“நாடோறும்” யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள்
1 யெகோவாவிடம் ராஜாவாகிய தாவீது செய்த ஒரு வாக்குறுதி சங்கீதம் 145:2-ல் அடங்கியுள்ளது: “நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.” நம்முடைய பரலோகத் தகப்பனை ஸ்தோத்திரித்து துதிப்பதற்கு நமக்கும் காரணமிருக்கிறது! “நாடோறும்” யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தைப் புகழ்வதில் தாவீதின் முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
2 யெகோவாவுக்கான போற்றுதலால் இருதயத்தை நிரப்புங்கள்: கடவுளுடைய வார்த்தையை தவறாமல் படிப்பது யெகோவா நமக்காக செய்திருக்கிற, செய்துவருகிற, இன்னும் செய்யவிருக்கிற காரியங்களுக்கான நம்முடைய நன்றியுணர்வை ஆழப்படுத்துகிறது. அவருடைய அற்புதகரமான செயல்களுக்கான போற்றுதலில் நாம் வளருகையில், அவருடைய நற்குணத்தைக் குறித்து உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் நாம் இருப்போம். (சங். 145:7) பொருத்தமான எல்லா சந்தர்ப்பங்களிலும் யெகோவாவை நாம் ஆவலுடன் துதிப்போம்.
3 அன்றாட உரையாடலில் யெகோவாவைத் துதியுங்கள்: அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், பள்ளித் தோழர்கள், உடன் பணிபுரியும் ஆட்கள், மற்றும் நாம் அன்றாடம் தொடர்புகொள்கிற பிற ஆட்களிடம் உரையாடுகையில், அவர்களுடன் நம்முடைய நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதற்கு சந்தர்ப்பங்களிருப்பதை நாம் காணலாம். அண்டை வீட்டுக்காரர் ஒருவர், சமுதாயத்தில் நடக்கும் குற்றச்செயலைப் பற்றிய கவலையை தெரிவிக்கலாம்; போதைப்பொருள் துர்ப்பிரயோகம் அல்லது ஒழுக்கக்கேட்டைப் பற்றி பள்ளித்தோழர் ஒருவர் கவலைப்படலாம்; உடன் பணிபுரியும் ஒருவர், அரசியல் பிரச்சினை எதையாவது பற்றி கருத்துத் தெரிவிக்கலாம். இப்பொழுது எடுக்கவேண்டிய சரியான போக்கையும் அந்தப் பிரச்சினைகளுக்கான இறுதியான பரிகாரத்தையும் காண்பிக்கிற கடவுளுடைய வார்த்தையிலுள்ள நியமங்களையும் வாக்குறுதிகளையும் நாம் சுட்டிக்காட்டலாம். “ஏற்றகாலத்தில்” சொல்லப்பட்ட இத்தகைய வார்த்தைகள் ஓர் ஆசீர்வாதமாக இருக்கக்கூடும்!—நீதி. 15:23.
4 முழுநேரமும் யெகோவாவைப் பற்றி பேசுங்கள்: யெகோவாவுக்கான ஆழ்ந்த போற்றுதலுள்ள நபர், கூடுமானவரை மற்ற அநேகருடனும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார். (சங். 40:8-10) இதன் சம்பந்தமாக நம்மைநாமே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என்னுடைய சூழ்நிலைமைகள் அனுமதிக்கிற அனைத்தையும் நான் செய்துவருகிறேனா?’ நியாயமான சில மாற்றங்களைச் செய்வதினால் தாங்கள் ஒழுங்கான பயனியர்களாய் ஆக முடிந்திருக்கிறது என்பதை அநேகர் கண்டிருக்கின்றனர். தற்போதைய சூழ்நிலைமைகள் அதற்கு அனுமதிக்கவில்லையென்றால், நாம் துணைப் பயனியர்களாக சேர்ந்துகொள்ள முடியுமா?
5 யெகோவாவை ஸ்தோத்திரிப்பதில் நம்முடன் சேர்ந்துகொள்ள புதியவர்களுக்கு உதவிசெய்யுங்கள்: இயேசுவினுடைய மரணத்தின் நினைவு ஆசரிப்பை அனுசரிப்பது, யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கும் அவருடைய நாமத்தைத் துதிப்பதற்குமான காரணங்களைப் பற்றி எப்பொழுதும் நமக்கு நினைப்பூட்டுகிறது. யெகோவாவின் ராஜரீகத்தைப் பற்றி வெளிப்படையாக பேசுவதில் நம்முடன் சேர்ந்துகொள்வதற்கு நம்முடைய பைபிள் மாணாக்கர்களை உற்சாகப்படுத்துவதற்கு விசேஷமாக இது நல்ல நேரம். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில், 173-5 பக்கங்களில் 7-9 பாராக்களில் குறிப்பிடப்பட்டுள்ள காரியத்தின்பேரில் ஜெபசிந்தையுடன் அமைதலாக சிந்தித்துப் பார்க்கும்படி அவர்களைத் தூண்டுங்கள். அவர்கள் தகுதிபெறுவார்களென்றால், அனுபவமில்லாமைதானே பிரசங்கிப்பதிலிருந்து பின்வாங்குவதற்கு அவர்களுக்கு எந்தவித காரணமுமில்லை. ராஜ்ய பிரசங்க வேலை எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை அவர்களுக்குக் காண்பிப்பதற்கு திறமைவாய்ந்த பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். நற்செய்தியைக் குறித்துப் பேசுவதற்கு புதியவர்கள் தைரியத்தை வரவழைத்துக் கொள்வார்களாகில், தங்களுக்கு யெகோவா உதவி செய்வார் என்பதில் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்.—அப். 4:31; 1 தெ. 2:2.
6 நாடோறும் யெகோவாவை ஸ்தோத்திரிக்க நாம் நாடுகையில், நமக்கும் மற்றவர்களுக்கும் நித்திய நன்மைகளை நாம் கொண்டுவருகிறோம்.