உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/99 பக். 2
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1999
  • இதே தகவல்
  • கடவுள் தேவைப்படுத்துகிறவற்றை மக்கள் கற்றுக்கொள்வதற்கு உதவ ஒரு புதிய கருவி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • ‘ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்?’
    நம் ராஜ்ய ஊழியம்—2000
  • பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைப் பயன்படுத்துகிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • கடவுள் சொல்லும் நற்செய்தி! சிற்றேட்டைப் பயன்படுத்துவது எப்படி?
    நம் ராஜ்ய ஊழியம்—2013
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1999
km 7/99 பக். 2

கேள்விப் பெட்டி

◼ புதியவர்கள் முழுக்காட்டுதல் எடுக்கும் முன் என்ன பிரசுரங்களை படிக்க வேண்டும்?

ஒருவர் தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் எடுக்கும் முன் திருத்தமான அறிவை அடைவது அவசியம். (யோவா. 17:3) கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? சிற்றேட்டையும், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தையும் படித்து அவரிடம் எதிர்பார்க்கப்படும் திருத்தமான அறிவை பெற்றுக்கொள்ளலாம். நிறையப் பேர் முதலில் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையே படிக்கின்றனர். ஆனால், அறிவு புத்தகத்திலிருந்து ஏற்கெனவே படிப்பை ஆரம்பித்திருந்தால், அதை முடித்தப்பிறகு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை படிக்க வேண்டும். இவற்றை ஏன் அவசியம் படிக்க வேண்டும்?

அடிப்படை பைபிள் போதனைகளின் சாராம்சத்தை தேவைப்படுத்துகிறார் சிற்றேடு அளிக்கிறது. மாணாக்கர் இதை முதலில் படித்தால், யெகோவாவை பிரியப்படுத்த என்னவெல்லாம் தேவை என்ற அடிப்படை அறிவை அடைவார். அல்லது அறிவு புத்தகத்தை முடித்தப்பிறகு இச்சிற்றேட்டை படித்தால், புத்தகத்தில் படித்தவை ஞாபகத்திற்கு வரும். இரண்டில் எதை முதலில் படித்தாலும்சரி, இவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் வேதவசனங்களை பைபிளில் புரட்டிப்பார்த்து, தியானிக்க மாணாக்கருக்கு ஊக்கம் தரவேண்டும். படங்கள் சுட்டிக்காட்டும் கருத்துக்களை விளக்க மறந்துவிடாதீர்கள். அவை டக்கென்று விஷயங்களை புரிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன.​—⁠ஜனவரி 15, 1997, காவற்கோபுரம், பக்கங்கள் 16-17-ஐக் காண்க.

இரு பிரசுரங்களையும் மாணாக்கர் படித்து முடித்துவிட்டால், அவரை முழுக்காட்டுதலுக்காக மூப்பர்கள் தயாராக்கும்போது, கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அவரால் பதிலளிக்க முடியும். ஆகவே வேறு பிரசுரங்களிலிருந்து வழக்கம்போல் பைபிள் படிப்பு நடத்த வேண்டியதில்லை. ஆனால் பைபிள் படிப்பு நடத்தியவர், மாணாக்கருடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்ட வேண்டும்.​—⁠ஜனவரி 15, 1996, காவற்கோபுரம், பக்கங்கள் 14, 17-ஐக் காண்க.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்