அக்கறை காண்பித்தவர்களுக்குக் கவனஞ்செலுத்துங்கள்
1 நம்முடைய பத்திரிகைகளையும் மற்ற தேவராஜ்ய பிரசுரங்களையும் நாம் விநியோகிக்கும்போது, இயேசு கிறிஸ்து அறிவித்த செய்தியை நாம் பரந்தளவில் பரப்பிக்கொண்டிருக்கிறோம். ஆகவே அக்கறை காட்டுகிற அனைவரையும் மீண்டும் சந்திப்பதற்கு நாம் விசேஷித்த முயற்சிசெய்ய வேண்டும்.
2 நீங்கள் வீட்டுக்காரருக்கு அக்கறையூட்டிய ஒரு விசேஷித்த கட்டுரையை விழித்தெழு!-விலிருந்து சிறப்பித்துக்காட்டியிருந்தால், திரும்பிச்செல்லும்போது அந்தக் கட்டுரையிலிருந்து கூடுதலான குறிப்புகளை விரிவுபடுத்துங்கள். உங்களுடைய சம்பாஷணையை ஒரு முக்கிய வசனத்தை, ஒருவேளை ஒன்றிரண்டு பாராவை மையமாகச் சுற்றியே அமையுங்கள். அக்கறை தொடருமானால், முழுக் குடும்பத்துக்கும் விழித்தெழு! பயனளிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுங்கள். ஒவ்வொரு வெளியீடும் சுற்றுப்புறச்சூழல், தன்னையே முன்னேற்றுவித்தல், இன்றைய பிரச்னைகளைச் சமாளித்தல், மேலும் இளைஞருக்கு அக்கறையூட்டுகிற கேள்விகள் போன்ற பலதரப்பட்ட பொருள்களை ஆராய்கிறது. உண்மையான அக்கறை காட்டப்படும்போது, சந்தா மூலமாக விழித்தெழு! கிடைக்கிறது என்பதையும் ஒரு வருட காலத்தில் 12 இதழ்களை அவர் பெறக்கூடும் என்பதையும் வீட்டுக்காரருக்குத் தெரியப்படுத்துங்கள்.
3 வீட்டுக்காரர் தற்போதைய விழித்தெழு! வெளியீட்டிலுள்ள எந்தக் கட்டுரைகளிலும் அக்கறை கொள்ளவில்லையென்றால் அப்போது என்ன? சம்பாஷணையை முடித்துக்கொள்வதற்குப் பதிலாக, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் 206-வது பக்கத்திலுள்ள தகவலைப் பயன்படுத்துவதன் மூலம் வீட்டுக்காரருக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையைப்பற்றி அதிகத்தைக் கற்றுக்கொடுப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் அனுகூலப்படுத்திக்கொள்ளலாம்.
4 நீங்கள் 2 தீமோத்தேயு 3:1-5-ஐ உபயோகித்து பத்திரிகையின் 2-வது பக்கத்திலுள்ள தகவலைச் சிறப்பித்துக் காட்டுவதன்மூலம் “காவற்கோபுரம்” இதழை முன்பு அளித்திருந்தால், திரும்பிச்செல்லும்போது நீங்கள் இதுபோன்று ஏதாவது சொல்லலாம்:
◼ “நம்முடைய முந்திய சம்பாஷணையின்போது, இன்றைக்கு இந்த உலகில் நம்மைச்சுற்றி நடந்துகொண்டிருக்கிற காரியங்களின் அர்த்தத்தைப்பற்றி நாம் கலந்தாலோசித்தோம். அநேக மக்கள் கடவுளிலும் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கைக்கான அவருடைய தராதரங்களிலும் அக்கறையை இழந்துவிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இரண்டு தீமோத்தேயு 3:1-5-லுள்ள வேதவசனத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறபடி, ஒருவருக்கொருவரிடமாகவுள்ள மக்களின் மனப்பான்மையை இது பேரளவில் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது. எதிர்காலத்தில் மேம்பட்ட நிலைமைகளை எதிர்நோக்கியிருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது என்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?” குறிப்புச்சொல்ல அனுமதித்தப் பிறகு, நீங்கள் 2 பேதுரு 3:13-க்கு கவனத்தைத் திருப்பலாம். பின்னர் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 227-33-க்குத் திருப்பி, ராஜ்யம் மனிதவர்க்கத்திற்கு எதைச் செய்யும் என்பதைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
5 மறு சந்திப்பின்போது, வீட்டுக்காரர் தன்னுடைய மதத்தைக்குறித்து கலந்தாலோசிப்பது மிகவும் தனிப்பட்ட விஷயம் என்று உணர்ந்தவராய் அதைக்குறித்துக் கலந்தாலோசிக்க விருப்பமற்றிருப்பதை நீங்கள் பகுத்துணரக்கூடும். நீங்கள் இதுபோன்று ஏதாவது சொல்லலாம்:
◼ “என்றும் வேகமாகிவரும் பயணம் மற்றும் செய்தித்தொடர்பின் காரணமாகக் குறுகிவருகிற ஓர் உலகிலுள்ள அநேக மதங்களினால், பலவித நம்பிக்கைகளின் பாதிப்பை நாம் விரும்பினாலுஞ்சரி விரும்பாவிட்டாலுஞ்சரி, உலகெங்கிலும் உணருகிறோம். ஆகவே, ஒருவருக்கொருவருடைய கருத்துக்களைப் புரிந்துகொள்வது வித்தியாசமான நம்பிக்கைகளுடைய மக்களுக்கிடையே அதிக அர்த்தமுள்ள பேச்சுத்தொடர்புக்கு வழிநடத்தலாம். மத சம்பந்தமான நம்பிக்கைகளின் அடிப்படையிலான பகைமை சிலவற்றை அது அழிக்கலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” குறிப்புச்சொல்ல அனுமதித்தப் பிறகு, கடவுளுக்காக மனிதவர்க்கத்தின் தேடுதல் புத்தகத்திலுள்ள பொருளடக்க அட்டவணைக்கு வீட்டுக்காரரின் கவனத்தைத் திருப்புங்கள்.
6 சத்தியத்தில் அக்கறை காட்டுகிற அனைவரையும் நாம் மீண்டும் சந்திப்பதற்கு எல்லா முயற்சியையும் செய்து, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற பாதையில் செல்ல அவர்களுக்கு உதவிசெய்வோமாக.—யோவான் 4:23, 24.