உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/96 பக். 8
  • ‘இதுவே நித்தியஜீவன்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘இதுவே நித்தியஜீவன்’
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
  • இதே தகவல்
  • கடவுளிடமிருந்து பெற்ற அறிவு அநேக கேள்விகளுக்குப் பதில்களை அளிக்கிறது
    நம் ராஜ்ய ஊழியம்—1997
  • நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவைப் பரப்புதல்
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • மெய்யான கடவுளைப் பற்றிய அறிவு ஜீவனுக்கு வழிநடத்துகிறது
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவை அடையும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்யுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1996
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 11/96 பக். 8

‘இதுவே நித்தியஜீவன்’

1 யோவான் 17:3-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் வார்த்தைகள் ஆழமாய்ப் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. அவர் என்ன சொன்னாரோ அதையே அர்த்தப்படுத்தினார்—அதாவது, கடவுளைப் பற்றியும் கிறிஸ்துவைப் பற்றியும் அறிவை எடுத்துக்கொள்வதே நித்தியஜீவன்! யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் அறிவை உடையவர்களாக இருப்பதனால் மட்டுமே நித்தியஜீவன் நமக்கு அளிக்கப்பட்டுவிடுமா? இல்லை. யெகோவாதான் தங்களுடைய கடவுள் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்திருந்தனர், ஆனால் அவர்களுடைய வாழ்க்கைப் போக்கு அவர்களுடைய இந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கவில்லை. இதன் விளைவாக அவருடைய தயவை இழந்தனர். (ஓசி. 4:1, 2, 6) இன்று லட்சக்கணக்கான ஆட்களுக்கு, “தேவனைப்பற்றி . . . வைராக்கிய”மிருக்கலாம்; “ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.” (ரோ. 10:2) அவர்கள் “ஒன்றான மெய்த்தேவனாகிய” யெகோவாவை அறிந்துகொண்டு, அவரை சரியான முறையில் வணங்குவது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இதை மனதில்கொண்டு, நவம்பர் மாதத்தின்போது, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை நாம் அளிப்போம். அறிவு புத்தகத்தை அளிப்பதில் எந்த அணுகுமுறையை நீங்கள் உபயோகிப்பீர்கள்? உங்களுக்கு உதவியாய் இருக்கும் சில ஆலோசனைகள் கீழே கொடுக்கப்படுகின்றன.

2 உங்களுடைய பிராந்தியத்தில் உள்ள அநேக மக்களிடம் பேசும்போது உபயோகிக்க நீங்கள் விரும்பும் ஒரு அளிப்புமுறை கீழே கொடுக்கப்படுகிறது:

◼ “இந்த உலகில் ஏன் வித்தியாசப்பட்ட அநேக மதங்கள் இருக்கின்றன என்பதைப்பற்றி நம்முடைய அயலகத்தாரிடம் நாங்கள் பேசிவருகிறோம். இந்த நாட்டில் மட்டும் வித்தியாசப்பட்ட ஏராளமான மதங்கள் இருந்துவருகின்றன, உலகளாவ 10,000-க்கும் அதிகமான மதத் தொகுதிகள் இருக்கின்றன. மதங்களில் ஏன் இத்தனையநேக வித்தியாசங்கள் நிலவிவருகின்றன என்பதைப்பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன? [பதிலளிக்க காத்திருங்கள். அறிவு புத்தகத்தில் 5-ம் அதிகாரத்தை திறந்து பாரா 1-ஐ வாசியுங்கள்.] இந்த அதிகாரத்தை வாசிப்பதன்மூலம் அந்தக் கேள்விகளுக்கெல்லாம் திருப்திகரமான பதில்களை நீங்கள் காண்பீர்கள். இதை ஆராய்ந்து பார்க்க நீங்கள் விரும்பினால் இந்தப் புத்தகத்தை உங்களிடம் கொடுத்துவிட்டு செல்வதில் நான் மகிழ்ச்சியடைவேன்.” அதை ஏற்றுக்கொண்டால், திரும்ப வந்து சந்திப்பதற்குத் திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, “நான் மீண்டும் உங்களை சந்திக்கும்போது, மதங்கள் எல்லாம் ஒரே இடத்திற்கு வழிநடத்திச் செல்லும் வெவ்வேறு பாதைகள்தானா என்பதைப்பற்றி நாம் ஆலோசிக்கலாம்,” என்று சொல்லுங்கள்.

3 ஏன் இத்தனையநேக மதங்கள் இருக்கின்றன என்பதன்பேரில் கலந்தாலோசிப்பை தொடர மீண்டும் சந்திக்கும்போது, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:

◼ “போனமுறை நான் உங்களிடம் பேசியபோது, மதங்கள் எல்லாம் ஒரே இடத்திற்கு வழிநடத்திச் செல்லும் வெவ்வேறு பாதைகள்தானா என்ற கேள்வியை நான் எழுப்பினேன். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக காத்திருங்கள்.] இந்த விஷயத்தின்மீது இயேசு என்ன கூறினார் என்பதை நான் உங்களிடம் கொடுத்துவிட்டுப்போன புத்தகத்திலிருந்து உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். [அறிவு புத்தகத்தில் அதிகாரம் 5-க்குத் திருப்பி, மத்தேயு 7:21-23 உட்பட, 6-7 பாராக்களை வாசியுங்கள்.] கடவுளுடைய சித்தம் என்ன என்பதைப்பற்றி சரியாக தெரிந்துகொள்வது ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். அடுத்துள்ள பாராக்கள் அதிக தகவல் நிறைந்தவையாக இருப்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இந்த அதிகாரத்தில் மீதியுள்ள பாகத்தையும் தயவுசெய்து வாசியுங்கள். அடுத்தமுறை நான் வரும்போது, வழிபாடு சம்பந்தமான விஷயங்களில் திருத்தமான அறிவை பெற்றிருப்பதன் மதிப்பை உங்களுக்கு காண்பிப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன்.”

4 கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களில் பெரும்பாலானோருக்கும்கூட பூமியில் என்றென்றுமாக வாழ்வது என்ற கருத்து புதிய ஒன்றாக இருப்பதனால், இந்த அறிமுகம் ஒருவேளை அவர்களுடைய கவனத்தை ஈர்க்கலாம்:

◼ “நம்முடைய அயலகத்தாரிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறோம். இதைப் போன்ற ஒரு உலகத்தில் என்றென்றுமாக வாழ நீங்கள் அழைக்கப்பட்டால், அந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? [அறிவு புத்தகத்தில் பக்கம் 4-5-ல் உள்ள படத்தைக் காண்பியுங்கள். பதிலுக்காக காத்திருங்கள்.] வாழ்க்கையில் இது உண்மையிலேயே உங்களுடைய இன்பகரமான அனுபவமாக ஆகமுடியும். உங்களுடைய வாழ்க்கையில் அதை நிஜமாக பார்ப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக காத்திருங்கள்.] யோவான் 17:3 சொல்லுகிறபடி என்ன நடவடிக்கை தேவைப்படுகிறது என்பதை கவனியுங்கள். [வாசியுங்கள்.] இந்த விசேஷ வகை அறிவை பெறுவதற்கு இந்தப் புத்தகம் அநேகருக்கு உதவுகிறது. வாசித்துப் பார்ப்பதற்கு உங்களுக்கு ஒரு தனிப்பட்ட பிரதியை வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? [பதிலுக்காக காத்திருங்கள்.] நான் அடுத்தமுறை வரும்போது, பூமியிலேயே நாம் நித்திய ஜீவனை அடைவோம் என்பதை நம்புவது ஏன் நியாயமாக இருக்கிறது என்பதை ஆலோசிக்கலாம்.”

5 யோவான் 17:3-ஐ கலந்தாலோசித்தவரிடம் மறுசந்திப்பு நடத்தப் போகும்போது, நீங்கள் இவ்வாறு தொடரலாம்:

◼ “நான் போனமுறை சந்தித்தபோது, யோவான் 17:3-ல் காணப்படும் இயேசுவின் கிளர்ச்சியூட்டும் வார்த்தைகளை உங்களுக்கு வாசித்துக் காண்பித்தேன். அதில் கடவுளைப் பற்றியும் தம்மைப் பற்றியும் அறிந்துகொள்வதே நித்திய ஜீவன் என்பதாக அவர் நமக்கு உறுதியளித்தார். ஆனால் மேம்பட்ட ஒரு வாழ்க்கை பரலோகத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதாக அநேக மக்கள் நம்புகின்றனர். அதைப்பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன? [பதிலுக்காக காத்திருங்கள்.] நான் உங்களுக்குக் கொடுத்துச் சென்ற புத்தகத்தை இப்போது எடுப்பதில் உங்களுக்கு சிரமமேதுமில்லை என்றால், பூமியில் பரதீஸ் திரும்ப ஸ்தாபிக்கப்படவிருக்கிறது என்பதை நிரூபிக்கும் பைபிள் வசனங்கள் சிலவற்றை காண்பிக்க விரும்புகிறேன். [அறிவு புத்தகம் பக்கங்கள் 9-10-ல், பாராக்கள் 11-16-ஐ கலந்தாலோசியுங்கள்.] நான் அடுத்தமுறை வரும்போது, பைபிளில் காணப்படும் இந்த வாக்குறுதிகளை நீங்கள் ஏன் நம்பலாம் என்று காண்பிக்க விரும்புகிறேன். அதற்கிடையில், உங்களுடைய புத்தகத்தில் 2-ம் அதிகாரத்தை நீங்கள் வாசித்துவைக்கலாம்.”

6 பைபிளை ஓரளவு நம்பும் ஆட்களோடு பைபிள் படிப்புகளைத் தொடங்குவதில் நேரடியான ஒரு அணுகுமுறை பெரும்பாலும் வெற்றி அளிப்பதாக இருக்கிறது. “நியாயங்காட்டிப் பேசுதல்” புத்தகத்தில் பக்கம் 12-ல் ஆலோசனையாக கொடுக்கப்பட்டுள்ள அறிமுகம் பின்வருமாறு:

◼ “உங்களுக்கு பைபிளை இலவசமாய்க் கற்பிக்க நான் முன்வருகிறேன். நீங்கள் அனுமதித்தால், 200-க்கு மேற்பட்ட நாடுகளில் ஆட்கள் குடும்பத் தொகுதிகளாக வீட்டில் பைபிளைக் கலந்தாலோசிக்கும் முறையை நடத்திக்காட்ட ஒருசில நிமிடங்கள் மாத்திரமே எடுக்க நான் விரும்புகிறேன். இந்தத் தலைப்புகளில் எதையாவது கலந்தாலோசிப்புக்கு ஆதாரமாக நாம் பயன்படுத்தலாம். (அறிவு புத்தகத்தின் பொருளடக்க அட்டவணையைக் காட்டுங்கள்.) எது உங்கள் அக்கறையைக் கவருகிறது?” அந்த நபர் தெரிந்தெடுக்கும்வரை காத்திருங்கள். தெரிந்தெடுக்கப்பட்ட அதிகாரத்திற்குத் திருப்பி, முதல் பாராவிலிருந்து படிப்பைத் தொடங்குங்கள்.

7 பைபிளைப்பற்றி தெரியாத மக்களோடு படிப்புகளைத் தொடங்குவதற்கு நீங்கள் முயற்சி செய்யக்கூடிய வெற்றிகரமான ஒரு நேரடி அணுகுமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

◼ “பைபிள் அதிக ஞானத்தைத் தன்னுள் அடக்கியுள்ள ஒரு புத்தகம் என்று அநேக மக்கள் நம்புகின்றனர், ஆனாலும் அதிலிருந்து எதையும் படிப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்ததில்லை. நான் இலவசமாக பைபிள் பாடங்களை நடத்துகிறேன், என்னுடைய கால அட்டவணையில் இன்னும் புதிய ஆட்களை சேர்த்துக்கொள்ள முடியும். இந்த பைபிள் படிப்புத் துணைப் புத்தகத்தைத்தான் நாங்கள் உபயோகிக்கிறோம். [அறிவு புத்தகத்தைக் காட்டுங்கள்.] இதை முழுவதும் படித்துமுடிக்க ஒருசில மாதங்கள்தான் பிடிக்கும். மேலும் இதை முழுவதுமாக படிப்பது, கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்? நாம் ஏன் வயதானவர்களாகி இறந்துபோகிறோம்? இறந்துபோன நம் அன்பானவர்களுக்கு என்ன நேரிடுகிறது? போன்ற கேள்விகளுக்கு பைபிள் எவ்வாறு பதில் சொல்லுகிறது என்பதைக் காட்டுகிறது. நான் படிப்பை உங்களுக்கு நடத்திக் காட்டட்டுமா?” படிக்க மறுத்துவிட்டால், அறிவு புத்தகத்தைக் கொடுத்து, தாங்களே சொந்தமாக வாசித்துத் தெரிந்துகொள்ள அந்த நபரை உற்சாகப்படுத்துங்கள்.

8 கடவுளையும் கிறிஸ்துவையும் பற்றிய திருத்தமான அறிவை உடைய ஒவ்வொருவருக்கும் அது எப்பேர்ப்பட்ட ஒரு புதையலாக இருக்கிறது! அந்த அறிவைப் பெறுவது உண்மையிலேயே பரிபூரண நிலைமைகளில் நித்திய ஜீவனை அர்த்தப்படுத்துகிறது. நவம்பரில் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள பயன்படுத்துவோமாக.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்