என்றும் வாழலாம் புத்தகத்தைக்கொண்டு பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல்
1 மக்களிடமான அன்பானது, சத்தியத்திற்கான பசிதாகமுள்ளோருக்கு உதவிசெய்ய மீண்டும் செல்வதில் தவறாதவர்களாய் இருக்கும்படி நம்மை தூண்டுவிக்க வேண்டும். (மத். 5:6) நாம் காண்கிற எந்தவொரு அக்கறைத் தூண்டுதலும் குன்றிப்போவதை நாம் விரும்பவில்லையென்றால், அதைக் கவனித்து வளர்க்கவேண்டும். தயாரிப்பே வெற்றிக்கான திறவுகோலாகும்.
2 நம்முடைய இலக்கு பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதாக இருக்கவேண்டும். (மத். 28:20) என்றும் வாழலாம் புத்தகத்தின் ஆரம்ப பிரதிகளில் இந்தப் பின்வரும் அறிமுகக் குறிப்புகள் சேர்க்கப்பட்டிருந்தன: “இளைஞரோ முதியவரோ, அவர்களுடைய கல்வித்தரம் எதுவாக இருந்தாலும்சரி, ஒவ்வொருவருடனும் படிப்பதில் பயன்படுத்துவதற்கு இது உண்மையிலேயே ஒரு மிகச் சிறந்த புத்தகம்.” படிப்புகள் நடத்துவதை மிக எளிதாக்குகிற ஒரு முறையில் இது எழுதப்பட்டிருக்கிறது, புதிய பிரஸ்தாபிகளும்கூட ஒரு பங்கைக்கொண்டிருப்பதற்கு இது உதவிசெய்கிறது. புதிய படிப்புகளை ஆரம்பிப்பதில் நம்முடைய வெற்றியானது மறுசந்திப்புகள் செய்வதில் நம்முடைய திறம்பட்டதன்மையைப் பொறுத்திருக்கிறது.
3 நாம் எவ்வாறு படிப்புகளை ஆரம்பிக்கலாம்?: நாம் மீண்டும் செல்லும்போது, நம்முடைய முதல் சந்திப்பில் குறிப்பிட்ட ஏதோவொரு குறிப்பு அல்லது கேள்வியோடு நம்முடைய கலந்தாலோசிப்பை இணைத்துக்கொள்வது பொதுவாக நல்லதாகும். ஒருவேளை நீங்கள் மரித்தோருடைய நிலைமையை கலந்தாலோசித்து, “மரித்துப்போன நம்முடைய அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?” என்ற கேள்வியை விட்டுவந்திருக்கலாம். உயிர்த்தெழுதல் ஓர் ஆதாரமற்ற நம்பிக்கை அல்ல என்பதை விளக்கிக்கூறுங்கள்; ஏற்கெனவே சம்பவித்திருக்கிற எண்ணற்ற உயிர்த்தெழுதல்களைப் பற்றிய உதாரணங்களை பைபிள் பதிவுசெய்திருக்கிறது. பக்கங்கள் 167-9 வரையுள்ள விளக்கப்படங்களை மறுபார்வை செய்யுங்கள். பின்பு, பக்கம் 166-ல் உள்ள பாராக்கள் 1 மற்றும் 2-ல் சொல்லப்பட்டுள்ளதை கலந்தாலோசியுங்கள். அக்கறை காட்டினால், அதன்பேரில் கூடுதலாக கலந்தாலோசிப்பதற்கு மீண்டும் சந்திக்க விரும்புவதை தெரிவியுங்கள்.
4 பிள்ளைகளை வளர்ப்பதில் அதிகரித்துவருகிற பிரச்சினைகளை அனுபவித்ததைப் பற்றிய கவலையை தெரிவித்த ஒரு பெற்றோரிடம் நீங்கள் பேசியிருக்கலாம். உங்களுடைய சொந்த வார்த்தைகளில், இதுபோன்ற ஒன்றை நீங்கள் சொல்லலாம்:
◼ “எல்லா பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு மிகச் சிறந்ததை அளிக்க விரும்புகிறார்கள். அர்த்தமும் நோக்கமுமுள்ள திருப்தியளிக்கும் ஒரு வாழ்க்கையை கண்டுபிடிக்க பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு பயிற்றுவிப்பதற்கு உதவியளிக்கக்கூடிய போதனை பைபிளில் அடங்கியிருக்கிறது. அதன் காரணமாகவே, குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து பைபிளைப் படிக்கும்படி நாங்கள் உறுதியுடன் சிபாரிசுசெய்கிறோம். [பக்கம் 246-ல் உள்ள 23-ம் பாராவை குறிப்பிடுங்கள்.] பெற்றுக்கொண்ட அறிவு முழு குடும்பத்துக்கும் நித்திய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரக்கூடும்.” யோவான் 17:3-ஐ வாசியுங்கள். அந்தக் குடும்பத்தினர் தங்களுடைய படிப்பை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதைக் காண்பிப்பதற்கு மீண்டும் வருவதற்கிருக்கும் உங்களுடைய மனவிருப்பத்தை தெரிவியுங்கள்.
5 நீங்கள் ஓர் இளைஞராகவோ புதிய பிரஸ்தாபியாகவோ இருந்து, முதற்சந்திப்பில் பரதீஸிய நம்பிக்கையை பற்றி சுருக்கமாக பேசியிருந்தால், புத்தகத்தில் உள்ள 3-ம் பக்கத்தைத் திறந்துகொண்டு இதுபோன்ற ஒன்றை வெறுமனே சொல்லுங்கள்:
◼ “கடவுளுடைய சித்தத்தைச் செய்பவர்கள் மகிழ்ச்சியும் சமாதானமும் இருக்கும் இதுபோன்ற ஓர் உலகில் வாழ்வதற்கு எதிர்நோக்கியவர்களாய் இருக்கலாம் என்று பைபிள் வாக்குறுதியளிக்கிறது. அந்த ஆசீர்வாதத்தை அனுபவித்து மகிழ நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இந்தப் புத்தகம் காட்டுகிறது.” நம்முடைய படிப்பு முறையை சுருக்கமாக விளக்கிக்கூறி, அதைச் செய்துகாட்ட விரும்புவதை தெரிவியுங்கள்.
6 இயேசுவின் சீஷர்களாக, மக்களுக்கு உதவிசெய்யவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. (ரோ. 10:14) நாம் பிரசுரத்தை அளித்திருந்தாலோ வெறுமனே ஒரு நல்ல சம்பாஷணையைக் கொண்டிருந்தாலோ, அக்கறையை வளர்க்கவேண்டிய உத்தரவாதம் நமக்கு இருக்கிறது. (மத். 9:37, 38) இந்த நியமிப்பை நாம் சரியாக நிறைவேற்றுவோமானால், அதனால் வருகிற ஆசீர்வாதங்களை அனைவரும் அனுபவிக்கலாம்.—1 தீ. 4:16.