உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/93 பக். 7
  • ஒரு நல்ல ஊழிய சிலாக்கியம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு நல்ல ஊழிய சிலாக்கியம்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
  • இதே தகவல்
  • நம் பத்திரிகைகளை மிக நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • பத்திரிகை மார்க்கத்தின் மூலம் “ராஜ்ய விதை விதைத்தல்”
    நம் ராஜ்ய ஊழியம்—1998
  • பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க உதவும் பத்திரிகை மார்க்கம்
    நம் ராஜ்ய ஊழியம்—2014
  • ஊழியத்தில் பத்திரிகைகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2005
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 4/93 பக். 7

ஒரு நல்ல ஊழிய சிலாக்கியம்

1 கல்லூரியில் இருந்த ஆறு வருட காலத்தின்போது இருந்ததைவிட காவற்கோபுரம், விழித்தெழு! படிப்பதன் மூலம் உண்மையான மதிப்பை அதிகமாய் கற்றதாக ஒரு வாசகர் சொன்னார். இந்தப் பத்திரிகைகளை மிகக்குறுகிய காலம் படித்தப் பிறகு உண்மைமனமுள்ள வாசகர்கள் அப்படிப்பட்ட இருதயத்துக்கு அனலான போற்றுதல் வார்த்தைகளைச் சொல்வது அசாதாரணமல்ல. நம்முடைய பத்திரிகைகளை உண்மையிலேயே மதிக்கக்கூடிய ஆட்களோடு அவற்றைப் பகருவது எத்தகைய சிலாக்கியம்!

2 அநேகர் சத்தியத்தின்பேரில் ஒருவாறு அக்கறைகொண்டிருந்தாலும் ஒரு வீட்டுப் பைபிள் படிப்பைக் கொண்டிருக்கும் அளவுக்கு முன்னேற்றம் செய்வதில்லை. ஆனால் யாராவது காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய பத்திரிகைகளுடைய ஒவ்வொரு புதிய இதழோடு அவர்களை ஒழுங்காகச் சென்று சந்தித்தால் அவர்களுடைய அக்கறையை வளர்க்கலாம். ஆம், ஒரு பத்திரிகை மார்க்கம் மூலம் பத்திரிகைகளை உண்மையோடு சென்று கொடுப்பது, ஓர் ஒழுங்கான பைபிள் படிப்புக் கொண்டிருக்கும் உந்துவித்தலைப் பெறுவதற்கு அநேகரை முடிவில் உதவியிருக்கிறது.

3 ஒரு பத்திரிகை மார்க்கத்தைக் கொண்டிருப்பதன் மூலம் முதலில் நாம்தானே பத்திரிகைகளை வாசித்து நம்முடைய பட்டியலில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் விசேஷ அக்கறைக்குரிய திட்டவட்டமான குறிப்புகளைக் குறித்துவைத்தோமேயானால் தனிப்பட்டவர்களாக நாம்தானே பயனடைவோம்.

4 பத்திரிகைகளை முதல் முறை பெறும்போது ஒருவர் அக்கறை காட்டுவாரேயானால், முனைப்பான கட்டுரைகள் நம்முடைய பத்திரிகைகளில் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் வருகிறது என்றும் அவற்றை எடுத்துவந்து கொடுக்க நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்றும் அவருக்கு நீங்கள் விளக்கலாம். ஒழுங்காக அவரைத் திரும்பவும் சென்று சந்திப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள், பைபிள் விஷயங்களின்பேரில் வீட்டுக்காரரோடு சம்பாஷிக்க கிடைக்கும் வாய்ப்புகளைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். இந்த நல்ல ஊழிய சிலாக்கியத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்