நீங்கள் மீண்டும் அணியில் சேர்ந்துகொள்ள முடியுமா?
1 கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகம் முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான ஒழுங்கான பயனியர்கள் பயனியர் அணியிலிருந்து விலகுவதை அவசியமாக கண்டிருக்கின்றனர். அவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால், சந்தேகமில்லாமல் இந்தச் சிலாக்கியத்தை விட்டுவிலகுவதற்கு உங்களுக்குக் காரணமிருந்தது. ஒருவேளை அது உங்கள் சக்திக்குமீறிய, ஏதோ எதிர்பாராத ஒரு காரியமாக இருக்கலாம். நிலைமை அவ்வாறே இன்னுமிருக்கிறதா? உடல்நிலை, பண சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அல்லது குடும்பப் பொறுப்புகள் அதை நிறுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தால், உங்களுடைய சூழ்நிலைமைகள் முன்னேற்றமடைந்திருக்கின்றனவா? மீண்டும் ஒழுங்கான பயனியர் ஊழியத்தின் ஆசீர்வாதங்களை அனுபவித்துக்களிப்பதை அனுமதிக்கும் அளவிற்கு நீங்கள் சில நியாயமான சரிப்படுத்தல்களை செய்யக்கூடுமா? மீண்டும் விண்ணப்பிப்பதைப்பற்றி நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா?
2 நீங்கள் பயனியராக வெற்றிபெற வேண்டுமென்றால் நீங்கள் அறிந்திருக்கிற விதமாகவே, நல்ல ஏற்பாடும் கவனமான திட்டமிடுதலும் தேவைப்படுகின்றன. பொதுவாக, பொழுதுபோக்கிற்கு அதிக நேரம் இல்லாதபோதிலும், ஒரு பயனியரின் குறைந்த நேர ஓய்வு அடிக்கடி அதிக திருப்தி அளிப்பதாகவும் பலனளிப்பதாகவும் நிரூபிக்கும். (நீதி. 19:17; அப். 20:35) ஊழியத்தில் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதன்மூலம், உலகம் நாடித்தொடரும் தன்னல நாட்டமுடைய, சொகுசான வாழ்க்கைமுறையின் செல்வாக்கிலிருந்து உங்களைக் காத்துக்கொள்வீர்கள். நீங்கள் சுயதியாகம் செய்பவர்களாக, ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைப்பவர்களாக இருந்தால் உங்களை ஆவிக்குரிய விதமாக மிகுதியாய் ஆசீர்வதிப்பதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். நீங்கள் யெகோவாவின் சேவையில் முழு இருதயத்தோடு ஈடுபட்டிருப்பதன்மூலம் நிச்சயமாகவே மெய்யான சந்தோஷத்தையும் திருப்தியையும் அனுபவிப்பீர்கள்.—நீதி. 10:22; கொலோ. 3:23, 24.
3 விசேஷித்த சிலருக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிற சிலாக்கியமாக முழுநேர ஊழியத்தை நோக்க வேண்டுமா? இல்லை. நம்முடைய ஒப்புக்கொடுத்தலின் உறுதிமொழிக்கு இசைவாக, சூழ்நிலைமை அனுமதிக்காதிருந்தால் தவிர, ஒவ்வொரு கிறிஸ்தவரும் முழுநேர சேவையைக் குறித்து கருத்தார்ந்த விதத்தில் சிந்திக்கவேண்டும்.—மாற். 12:30.
4 உங்கள் உடல்நலமும் வேதப்பூர்வ உத்தரவாதங்களும் தெளிவாகவே தற்போது பயனியர் செய்ய அனுமதிக்கவில்லை என்றால், யெகோவா அதை அறிந்துகொண்டும், புரிந்துகொண்டும் இருக்கிறார் என்பதில் நிச்சயமாயிருங்கள். உங்கள் சூழ்நிலைமைகள் அனுமதிப்பதற்கேற்ப உங்கள் உண்மைத் தன்மைக்கு அவர் பலனளிப்பார். (1 கொ. 4:2; 2 கொ. 8:12) எனினும், இப்போது மீண்டும் பயனியர் செய்வது சாதகமாக இருப்பதாக தோன்றினால், நடத்தும் கண்காணியை அணுகி ஏன் ஒரு விண்ணப்பத்திற்காக கேட்கக்கூடாது?
5 உங்கள் குடும்பம் உதவக்கூடுமா? குடும்பப் பொறுப்புகளை கவனிக்க வேண்டிய தேவையிருந்த காரணத்தால் நீங்கள் அணியிலிருந்து விலகியிருக்கலாம். மற்ற குடும்ப அங்கத்தினர்கள் தற்போது உதவக்கூடிய நிலையில் இருந்தால் நீங்கள் மீண்டும் பயனியர் வேலை செய்யத் துவங்குவது கூடியகாரியமா? சிலருக்கு, குறிப்பிட்ட உத்தரவாதங்களை கவனிப்பதில் சிறிது உதவி, பயனியர் ஊழியத்தை மீண்டும் செய்யமுடிந்ததாக்கலாம்.
6 நல்ல ஒத்துழைப்பும் மற்ற குடும்ப அங்கத்தினர்களின் பங்கில் கொஞ்சம் கூடுதல் முயற்சியும் இதைக் கூடியகாரியமாக்கலாம். பண சம்பந்தமாக அல்லது போக்குவரத்து வசதியின்மூலமாக, அதோடுகூட ஊழியத்தில் ஒழுங்காக உடன்சேர்ந்து வேலை செய்வதற்கு திட்டம் செய்வதன்மூலமாக உதவி அளிக்கப்படலாம். பெரும்பாலும், அவர்கள் உதவுவதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. இந்த ஊழிய சிலாக்கியத்தை மீண்டும் தொடருவதற்கு சூழ்நிலைமைகள் அனுமதிக்கவில்லையென்றால், ஒருவேளை இப்படிப்பட்ட உதவியை பயனியர் செய்யமுடிந்த மற்ற குடும்ப அங்கத்தினருக்குக் கொடுக்கலாம்.
7 குடும்பமாக ஏன் இந்தக் காரியத்தை கலந்தாலோசிக்கக்கூடாது? ஐக்கியமாக திட்டமிட்டால் விளைவுகள் பலனளிப்பதாயிருக்கும். அணிகளில் மற்றொரு பயனியர் சேர்க்கப்பட்டால் முழுக் குடும்பமும் தாங்களும் ஒரு பங்கைக் கொண்டிருப்பதாக சரியாகவே உணரலாம். இப்படிப்பட்ட உதாரகுணம் பிராந்தியத்தில் ராஜ்ய சாட்சியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தை ஆவிக்குரிய விதமாக நெருங்கிவரவும் செய்யும்.—லூக். 6:38; பிலி. 2:2-4.