ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவை அடையும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்யுங்கள்
1 “எல்லா வகையான மனிதரும் சத்தியத்தின் திருத்தமான அறிவைப் பெற வேண்டும் என்பது கடவுளுடைய சித்தம்” என்று அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். (1 தீ. 2:4, NW) அந்த அறிவை ஏற்க மற்றவர்களுக்கு நாம் எவ்வாறு உதவி செய்யலாம்? நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தின் மூலமாக அக்கறை தூண்டப்பப்பட்டிருக்கிற ஆட்களிடம் மறுசந்திப்பு செய்வது ஒரு வழியாக இருக்கிறது. பைபிள் சத்தியத்தை இந்தப் பிரசுரம், தெளிவான, எளிதான, நன்றாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் கூறுகிறது. இதைப் படிப்பதன் மூலம் எல்லா வகையான ஆட்களும் ஜீவனுக்கு வழிநடத்தப்படலாம். இதை நம்முடன் படிப்பதற்கு மற்றவர்களை ஊக்கப்படுத்தும்படி நாம் என்ன சொல்லலாம்?
2 நடைமுறையான வழிகாட்டி என்று பைபிளை நீங்கள் அறிமுகப்படுத்தினவர்களிடம், ஒரு படிப்பை ஏற்கச் செய்வதற்கு நீங்கள் திரும்பிச் சென்று இவ்வாறு சொல்லலாம்:
◼ “முன்பு நான் இங்கு வந்தபோது, பைபிளை நடைமுறைக்குரிய வழிகாட்டு மூல ஆதாரமாக நாம் ஏன் நம்பலாம் என்பதைக் கலந்தாலோசித்தோம். பைபிள் கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்டதாக உரிமைபாராட்டுகிறது, மற்றும் அத்தகையதாக அது, அதன் எழுத்தாளர் ஒருவர்தாமே சொன்னபடி, ஆறுதலுக்கும் நம்பிக்கைக்கும் ஊற்றுமூலமாக உள்ளது. [ரோமர் 15:4-ஐ வாசியுங்கள்.] பைபிளில் அடங்கியுள்ள அறிவிலிருந்து நாம்தாமே தனிப்பட்ட முறையில் எவ்வாறு பயனடையலாம் என்ற கேள்வியை, நம்முடைய முந்தைய உரையாடலின் முடிவின்போது நான் எழுப்பினேன்.” அறிவு புத்தகத்தில் 11-ம் பக்கத்திலுள்ள பத்தி 18-ஐ வாசியுங்கள். யெகோவாவின் சாட்சிகள் உலகமெங்கும் ஏறக்குறைய ஐம்பது லட்சம் பைபிள் படிப்புகளை நடத்தி, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவை அடையும்படி எல்லா இடங்களிலுமுள்ள ஆட்களுக்கு உதவிசெய்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். அதிகாரம் 1-ல் முதல் ஐந்து பத்திகளைப் பயன்படுத்தி, ஒரு படிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை சுருக்கமாய் நடித்துக் காட்டுங்கள்.
3 தொடக்கத்தில் நீங்கள் ஒருவரோடு கலந்துபேசின விஷயம் ஜெபம் என்றால், ஒரு படிப்பைத் தொடங்க முயற்சி செய்வதில் இந்த அணுகுமுறையை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்:
◼ “நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்திலிருந்து நாம் கலந்தாராய்ந்த, ஜெபத்தைப்பற்றிய தகவலை நீங்கள் மகிழ்ந்தனுபவித்தீர்கள் என்று நம்புகிறேன். நான் திரும்ப வந்து, கடவுளிடம் ஜெபிப்போர், தங்கள் முறையாக அவருக்குச் செவிகொடுப்பது எவ்வாறு என்பதை உங்களுடன் கலந்தாலோசிப்பதாகச் சொன்னேன். 158-ம் பக்கத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். [பத்தி 18-ஐ வாசியுங்கள்.] இவ்வாறு, நாமே பைபிளைப் படிப்பதன் மூலம், கடவுள் நமக்குச் சொல்லவிருப்பதற்குச் செவிகொடுத்துக் கேட்கிறோம். அதைச் செய்வது நம்மை அவரிடமாக இன்னும் நெருங்கும்படி இழுத்து, நாம் குறிப்பிட்டு ஜெபிக்கும் அன்றாட பிரச்சினைகளைக் கையாள நமக்கு உதவி செய்கிறது. பைபிளை உங்களுடன் படிப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன்.” அந்த நபர் மனமுள்ளவராக இருந்தால், அறிவு புத்தகத்தின் முதல் அதிகாரத்துடன் தொடங்குங்கள்.
4 ஒரு படிப்பைத் தொடங்குவதற்கு நேர்முக அணுகுமுறையை நீங்கள் பயன்படுத்தியிருந்தால், முதலில் கலந்து பேசினதைத் தொடர்ந்து விரிவாக்குவதற்கு இதை நீங்கள் சொல்லலாம்:
◼ “உங்களை மறுபடியும் சந்திப்பதற்கு விசேஷித்த முயற்சி எடுத்தேன், ஏனெனில் எங்கள் இலவச பைபிள் படிப்பு திட்டத்தைப் பற்றி உங்களுக்கு மேலுமதிகம் சொல்வதற்கு விரும்பினேன். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை நான் உங்களிடம் விட்டுச் சென்றேன்; படிப்புக்குரிய உதவிப் புத்தகமாக இதையே நாங்கள் பயன்படுத்துகிறோம். கடவுளுடைய வார்த்தையை ஆலோசிப்பதற்கு இது எவ்வாறு ஊக்கமளிக்கிறது என்பதைக் கவனியுங்கள். [பக்கம் 22-ல் பத்தி 23-ஐ வாசியுங்கள்.] உங்கள் பிரதியாக இந்தப் புத்தகத்தை தயவுசெய்து நீங்கள் ஏற்றுக்கொண்டால், கடைசியாக நாம் விட்டதிலிருந்து தொடர்ந்து படிக்கலாம்.” முதல் சந்திப்பில் படிப்பைத் தொடங்கியிராவிட்டால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “பைபிளை நாங்கள் எவ்வாறு படிக்கிறோம் என்பதை நான் நடித்துக்காட்ட இது நல்ல நேரமாக இருக்கலாம்.” சில பத்திகளை சிந்தித்தப் பிறகு, அடுத்த படிப்புக்காகத் திரும்பி வருவதற்கு திட்டமான ஒரு நேரத்தை ஏற்பாடு செய்யுங்கள்.
5 அறிவு புத்தகத்தை பயன்தரத்தக்க முறையில் உபயோகிப்பது, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமுண்டாக, திருத்தமான அறிவைப் பரவச் செய்வதை நமக்குச் சாத்தியமாக்கும். (நீதி. 15:7) நேர்மை இருதயமுள்ளோருக்கு, அப்படிப்பட்ட அறிவு மகிழ்ச்சியைக் கொண்டுவரும்; மேலும் யெகோவாவின் நீதிக்கு இசைவாக வாழ அவர்களுக்கு இது வல்லமைவாய்ந்த தூண்டுவிசையாக இருந்து, முடிவில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும்.