புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல்
1 1995-க்கான நம்முடைய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல், “தொடர்ந்து சத்தியத்திற்கு சாட்சிபகருங்கள்” என்ற பொருளைச் சிறப்பித்துக் காண்பிக்கும். முழு நிகழ்ச்சிநிரலும், இயேசு நமக்காக விட்டுச்சென்ற மாதிரியின்பேரிலும் மற்றவர்களோடு சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எவ்வாறு அவர் பயன்படுத்திக்கொண்டார் என்பதன்பேரிலும் கவனத்தை ஒருமுகப்படுத்தும். இயேசுவின் சீஷர்களாக சத்தியத்திற்கு சாட்சிபகருவதில் அவரைப் பின்பற்றுவதற்கான நம்முடைய உத்தரவாதத்தை அது வலியுறுத்திக் காண்பிக்கும்.—1 கொ. 11:1.
2 சத்தியத்தை முன்னேற்றுவிப்பதில் சபை வகிக்கும் பாகம் சிந்திக்கப்படும். நம்முடைய பத்திரிகைகளையும் மற்ற பிரசுரங்களையும் நல்ல விதமாக பயன்படுத்திக்கொள்வதும்கூட அழுத்திக் காண்பிக்கப்படும்.
3 சிறப்புப் பேச்சாளரால் கொடுக்கப்படும் முக்கியமான பேச்சு, “சத்தியத்திற்கு சாட்சிபகருதல்—அது எதை நிறைவேற்றுகிறது” என்பதாக தலைப்பிடப்பட்டிருக்கிறது. (யோவா. 8:32) இந்த விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல் சத்தியத்திற்கான நம்முடைய போற்றுதலை நிச்சயமாகவே ஆழப்படுத்தி, ‘சத்தியத்தில் உறுதிப்படுத்தப்பட்டவர்களாய்’ நிலையாக தொடர்ந்திருக்க நம் அனைவருக்கும் உதவிசெய்யும்.—2 பே. 1:12; 1 கொ. 15:58.