பைபிள் படிப்புகளை நடத்த முன்வந்து தெரிவிக்கிறீர்களா?
1 பைபிளைப் படிப்பதற்கு வாய்ப்பை ஆட்களுக்கு அளிப்பதில் நேர்முகமான அணுகுமுறையைப் பயன்படுத்துவதன்மூலம் பைபிள் படிப்புகளைத் தொடங்குவதில் பலர் நல்ல வெற்றிகாண்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் புத்தகத்தை ஏற்க மறுத்த ஓர் ஆள் பைபிள் படிப்பு நடத்த முன்வந்து தெரிவித்தபோது உடனடியாக ஏற்றார். “பைபிளைப் படிக்கும்படி நான் எப்பொழுதும் விரும்பினேன்,” என அவர் பதில்கொடுத்தார். பைபிள் படிப்பு ஒன்று தொடங்கப்பட்டது, அந்த முழு குடும்பமும் விரைவில் முன்னேறினர்.
2 பைபிள் படிப்புகளைத் தொடங்கும் உணர்வுடையோராய் எல்லாரும் இருக்க வேண்டும். கிறிஸ்துவின் சீஷராவதில் ஒவ்வொருவரும் முன்னேற்றமடைய வேண்டுமெனில், அவர்கள் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். (மத். 28:19, 20) கற்பிக்கப்பட, அவர்களோடு பைபிள் படிப்பு ஒன்று நடத்துவது அவர்களுக்குத் தேவைப்படுகிறது. வீட்டுக்காரர் பைபிளையும் கடவுளுடைய வாக்குகளையும் பற்றி எவ்வாறு மேலுமதிகம் கற்க முடியுமென்பதைச் செய்துகாட்ட முன்வந்து தெரிவிப்பதால்தானே படிப்புகளைப் பெரும்பாலும் தொடங்கலாம். சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியில் ஒரு சகோதரன் ஐந்து படிப்புகளைத் தொடங்க முடிந்தது. அத்தனை பைபிள் படிப்புகளை அவர் தவறாமல் நடத்த முடியாதிருந்ததால், அவர் அந்த பைபிள் படிப்புகளை மற்ற பிரஸ்தாபிகளிடம் ஒப்படைக்கத் தொடங்கினார்.
3 படிப்புகள் தொடங்குவதை நாம் எளிதாகக் கண்டால், நாம் மற்ற பிரஸ்தாபிகளை நம்முடன் அழைத்துச் சென்று அவர்களுக்கும் படிப்புகள் கிடைக்கும்படி உதவிசெய்யலாம். அல்லது நாம் தொடங்கும் படிப்புகள் சிலவற்றை சபையிலுள்ள மற்றவர்களிடம் ஒப்படைக்கலாம். நீங்கள் பைபிள் படிப்பு ஒன்றை நடத்த விரும்பினால், வீடுவீடாகச் செய்யும் ஊழியத்தில் நீங்கள் சந்திப்போருக்கு பைபிள் படிப்பு நடத்த முன்வந்து தெரிவிக்க முயற்சி செய்யலாமல்லவா? ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பிரஸ்தாபி, அக்கறை அதிகம் காட்டாத ஒரு பருவவயது பெண்ணிடம் மறு சந்திப்பு செய்தார். எனினும், அந்தப் பிரஸ்தாபி அவளிடம் பைபிள் படிப்பு ஒன்றை நடத்த விரும்புவதைத் தெரிவித்தார், அவள் அதை ஏற்றாள். அவள் இப்பொழுது முழுக்காட்டப்பட்டிருக்கிறாள், அவளுடைய சகோதரியும் அவளுடைய சகோதரியின் கணவருங்கூட கூட்டங்களுக்கு வருகிறார்கள்.—கலாத். 6:6.
4 நாம் படிப்பு தொடங்குவோரில் எல்லாருமே தொடர்ந்து படிப்பதில்லை. படிப்போர் எல்லாருமே சத்தியத்துக்குள் வருவதில்லை. ஆனால் சிலர் வருவார்கள். நாம் எவ்வளவு அதிக படிப்புகள் தொடங்குகிறோமோ, அவ்வளவு அதிகமாய், மற்றவர்கள் யெகோவாவைத் துதிப்போராகும்படி நாம் உதவிசெய்யக்கூடிய சாத்தியம் இருக்கிறது.