ஏற்ற வார்த்தைகள் பொய் போதனைகளை வீழ்த்திடும்
ஏதேன் தோட்டத்தில் சாத்தானுடைய அந்த முதல் பொய்—ஏவாளிடம் அவள் ‘சாகவே சாவதில்லை’ என்று சொன்னது—முதற்கொண்டு அவன் இறந்தவர்களின் நிலைபற்றிய நிச்சயமற்ற தன்மையையும் குழப்பத்தையும் பரப்பிவருகிறான். (ஆதி. 3:4) மனிதர்கள் இறப்பது சாத்தானை பொய்யனாக நிரூபிக்கிறது, ஆனால் பொய் மத போதனைகளின்மூலம் மனிதனின் ஒரு பாகம் தொடர்ந்து உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறது என நம்பும்படியாக பெரும் திரளான மனிதவர்க்கத்தினரை அவன் மோசம்போக்கி இருக்கிறான்.
2 கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து சத்தியத்தை அறிவதில் நாம் எவ்வளவு களிகூருகிறோம். புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்), எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகளை ஒரே மாதிரியாக மொழிபெயர்ப்பதால் நாம் திறம்பட்ட விதத்தில் தவறான போதனைகளை வீழ்த்தமுடியும். எபிரெய வார்த்தையாகிய நெபெஷும் கிரேக்க வார்த்தையாகிய சைக்கீயும் எப்போதும் ஆங்கிலத்தில் சோல் என்ற வார்த்தையாக மொழிபெயர்க்கப்படுகிறது; அதேசமயத்தில் எபிரெய வார்த்தையாகிய ரூவாக்கையும் கிரேக்க வார்த்தையாகிய நியூமாவையும் மொழிபெயர்க்க ஆங்கில வார்த்தையாகிய ஸ்பிரிட் பயன்படுத்தப்படுகிறது.
3 எனினும் பொய் மத போதனைகளின் செல்வாக்கினால் இத்தகைய ஒரே மாதிரியான தன்மை இந்திய மொழி பைபிள்களில் எப்போதும் காணப்படுவதில்லை. இந்திய மொழிகளை உபயோகித்து சத்தியத்தை திருத்தமான முறையில் போதிப்பதற்கு நமக்கு உதவ, நமது தேவராஜ்ய சொற்றொகுதியிலும் நமது வெளியீடுகளில் பைபிள் வார்த்தைகளை மொழிபெயர்ப்பதிலும் ஒரே மாதிரியாக இருப்பது சம்பந்தமாக நாங்கள் உழைத்துக்கொண்டிருக்கிறோம்.
4 பெரும்பாலான இந்திய மொழிகள் சமஸ்கிருத அல்லது திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்த மூலபாஷைகளில் வேர்ச் சொல்லாகிய ஆத்மா (ஆத்துமா) காணக்கூடாத ஏதோவொன்றை, ஒரு ஆற்றலை அல்லது ஒரு சக்தியைக் குறிக்கிறது; ஆத்மாவுடன் தொடர்புடைய வார்த்தைகள் பெரும்பாலான இந்திய மொழி பைபிள்களில் பரிசுத்த ஆவிக்கும் பரலோகத்திலுள்ள ஆவி ஆட்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இது ரூவாக் மற்றும் நியூமா என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை சரியாகவே மொழிபெயர்க்கிறது. எல்லா ஜீவ ஜந்துக்களிலும் உள்ள உயிர்ச் சக்திக்கு இதே வார்த்தைகளை பைபிள் பயன்படுத்துவதால் ஸ்பிரிட் என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பதற்கு அது வரும் இடங்களில் எல்லாம் ஆத்துமா என்ற வார்த்தையை ஒரேமாதிரியாகப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.
5 தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள், சமஸ்கிருத வார்த்தையாகிய பிரானோடு சம்பந்தப்பட்ட ஒரு வார்த்தையை மனிதர்களிலுள்ள உயிர்ச் சக்தியை விவரிக்க உபயோகித்துக் கொண்டிருப்பதால் இந்த மாற்றம் முக்கியமாக இம்மொழிகளைப் பாதிக்கும். ஆனால் இதுமுதல் ஆத்மா என்ற வார்த்தையை ஸ்பிரிட் என வரும் இடங்களில் எல்லாம் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தும்.
6 அநேக இந்திய மொழி பைபிள் மொழிபெயர்ப்புகள் பிரான் அல்லது ஜீவா என்ற வார்த்தைகளை நெபெஷ் மற்றும் சைக்கீ என்பவற்றை மொழிபெயர்க்க உபயோகிக்கின்றன. உயிருள்ளவற்றோடு, மனிதனோடோ மிருகத்தினோடோ அல்லது அவை உள்ளபடியே அனுபவிக்கும் வாழ்க்கையோடோ பிரான் சம்பந்தப்பட்டதாகையால் இது பொருத்தமானதாயிருக்கிறது. பைபிள் மாணாக்கர்களுக்குப் போதிக்கையில், புதிய உலக மொழிபெயர்ப்பில் பயன்படுத்தியிருப்பது போலவும், சங்கத்தின் பிரசுரங்களில் விளக்கப்பட்டிருப்பது போலவும் சோல் என்று வரும் இடங்களில் ஆத்துமா என்ற வார்த்தையை தமிழில் ஒரே மாதிரியாகப் பயன்படுத்துவது சரியாக இருக்கும். ஆத்துமா சாகும் என்று பைபிள் சொல்லுகையில் பிராணி என்ற வார்த்தையை உபயோகிப்பதன்மூலம் சில பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் பிரான் என்பதன் அர்த்தத்தையே தெளிவற்றதாக்கிவிட்டிருக்கின்றனர்.—தயவுசெய்து உங்கள் மொழி பைபிளிலுள்ள எசேக்கியேல் 18:4-ன் மொழிபெயர்ப்பை புதிய உலக மொழிபெயர்ப்புடன் ஒப்பிடுக.
7 சோல் என்பதற்கு குஜராத்தியிலும் மராத்தியிலும் நாம் தொடர்ந்து ஜீவா என்பதை உபயோகிக்கையில், மலையாளம் தேஹி என்ற வார்த்தையை உபயோகிக்கும். ஆத்மாவிற்கான சமஸ்கிருதத்தோடு சம்பந்தப்பட்ட வார்த்தையை மற்ற இந்திய மொழிகள் வரையறுப்பது போலவே அகராதிகள் வரையறுத்தாலும், மனிதனையும் குறிப்பதற்கு அதைப் பயன்படுத்தியிருப்பதால், தமிழ் இதற்கு ஒப்பற்ற விதிவிலக்காக இருக்கிறது. ஜீவனுள்ள மனிதனை, அவனுடைய எல்லா மனதின்பிரகாரமான மற்றும் சரீரப்பிரகாரமான குணங்களுடன் குறிப்பதற்கு தமிழ் பைபிள் ஒரே மாதிரியாக ஆத்துமா என்பதை உபயோகிக்கிறது; அதே சமயத்தில் ஆவி என்ற மற்றொரு வார்த்தை, மனிதனில் மற்றும் தேவ தூதர்களில் உள்ள உயிர்ச் சக்தியையும் கடவுளுடைய செயல்நடப்பிக்கும் சக்தியையும் குறிக்கும் ரூவாக் என்பதை உபயோகிக்கிறது.
8 அழியாமை என்ற போதகத்தைக் குறித்து கலந்தாலோசிக்கையில் பிரான் அல்லது ஜீவா என்ற வார்த்தைகளை உபயோகிப்பது முதலில் வழக்கத்துக்கு மாறானதாகத் தோன்றலாம், ஆனால் மூலபாஷையிலுள்ள வார்த்தைகளின் அர்த்தத்தை நாம் விளக்குகையிலும் பைபிளைத் தானே அதற்காகப் பரிந்துபேசவிடுகையிலும் உண்மை மனமுள்ள ஆட்கள் உடனடியாக சத்தியத்தைப் புரிந்துகொள்வர். எனவே செம்மறியாட்டைப் போன்றவர்களைப் பொய் மதத்தின் கட்டுகளிலிருந்து விடுவிக்க ஏற்ற வார்த்தைகளை உபயோகித்து தவறான போதனைகளை நாம் வீழ்த்துவோமாக.—யோவா. 8:32.