உங்களுக்கு திட்டவட்டமான பத்திரிகை ஆர்டர் இருக்கிறதா?
1 வெளி ஊழியத்திற்கான கூட்டத்திற்கு செல்கிறீர்கள், அங்கு சென்று பார்த்தால் உங்கள் பையில் பத்திரிகைகளே இல்லை. இந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? “நம் பத்திரிகைகளை மிக நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்ற கட்டுரை ஜனவரி 1996 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் வந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? “திட்டவட்டமான பத்திரிகை ஆர்டரை வைத்திருங்கள்” என்று அது கூறியது. “ஒவ்வொரு வெளியீட்டிலும் தேவைப்படும் திட்டவட்டமான பிரதிகளின் எண்ணிக்கைக்காக, பத்திரிகைகளைக் கையாளுகிற சகோதரரிடம் நடைமுறையான அளவில் ஆர்டர் செய்யுங்கள். இந்த முறையில், நீங்களும் உங்களுடைய குடும்பத்தினரும் பத்திரிகைகளை ஒழுங்கான ரீதியிலும் போதுமான அளவிலும் பெறுவீர்கள்” என்றும் கூறியது. நீங்கள் இதைச் செய்துவிட்டீர்களா?
2 பத்திரிகைகளுக்காக உங்களுக்கென்று திட்டவட்டமான ஒரு ஆர்டரை ஏன் கொடுக்கக்கூடாது? அவ்வாறு செய்தால் ஒவ்வொரு வாரமும் பத்திரிகைகளை விநியோகிக்க வேண்டிய அதிக பொறுப்பையும் உணருவீர்கள், அதனால் அதிக சந்தோஷத்தையும் பெறுவீர்கள். திட்டவட்டமான ஆர்டர் ஏற்கெனவே உங்களுக்கு இருக்கிறது என்றால் ஊழியத்தில் சராசரியாக செலவிடும் ஒரு மாதத்திற்கு தேவையான பத்திரிகைகள் கிடைக்கின்றனவா என்பதை மறு ஆய்வு செய்யுங்கள். ஒவ்வொரு வாரமும் நம்முடைய ஆர்டரை தவறாமல் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்; அவ்வாறு செய்யவேண்டியது நம்முடைய கடமை என்பதையும் உணர வேண்டும். நீங்கள் அதிகமான நாட்கள் விடுமுறை செல்கிறீர்கள் என்றால், திரும்ப வரும்வரை உங்களுக்கு சேரவேண்டிய பத்திரிகைகளை வேறு யாருக்காவது கொடுக்கும்படி பத்திரிகை ஊழியரிடம் சொல்லிவிட்டு செல்லுங்கள்.
3 “ஒழுங்கான பத்திரிகை நாளுக்காக அட்டவணையிடுங்கள்” என்றும் மேலே குறிப்பிடப்பட்ட அதே உட்சேர்க்கை கூறியது. வாராந்திர பத்திரிகை ஊழியத்தில் நீங்களும் கலந்துகொள்ள முடியுமா? இது, யெகோவாவின் சாட்சிகளுடைய 1999 காலண்டர் காண்பிக்கிறபடி வருடத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் வருகிறது. காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை விநியோகிப்பதின் முக்கியத்துவத்தை குறைவாக மதிப்பிட்டுவிடாதீர்கள். பத்திரிகை ஊழியத்தில் முழுமையாய் பங்குகொள்ள நாம் முயற்சிக்கையில் நம் அயலகத்தாருக்கு “நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறி”விக்கிறோம்.—ஏசா. 52:7.