தேவராஜ்ய செய்திகள்
அங்கோலா: மகத்தான அதிகரிப்புத் தொடர்ந்து அறிக்கைசெய்யப்படுகிறது. ஜூலை மாதத்தில் புதிய உச்சநிலையாக 18,911 பிரஸ்தாபிகள் இருந்தனர், 6,075 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன.
ஆஸ்திரேலியா: ஆகஸ்ட் மாதத்தில் 57,272 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை எட்டியது. அவர்களுடைய முந்தைய உச்சநிலைக்கு மேலாக ஊழிய ஆண்டை 1,541 பிரஸ்தாபிகளோடு முடித்துக்கொண்டது. எப்பொழுதையும் விட இம்முறை 31,712 பைபிள் படிப்புகள் அறிக்கைசெய்தது அதிகமாயிருக்கிறது.
சைப்ரஸ்: ஊழிய ஆண்டில் 1,433 அறிக்கை செய்தது பிரஸ்தாபிகளின் எட்டாவது உச்சநிலையை ஆகஸ்ட் மாதம் கொண்டுவந்தது. இது கடந்த வருடத்தின் சராசரியோடு 9 சதவீத அதிகரிப்பாகும்.
டொமினிகன் குடியரசு: ஆகஸ்ட் மாதத்தில் 15,418 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தது கடந்த ஊழிய ஆண்டைவிட 20 சதவீத அதிகரிப்பை அவர்கள் அடைந்தனர். முழுநேர ஊழியத்தில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட பிரஸ்தாபிகள் இருக்கின்றனர்.
கானா: கடந்த வருட பிரஸ்தாபிகளின் சராசரி எண்ணிக்கையைவிட 18 சதவீத அதிகரிப்பை அடைந்தது, வெளி ஊழியத்தில் 37,676 நபர்கள் அறிக்கை செய்தனர்.
மியான்மார்: ஜூலை மாதம் 1,958 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை அடைந்தது.
பியூர்டோ ரிகோ: ஆகஸ்ட் மாதத்தில் புதிய உச்சக்கட்டமாக 25,315 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தனர்.