என்றும் வாழலாம் புத்தகத்தில் அக்கறையை வளர்த்தல்
1 நாம் மக்களை அவர்களுடைய வீடுகளில் சந்திக்கும்பொழுது, அவர்கள் ‘உலகக்கவலைகளில்’ ஆழ்ந்திருக்கிறதையே நாம் பொதுவாக காண்கிறோம். (மாற். 4:18) சிந்தனையைத் தூண்டும் பிரசங்கத்தினால் அவர்களுடைய அக்கறையைக் கவரவேண்டிய சவாலை நாம் எதிர்ப்படுகிறோம். ஆரம்பத்தில், பெரும்பாலானோர் நாம் சொல்லுகிற செய்தியில் அக்கறை காட்டுவதில்லை. அவர்களுடைய வாழ்க்கையைத் தொடுகிற ஒன்றை நாம் சொல்லக்கூடுமானால், ராஜ்ய செய்தியில் ஓரளவு அக்கறையை நாம் தூண்டுவிக்க முடியும். சம்பாஷணைகளை ஆரம்பிப்பதற்கான ஒரு திறவுகோலானது என்றும் வாழலாம் புத்தகத்திலிருந்து கவனத்தைக் கவருகிற பேச்சுக் குறிப்புகளைத் தெரிந்தெடுப்பதாகும். நீங்கள் என்ன சொல்லலாம்?
2 நீங்கள் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தலாம்:
◼ “உங்களுக்கு வல்லமையிருந்திருந்தால், நம்முடைய நாளில் இருக்கிற வேதனைதரும் எந்தப் பிரச்சினையை நீங்கள் சரிசெய்வீர்கள்? [பதில்சொல்ல அனுமதியுங்கள், பொருத்தமாக இருந்தால், அநேக ஆட்கள் அதேபோல உணருகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.] இது வரையாக, உலகத் தலைவர்கள் இன்றைய அநேக குழப்பகரமான பிரச்சினைகளுக்கு பரிகாரங்களைக் கண்டுபிடிப்பதில் சிறிதளவு வெற்றியையே அடைந்திருப்பதாக தோன்றுகிறது. மனிதவர்க்கத்தை அல்லற்படுத்துகிற எல்லா பிரச்சினைகளையும் முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒருவர் இருக்கிறார், அவர் நிச்சயமாகவே அவற்றை முடிவுக்கு கொண்டுவருவார். சங்கீதம் 145:16-ல் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். [வசனத்தை வாசித்து, பக்கங்கள் 11-13-ல் உள்ள விளக்கப்படங்களைக் குறிப்பிட்டு காட்டுங்கள்.] பக்கம் 14-ல் உள்ள பாரா 14, நாம் இப்பொழுதுதானே கலந்தாலோசித்த அந்தக் கேள்வியை எழுப்புகிறது, மேலும் அது தொடர்ந்து கேட்பதாவது: ‘ஆனால் இது எப்பொழுது நடைபெறும்?’” இந்தப் புத்தகம் அந்தக் கேள்விக்கான பதிலையளிக்கும் என்பதை விளக்கிக்காண்பித்து, அதை 20 ரூபாய் நன்கொடைக்கு அளியுங்கள்.
3 அல்லது நீங்கள் இதுபோன்ற ஒன்றை சொல்லலாம்:
◼ “அன்பானவரை மரணத்தில் இழக்கும்போது வருகிற அந்த வெறுமையான உணர்ச்சியை ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம். அது உங்களைக் கவலைகொள்ளும்படியும் மிகவும் உதவியற்றவராயும் செய்திருக்கலாம். நீங்கள் இந்தக் கேள்விகளை யோசித்துப் பார்த்திருக்கலாம். [பக்கம் 76, பாரா 1-ல் உள்ள கேள்விகளை வாசியுங்கள்.] இந்தக் கேள்விகளுக்கான பதிலைப் பெற்றுக்கொள்வது ஆறுதலளிப்பதாய் இருக்குமல்லவா? மரித்தோருக்கான நிச்சயமான ஒரு நம்பிக்கையை பைபிள் அளிக்கிறது என்பதை அறிந்துகொள்வது உங்களுக்கு உற்சாகமளிக்கக்கூடும். [யோவான் 5:28, 29-ஐ வாசியுங்கள்.] மரித்தோருடைய நிலைமையையும் எதிர்காலத்திற்கான என்ன நம்பிக்கையிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்வதற்கு இந்தப் புத்தகம் நமக்கு உதவிசெய்கிறது.” அதிகாரங்கள் 8-ஐயும் 20-ஐயும் சுருக்கமாகச் சொல்லுங்கள். அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்க வீட்டுக்காரருக்கு ஒரு வாய்ப்பளித்து அந்த அளிப்பை செய்யுங்கள்.
4 சந்தர்ப்ப சாட்சிகொடுக்கும் வாய்ப்பை நீங்கள் எதிர்ப்படுவீர்கள் என்பதற்கு பலமான சாத்தியம் இருக்கிறது. அப்படியானால், நீங்கள் உங்களுடைய சொந்த வார்த்தைகளில் இதுபோன்ற ஒன்றை சொல்லலாம்:
◼ “உலகமானது இந்த நாட்களில் பிரச்சினைகளால் நிறைந்திருக்கிறது. சந்தேகமில்லாமல் உங்களுக்கும்கூட அவை இருக்கும். விசனகரமாக, அப்பாவி மக்களே அதிகமாக துன்பப்படுகிறார்களென தோன்றுகிறது. எல்லா துன்பத்துக்கும் கடவுள் எப்பொழுதாவது முடிவைக் கொண்டுவருவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] கடவுளைச் சேவிப்பவர்களுக்கு அவர் என்ன வாக்குக்கொடுக்கிறார் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். [சங்கீதம் 37:40-ஐ வாசியுங்கள், பின்பு என்றும் வாழலாம் புத்தகத்தை பக்கம் 99-க்கு திறங்கள்.] கடவுள் ஏன் துன்மார்க்கத்தை அனுமதித்திருக்கிறார் என்பதையும் அதை அவர் எவ்வாறு முடிவுக்கு கொண்டுவருவார் என்பதையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது.”
5 நீங்கள் ஓர் இளம் பிரஸ்தாபியாய் இருந்தால், பக்கங்கள் 156-8-ல் காணப்படுகிற விளக்கப்படங்களை ஆதாரமாகக்கொண்டு ஒரு பிரசங்கத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இவ்வாறு கேட்பதன்மூலம் நீங்கள் ஆரம்பிக்கலாம்:
◼ “இதுபோன்ற உலகில் வாழ நீங்கள் விரும்புகிறீர்களா? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] இந்த அழகிய படங்கள் ஒவ்வொன்றும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. [வேதவசன மேற்கோள்களைச் சுட்டிக்காண்பியுங்கள்.] இந்த முழு பூமியையும் ஒரு பரதீஸாக ஆக்குவதற்கான கடவுளுடைய வாக்குறுதியைப் பற்றி அதிகத்தைக் கற்றுக்கொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவிசெய்யக்கூடும். இதில் ஜீவனைக் காக்கும் விஷயம் அடங்கியிருக்கிறது, இதை வாசிப்பதற்கு அது எடுத்துக்கொள்ளும் நேரம் அதிக பயனுள்ளதாயிருக்கிறது.”—யோவா. 17:3.
6 அந்தப் புத்தகத்தை அளிக்கும்போது, நம்பிக்கையானவர்களாயும் ஆர்வமிக்கவர்களாயும் இருங்கள். அதில் அக்கறையை வளர்த்து, நம்முடைய அதிசயமான ராஜ்ய நம்பிக்கையை பகிர்ந்துகொள்ளுங்கள்.