கடவுளுடைய சமாதான ராஜ்யத்தில்அக்கறையை வளருங்கள்
1 பிப்ரவரி மாதத்தின்போது, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை நாம் சிறப்பித்துக் காண்பித்துக்கொண்டிருப்போம். நம்முடைய நோக்கம், நேர்மை இருதயமுள்ள மக்கள் கடவுளுடைய ராஜ்யத்திற்கும் அது என்ன சாதிக்கும் என்பதற்கும் போற்றுதலை வளர்க்க உதவிசெய்வதாக இருக்கவேண்டும். இதைச் செய்வதற்கு நோக்குநிலைக் கேள்விகள் நமக்கு உதவக்கூடும்.
2 சிநேகப்பான்மையான வாழ்த்துக்கூறிய பிறகு, நாம் இதுபோன்ற ஒன்றைச் சொல்லலாம்:
◼ “அரசாங்கத்தில் திடுக்கிடச்செய்யும் மாற்றங்கள் பூமி முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன, மேலும் சமாதானத்திற்கான குறிக்கோள் பற்றி அடிக்கடி சொல்லப்படுகிறது. உண்மையான சமாதானம் எப்பொழுதாவது அடையப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [குறிப்புச்சொல்ல அனுமதியுங்கள்.] சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு மனித ஆட்சியாளர்களை அநேகர் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி இருக்கிறபோதிலும், சமாதானத்தைக் கொண்டுவருவதைக் குறித்து சங்கீதம் 46:9-ல் குறிப்பிட்டபடி, கடவுள் எவ்வாறு வாக்குறுதியளிக்கிறார் என்பதைக் கவனியுங்கள். [வாசியுங்கள்.] கடவுளுடைய செயல் பூமியின்மீது என்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [வீட்டுக்காரருடைய பிரதிபலிப்புக்குச் செவிகொடுத்து, பின்பு சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியைக் காட்டுங்கள்.] படம் மூலமாக இங்குக் காட்டப்பட்டுள்ளதை உங்களால் கற்பனைசெய்து பார்க்கமுடிகிறதா?” “கடவுளுடைய புதிய உலகத்தில் வாழ்க்கை” என்ற உபதலைப்பின்கீழுள்ள தகவலைக் கலந்தாலோசியுங்கள். சூழ்நிலைமை அனுமதிக்குமானால், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 227-32-ல், “கடவுளுடைய ராஜ்யம் நிறைவேற்றவிருப்பவை என்ன?” என்ற கேள்வியின்கீழுள்ள கூடுதலான தகவல் கலந்தாலோசிக்கப்படலாம். அல்லது என்றும் வாழலாம் புத்தகத்திலுள்ள 13-ம் அதிகாரத்திற்கு வீட்டுக்காரருடைய கவனத்தைத் திருப்பி, அதை நேரடியாக அளிக்கலாம். பின்வருமாறு கேட்பதன்மூலம் கலந்தாலோசிப்பை நாம் முடித்துக்கொள்ளலாம்: “கடவுளால் ஆளப்படும் ஓர் அரசாங்கம் இந்த மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” வீட்டுக்காரர் அக்கறைகாட்டுவாராகில், மறுசந்திப்புக்காக ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
3 அல்லது நாம் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நாம் அனைவரும் அன்றாடம் கையாள வேண்டிய தொல்லைப்படுத்துகிற பிரச்னைகளைப் பற்றி அதிகமான கவலை தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுதலைப்பெற ஏதாவது நம்பிக்கையிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [குறிப்புச்சொல்ல அனுமதியுங்கள்.] நம்முடைய கஷ்டமான சூழ்நிலைமையைக் குறித்து கடவுளுக்கு அக்கறை இல்லை என்று சிலர் உணரலாம். என்றாலும், வெளிப்படுத்துதல் 21:3, 4-ல் அவர் என்ன வாக்குறுதியளிக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.” வசனங்களை வாசியுங்கள். இத்தருணத்தில், என்றும் வாழலாம் புத்தகத்தை அல்லது இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற துண்டுப்பிரதியை முக்கியப்படுத்திக் காண்பிக்கலாம். துண்டுப்பிரதி அளிக்கப்பட்டால், பக்கங்கள் 2 மற்றும் 3-ல், “இந்த உலகின் எதிர்காலம்” என்ற தலைப்பின்கீழ் உள்ளதைக் கலந்தாலோசிக்கலாம். கூடுமானால், என்றும் வாழலாம் புத்தகத்தை அப்பொழுதே, ஒருவேளை “கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்?” என்ற கேள்வியை எழுப்பிய பிறகு அளியுங்கள். அந்தப் புத்தகத்திலுள்ள அதிகாரம் 11-ஐ சுட்டிக்காட்டி, இதன்பேரில் மறுமுறை சந்தித்துக் கலந்தாலோசிக்க ஏற்பாடுசெய்யுங்கள்.
4 வீட்டுக்காரர் அதிக வேலையாக இருப்பாராகில், தெரிவுசெய்யப்பட்ட ஒரு கட்டுரையிலுள்ள திட்டவட்டமான குறிப்பு ஒன்றின்பேரில் குறிப்புரை வழங்குவதன்மூலம் தற்போதைய பத்திரிகைகளிலிருந்து ஒரு கட்டுரையை சுருக்கமாக முக்கியப்படுத்திக் காண்பிக்க நீங்கள் தெரிந்தெடுக்கலாம்.
நீங்கள் ஒருவேளை இவ்வாறு சொல்வதன்மூலம் பத்திரிகையை அறிமுகப்படுத்தலாம்:
◼ “அந்தப் பொருளின்பேரில் இந்தக் கட்டுரை அதிக விளக்கமாகச் சொல்லுகிறது. [முன்னதாகவே தெரிவுசெய்யப்பட்ட ஒன்றிரண்டு வாக்கியத்தை வாசியுங்கள்.] உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் உற்சாகமளிப்பதாய் இருக்கும் கூடுதலான கருத்துக்களை இந்தக் கட்டுரை கொடுக்கிறது. இந்தப் பேச்சுப் பொருளில் நீங்கள் அக்கறையுள்ளவர்களாய் இருப்பதாகத் தெரிகிறது, ஆதலால் இந்தப் பிரதியையும் இதனுடைய கூட்டுப் பத்திரிகையையும் இரண்டும்சேர்த்து 6.00 ரூபாய் நன்கொடைக்கு விட்டுச்செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”
5 மனிதவர்க்கம் எதிர்ப்படுகிற பிரச்னைகளுக்கான பதில்களுக்கு எங்கே போவது என்பதை அறியவரும்போது இன்று மக்கள் பெரும்பாலும் குழப்பமடைகிறார்கள். எதிர்காலத்திற்கான ஒரு தெளிவான நம்பிக்கையை நாம் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சிலாக்கியத்தை உடையவர்களாய் இருக்கிறோம். (அப். 17:27) அப்படியானால், மக்களுடைய கவனத்தை சமாதானத்தின் உண்மை ஊற்றுமூலமாகிய கடவுளுடைய ராஜ்யத்திற்கு நாம் ஊக்கத்துடன் திருப்புவோமாக.