மறுசந்திப்புகள் செய்வதன்மூலம் உங்கள் கரிசனையைக் காட்டுங்கள்
1 வீடு வீடாகச் சென்று அக்கறையுள்ள ஆட்களைத் தேடிக்கண்டுபிடிப்பது, ராஜ்ய செய்தியை மற்றவர்கள் கேட்க வாய்ப்பளிப்பதற்கான உங்களுடைய ஆசையை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. ஆகவே, ஜனவரி மாதத்தில் நீங்கள் அளித்த பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டவர்களை மீண்டும் சந்திப்பதைக்குறித்து நிச்சயமாயிருங்கள். ஏனென்றால் மற்றவர்களிடத்தில் நீங்கள் கரிசனைகொள்கிறீர்கள் என்பதைக் காட்டுவதற்கு இது சிறந்த வழியாக இருக்கிறது.
2 “நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு” புத்தகத்தைப் பெற்றுக்கொண்டவர்களை மீண்டும் சந்திப்பதற்கான ஆலோசனை இங்கே உள்ளது:
◼ “நாம் எல்லாருமே நல்ல செய்திகளைக் கேட்க விரும்புகிறோம். இந்த உலகத்தில் உண்மையான நல்ல செய்தியைக் கேட்க முடிவதில்லை என்பதாக அநேகர் நினைக்கிறார்கள். அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] நல்ல செய்திகள் நம் இருதயத்தை சந்தோஷப்படுத்தி உற்சாகப்படுத்த முடியும் என்பதை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம். அந்த மிகச் சிறந்த செய்தி பைபிளில் காணப்படுகிறது, அதுவே எதிர்காலத்தைப் பற்றிய நம்பத்தக்க தகவலடங்கிய ஊற்றுமூலமாக இருக்கிறது. [பக்கங்கள் 7-9-ல் மேற்கோளாக கொடுக்கப்பட்டுள்ள வசனங்களைச் சுட்டிக்காட்டுங்கள்.] இப்படிப்பட்ட நிலைமைகள் வெகுசீக்கிரத்தில் வரப்போகின்றன என்பதை உங்களுக்கு நிரூபிக்க வாய்ப்பளிக்கும்படி நாங்கள் விரும்புகிறோம்.” இந்தப் புத்தகத்தின் உதவியோடு பைபிளைப் படிப்பது இந்த நம்பிக்கைகளில் விசுவாசம் வைப்பதற்கான ஆதாரத்தை வீட்டுக்காரருக்கு அளிக்கக்கூடும் என்பதை விளக்குங்கள்.
3 “உம்முடைய ராஜ்யம் வருவதாக” புத்தகத்தை நீங்கள் விட்டுவந்திருந்தால், இந்த முறையில் உங்களுடைய சம்பாஷணையைத் தொடங்க முயற்சிக்கலாம்:
◼ “இதற்கு முன்பு கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் அது நமக்கு எதைச் செய்யப்போகிறது என்பதைப் பற்றியும் நாம் பேசினோம். அந்த ராஜ்யம் சீக்கிரத்தில் இந்தப் பூமியை ஒரு பரதீஸாக்கும். ஒரு பரதீஸ் எப்படியிருக்கும் என்று நாம் ஒருபோதும் பார்த்திராததால், அதைக் கற்பனை செய்து பார்ப்பது கடினமாக இருக்கலாம். அது எதைப் போல இருக்கலாம் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. [பக்கங்கள் 4 மற்றும் 5-ல் உள்ள விளக்கப்படத்தைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள்.] இப்படிப்பட்ட பரதீஸ் பைபிளில் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது.” சங்கீதம் 72:7-ஐ வாசியுங்கள். அக்கறை இருக்குமானால் பக்கம் 175, பாராக்கள் 3, 4-க்குத் திருப்பி, வரப்போகிற அந்தப் பரதீஸில் நாம் வாழ விரும்பினால் என்ன செய்யவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுங்கள்.
4 “மெய் சமாதானமும் பாதுகாப்பும்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?” புத்தகத்தைப் பெற்றுக்கொண்டவரை இதுபோன்ற சுருக்கமான பிரசங்கத்துடன் நீங்கள் மீண்டும் சந்திக்கலாம்:
◼ “உலகத் தலைவர்கள் இன்று சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவர முடியாதவர்களாய் இருந்திருக்கிறார்கள். அதைச் செய்ய வல்லமையுள்ளவர் யெகோவா தேவன் மாத்திரமே. நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பைபிள் நமக்கு காண்பிக்கிறது. [அதிகாரம் 9-க்குத் திருப்பி, பைபிளின் வாக்குத்தத்தங்களில் நம்பிக்கை வைப்பதற்கு பலமான ஆதாரத்தை நாம் கொண்டிருக்கிறோம் என்பதைக் காண்பியுங்கள்.] இந்தப் புத்தகம் உங்களுக்கு எவ்வாறு உதவிசெய்யும் என்பதை காண்பிக்க விரும்புகிறேன்.”
5 பின்வரும் இந்த ஆலோசனையைக் கொண்டு, “இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?” புத்தகத்தைப் பெற்றுக்கொண்டவரை நீங்கள் மீண்டும் சந்திக்கலாம்:
◼ “இந்தப் பூமியில் என்றுமாக வாழும் நம்பிக்கையைக் கொடுக்கிற இந்தப் புத்தகப் பிரதி ஒன்றை இதற்கு முன்பு நான் உங்களிடம் விட்டுச்சென்றேன். இந்தப் புத்தகத்தை மறுபார்வை செய்தபிறகு, நீங்கள் என்ன முடிவுக்கு வந்தீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] மரண பயமில்லாமல் நாம் வாழக்கூடிய ஒரு பரதீஸிய புதிய உலகத்தை வாக்களிக்கிற பாகங்களை வாசிப்பதன்மூலம் நீங்கள் ஒருவேளை உற்சாகப்படுத்தப்பட்டிருக்கலாம். [அந்தப் புத்தகத்தை 16-ம் அதிகாரத்திற்குத் திறந்து, பக்கம் 137-ல் உள்ள உபதலைப்பை சுட்டிக்காட்டுங்கள். ஏசாயா 25:8-ஐ வாசியுங்கள்.] நீங்களும் உங்களுடைய அன்பானவர்களும் இப்படிப்பட்ட உலகில் வாழ விரும்புவீர்கள் என்பதைக்குறித்து நான் நிச்சயமாக இருக்கிறேன். இதைப் பற்றி பக்கம் 143-ல் உள்ள முதல் பாரா என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்.” அந்தப் பாராவை வாசித்து, யெகோவாவைத் தேடுவது என்பது அவருடைய வார்த்தையாகிய பைபிளைப் படிப்பதன்மூலம் அவரைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் அதிகம் கற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது என்பதைச் சுட்டிக்காட்டுங்கள்.
6 தன்னுடைய ஆடுகளைக் கவனித்துக்கொள்கிற அன்பான மேய்ப்பராக யெகோவா ஒரு பரிபூரண மாதிரியை வைத்திருக்கிறார். (எசே. 34:11-14) அவருடைய அன்பான கவனிப்பைப் பின்பற்றுவதற்கு எடுக்கும் நம்முடைய உள்ளப்பூர்வமான முயற்சியானது அவரைப் பிரியப்படுத்துகிறது, நம்முடைய அன்பை வெளிப்படுத்திக் காட்டுகிறது, மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது.