யெகோவாவின் சாட்சிகள்—உண்மையான சுவிசேஷகர்கள்
1 இயேசு கிறிஸ்து, சுவிசேஷத்தை அறிவிக்கும் பொறுப்பை தமது சீஷர்கள் அனைவருக்கும் அளித்து, ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்கும்படி குறிப்பாக கட்டளையிட்டார். (மத். 24:14; அப். 10:42) அவரது ஆரம்பகால சீஷர்கள் ராஜ்யத்தைப் பற்றி இடைவிடாமல் பேசி, இவ்விஷயத்தில் முன்மாதிரி வைத்தனர்; வணக்கத்திற்கான இடங்களில் மட்டுமல்லாமல் பொதுவிடங்களில் மக்கள் எங்கெல்லாம் கண்ணில் தென்பட்டார்களோ அங்கெல்லாமும் வீடு வீடாகவும் அவர்கள் பிரசங்கித்தார்கள். (அப். 5:42; 20:20) இன்று யெகோவாவின் சாட்சிகளாக, நாம் உண்மையான கிறிஸ்தவ சுவிசேஷகர்களென நிரூபித்திருக்கிறோம்; 232 நாடுகளில் ராஜ்ய செய்தியைப் பிரசங்கிக்கிறோம். மேலும், கடந்த மூன்றே ஆண்டுகளில் பத்து லட்சத்திற்கும் அதிகமான புதியவர்களை சீஷராக்கி முழுக்காட்டுதலுக்கு வழிநடத்தியிருக்கிறோம்! நமது சுவிசேஷ வேலை ஏன் இந்தளவு வெற்றிகண்டிருக்கிறது?
2 நற்செய்தி உற்சாகம் பொங்கச் செய்கிறது: சுவிசேஷகர்கள், நற்செய்தியைப் பிரசங்கிப்பவர்கள் அல்லது அதன் தூதுவர்கள். யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கும் சந்தோஷமான சிலாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம்; இதுவே, துன்பப்படும் மனிதவர்க்கத்தினருக்கு நம்மால் அளிக்க முடிந்த ஒரே உண்மையான நற்செய்தி. புதிய வானங்களைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருப்பது நமக்கு பேரின்பம் அளிக்கிறது; அவ்வானங்கள், புதிய பூமியை நீதியாய் அரசாளும்; வரவிருக்கும் பரதீஸில் வாழப்போகும் உண்மையுள்ள மனிதவர்க்கத்தினரை இந்தப் புதிய பூமி அர்த்தப்படுத்துகிறது. (2 பே. 3:13, 17) நாம் மாத்திரமே இந்த நம்பிக்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறோம், அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களாயும் இருக்கிறோம்.
3 உண்மையான அன்பு நம்மை உந்துவிக்கிறது: சுவிசேஷ வேலையானது உயிர்காக்கும் வேலை. (ரோ. 1:16) ஆகவேதான் இந்த ராஜ்ய செய்தியை அறிவிப்பதில் நாம் பேரளவாய் மகிழ்ச்சி அடைகிறோம். உண்மையான சுவிசேஷகர்களாய், நாம் மக்களை நேசிக்கிறோம்; இது, அவர்களோடு நமது குடும்பத்தினரோடு, அயலகத்தாரோடு, தெரிந்தவர்களோடு, மேலும் முடிந்தளவு இன்னும் மற்ற அநேகரோடு நற்செய்தியை பகிர்ந்துகொள்ளும்படி நம்மைத் தூண்டுகிறது. இந்த வேலையை முழுமனதோடு செய்வது, மற்றவர்கள்பேரில் நமக்கிருக்கும் உண்மையான அன்பை வெளிக்காட்டுவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். 1 தெ. 2:8.
4 கடவுளது ஆவி நம்மை வழிநடத்துகிறது: ராஜ்யத்தின் விதையை விதைத்து நீர் பாய்ச்சும் வேலையை நாம் செய்யும்போது, யெகோவாவே அதை ‘விளையச்செய்கிறார்’ என அவருடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது. இன்று நம் அமைப்பில் இதையேதான் நாம் காண்கிறோம். (1 கொ. 3:5-7) நமது சுவிசேஷ வேலையில் கடவுளது ஆவியே நம்மை வழிநடத்தி பெரும் வெற்றியை நமக்கு ஈட்டுத் தருகிறது. யோவே. 2:28, 29.
5 “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்” என 2 தீமோத்தேயு 4:5-ல் கொடுக்கப்பட்டுள்ள உற்சாகத்தைக் கருத்தில்கொள்கையிலும், அனைத்து மக்கள்மீதும் நாம் அன்புகூருவதன் காரணமாகவும், மகிழ்ச்சியூட்டும் ராஜ்ய நற்செய்தியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களோடு பகிர்ந்துகொள்ள தூண்டப்படுவோமாக; யெகோவா நமது வேலையை தொடர்ந்து ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையோடு அவ்வாறு செய்வோமாக.