடியதாய் இருக்கும்படி நிச்சயப்படுத்திக்கொள்ள அவரும் புத்தக இலாகாவைக் கவனிக்கும் சகோதரனும் நெருங்க ஒன்றுசேர்ந்து உழைக்கின்றனர், ஆனால் மட்டுக்குமீறி தருவிக்காதபடி கவனமாயிருக்க வேண்டும். ஒரு பிரசுரம் வெளி ஊழியத்தில் முதல் தடவையாகப் பயன்படுத்தப்படவிருக்கிறதெனில் அல்லது அது சபையில் சீக்கிரத்தில் படிக்கப்படவிருக்கிறதெனில், சங்கத்துக்கு ஆர்டர் அனுப்புகையில் இந்தக் காரியங்களைக் கருதவேண்டும். அந்தப் புத்தகம் முன்னால் அளிக்கப்பட்டிருக்கிறதென்றால், அது கடைசியாக அளிக்கப்பட்ட சமயத்திற்குரிய சபை வெளி ஊழிய அறிக்கை, கையிருப்பிலுள்ள புத்தகங்கள் போதியவையாக இருக்குமாவெனக் குறிப்பாய்த் தெரிவிக்கும். அந்த மாதம் துணைப்பயனியர்களாகச் சேவிக்கும் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை அதோடு அந்தப் புத்தகம் கடைசியாக அளிக்கப்பட்டது முதற்கொண்டு பிரஸ்தாபிகளின் மற்றும் ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி போன்ற இத்தகைய காரியங்களுக்கும் நிச்சயமாகவே கவனம் செலுத்தப்பட வேண்டும். சபைக் கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் புத்தகங்கள் கிடைக்கக்கூடியவையாக இருக்க வேண்டும். புத்தகங்களைக் கொண்ட அட்டைப் பெட்டிகளை ஈரமில்லாத, சுத்தமான இடத்தில் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அடுக்கி சேமித்து வைக்க வேண்டும்.

பத்திரிகை துறையைக் கவனிக்கும் சகோதரனுடனும் ஊழியக் கண்காணி ஒத்துழைப்பார். அவ்வப்போது, ஊழியக் கண்காணியும் பத்திரிகைகளைக் கையாளும் அந்தச் சகோதரனும் தருவிக்கப்பட்ட பத்திரிகைகளின் எண்ணிக்கையை ஊழியத்தில் உண்மையில் அளிக்கப்பட்ட பத்திரிகைகளின் எண்ணிக்கையோடு ஒத்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை சில பிரஸ்தாபிகள், பத்திரிகைகள் அளிக்கப்படாமல் தங்கள் வீடுகளில் அதிகமாய்ச் சேர்ந்துகொண்டு வருவதால் தாங்கள் வேண்டுமென குறிப்பிட்ட பத்திரிகை எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். பத்திரிகைகள் வீணாக்கப்படக்கூடாது.

இதே நியமங்களை மனதில் கொண்டு, ஊழியக் கண்காணி புத்தக ஆர்டர் பாரத்தில் (S-14) சபை தருவிக்கும் புத்தக அளிப்புக்குத் தேவைப்படும் புத்தகத் தொகையை தான் நேரில் தணிக்கை செய்ய வேண்டும். பின்பு அவர் அந்த பாரத்தை சபை செயலாளரிடம் கொடுப்பார். இவர் அந்தச் சீட்டின் மீதிபாகத்தைக் கவனமாய்த் தணிக்கை செய்வார், வரிசையாகக் குறித்துள்ள கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் கையிருப்பு புத்தகங்களின் எண்ணிக்கைக்கு முக்கியமாய்க் கவனம் செலுத்துவார்.

நிச்சயமாகவே, புத்தக மற்றும் பத்திரிகை துறைகளைச் சரியானபடி கவனிப்பதற்கு ஓரளவான எழுத்து வேலை தேவைப்படுகிறது. பாரங்களைத் தாங்கள் பயன்படுத்துவது மற்றும் பதிவுகள் வைப்பது சம்பந்தப்பட்டதில் நியமிக்கப்பட்ட சகோதரர்களுக்குச் சந்தேகங்கள் இருந்தால், இந்த வேலை அம்சத்தில் உதவிசெய்ய செயலாளர் மகிழ்ச்சியடைவார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்