உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/95 பக். 2
  • சந்தோஷப்படும் பெற்றோர்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சந்தோஷப்படும் பெற்றோர்!
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
  • இதே தகவல்
  • இளைஞரே—யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • உங்கள் பெற்றோரின் இருதயத்தை மகிழச் செய்தல்
    குடும்ப வாழ்க்கை
  • உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் என்ன இலக்குகளை வைத்திருக்கிறீர்கள்?
    நம் ராஜ்ய ஊழியம்—1995
  • ஊழியத்தில் ஈடுபட உங்கள் பிள்ளைகளுக்குப் பயிற்சி அளியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2011
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 8/95 பக். 2

சந்தோஷப்படும் பெற்றோர்!

1 ஒரு கிறிஸ்தவ வீட்டில் இருந்துவரும் இளம் நபராக நீங்கள் இருந்தால், உங்கள் பெற்றோரை மகிழ்விப்பதற்கு விசேஷித்த வழி ஒன்று இருக்கிறது. நீங்கள் நீதியான மார்க்கத்தை நாடித்தொடர்ந்தால், ‘உங்கள் தகப்பனும் உங்கள் தாயும் சந்தோஷப்படுவார்கள்.’ (நீதி. 23:22-25) இயல்பாகவே உங்கள் பெற்றோர் உங்களுக்கு சிறந்ததையே விரும்புகின்றனர். சத்தியத்தை உங்களுடையதாக்கி, யெகோவாவுக்கு உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுப்பதைப் பார்ப்பதைக் காட்டிலும் அதிகமாக வேறெதுவும் அவர்களைப் பிரியப்படுத்த முடியாது.

2 சத்தியத்தில் உள்ள பெற்றோரைக் கொண்டிருப்பதற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். பிறப்பு முதற்கொண்டே, அவர்கள் உங்களைப் போஷித்து, உடுத்துவித்து, வீட்டுவசதியளித்து, வியாதிப்பட்டிருக்கிற சமயங்களில் கவனித்து வந்திருக்கின்றனர். இன்னும் மிக முக்கியமாக, யெகோவாவைப் பற்றியும் அவருடைய நீதியான வழிகளைப் பற்றியும் உங்களுக்கு கற்றுத்தர அவர்கள் சிரமமெடுத்திருக்கின்றனர்; உங்கள் நித்திய ஜீவனை உறுதியாக்கும் பயிற்சியாக இது இருக்கிறது. (எபே. 6:1-4) நீங்கள் எவ்வாறு உங்களுடைய போற்றுதலைக் காட்டலாம்?

3 சத்தியத்தை உங்களுடையதாக்குங்கள்: சத்தியத்தைக் கருத்தார்ந்த விதத்தில் எடுக்கவும், ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யவும், யெகோவாவின் அமைப்போடு நெருங்கியிருக்கவும் உங்களுக்குக் கற்றுத்தர உங்கள் பெற்றோர் முயற்சி செய்திருக்கின்றனர். குடும்பப் படிப்பில் கட்டாயப்படுத்தப்படாமல், அக்கறை எடுப்பதன் மூலம் நீங்கள் போற்றுதலைக் காட்டலாம். கூட்டங்களுக்கு ஆஜராவதற்கான ஆசையை வெளிக்காட்டி, குடும்பமாக நேரத்திற்கு வந்து சேருவதற்குத் தயாராக நீங்களாகவே முன்முயற்சியெடுக்கலாம். கூட்டங்களின்போது உங்கள் பெற்றோரோடு சேர்ந்து உட்கார்ந்து, சிந்திக்கப்படும் பிரசுரங்களைப் பின்பற்றுவதன் மூலம் உன்னிப்பான கவனம் செலுத்துங்கள். குறிப்புகள் சொல்வதன் மூலம் கூட்டங்களில் பங்குகொள்ள நாடுங்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் மனப்பூர்வமான மாணாக்கராக உங்களையே காண்பியுங்கள், நியமிப்புகளை ஏற்று, அவற்றை சிறந்த விதத்தில் கையாளுங்கள். ராஜ்ய மன்றத்தில் உங்களுடைய உதவி பயனுள்ளதாயிருக்கும் இடங்களில் அதன் சம்பந்தப்பட்ட வேலைகளை கவனித்துக்கொள்ள உதவ விருப்பார்வத்தோடு உங்களை அளியுங்கள். அத்தகைய நடவடிக்கைகளில் உட்படுத்திக்கொள்வது ஆவிக்குரிய பிரகாரமாக உங்களுக்கு நன்மையாக இருப்பவற்றின் பேரில் உங்கள் இருதயத்தை ஒருநிலைப்படுத்தி வைக்கக்கூடும்.

4 படிப்படியான இலக்குகள் வையுங்கள்: வெளி ஊழியத்தில் அர்த்தமுள்ள பங்குகொள்ளும்படி நாடி, பிரஸ்தாபியாக தகுதிபெறுவதற்கான விருப்பத்தைக் காட்டுங்கள். வாராந்தர பைபிள் வாசிப்பை செய்யுங்கள், நீங்களாகவே முழு பைபிளையும் வாசிப்பது இன்னும் பயனுள்ளது. ஒப்புக்கொடுத்தலுக்கும் முழுக்காட்டுதலுக்குமான தேவைகளை பூர்த்திசெய்ய உறுதிபூண்டவர்களாயிருங்கள். யெகோவாவின் சேவையில் முழுமையான பங்குகொள்ள உங்களை ஆயத்தப்படுத்தும் பயிற்றுவிப்பைப் பெறும் நோக்கோடு, பள்ளியில் உங்கள் பாடங்களை கவனமாக தெரிந்தெடுக்க பெற்றோர் உங்களுக்கு உதவக்கூடும். பயனியர் சேவை அல்லது பெத்தேல் சேவை போன்ற விசேஷ சிலாக்கியங்களுக்கு மற்றவர்கள் உங்களைப் பரிந்துரைக்கும் விதமான பெயரை உருவாக்குவதில் மனதை ஒருமுகப்படுத்துங்கள். (அப். 16:1, 2) இலக்குகளை அடைவது ‘அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்தி, நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாயிருக்க’ உங்களுக்கு உதவும்.—பிலி. 1:10, 11, NW.

5 இளமைப் பருவம் கற்றுக்கொள்வதற்கும், அனுபவம் பெறுவதற்கும், பிறரோடு செயல் தொடர்புகொள்ளும் திறன்களைப் பெறுவதற்குமான காலம். வயதுவந்த பருவத்தோடு வரும் சகல அழுத்தங்களும் பொறுப்புகளும் இல்லாமல், நீங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழுவதற்கான காலம் அது. சாலொமோன் சொன்னார்: “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்.” (பிர. 11:9) இளம் பருவத்தில் யெகோவாவைச் சேவிக்க உங்கள் இருதயத்தை நீங்கள் ஊன்ற வைத்தீர்களென்றால், என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.—1 நா. 28:9.

6 “இளமைக்குரிய இச்சைக”ளுக்கு பதிலாக ‘நீதியை நாடினால்,’ கவலையும் மனநோவும் அடங்கிய கனமான பாரத்தை உங்கள் பெற்றோர் சுமப்பதிலிருந்து நீங்கள் அவர்களை விடுவிப்பீர்கள். (2 தீ. 2:22, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) உங்கள் சொந்த இருதயம் மகிழ்வதற்குக் காரணம் இருக்கும். (நீதி. 12:25) அதிமுக்கியமாக, உங்கள் படைப்பாளராகிய யெகோவா தேவனுக்கு சந்தோஷத்தைக் கொண்டுவருவீர்கள்.—நீதி. 27:11.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்