ஜூலை ஊழியக் கூட்டங்கள்
ஜூலை 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். சபை மற்றும் நாட்டின் மார்ச் மாத வெளி ஊழிய அறிக்கையைப் பற்றி குறிப்பு சொல்லவும். தேவராஜ்ய செய்திகள்.
20 நிமி: “யெகோவாவின் உதவிக்காக ஜெபியுங்கள்.” முன்னுரை ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருக்கட்டும். கட்டுரையை கேள்வி பதிலோடு கலந்தாலோசிக்கவும். உள்ளப்பூர்வமாக செய்யப்படும் பல்வேறு ஜெபங்கள் எவ்வாறு ஊழியத்தில் வெற்றியடைய உதவுகின்றன என்பதை விளக்கவும். சரியான நேரத்தில் செய்த ஜெபம் எவ்வாறு தங்களுடைய ஊழியத்தில் உதவியது என்பதைப் பற்றிய அனுபவங்களை சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள்.—அக்டோபர் 15, 1996, காவற்கோபுரம், பக்கம் 32-ஐக் காண்க.
15 நிமி: சிற்றேடுகளை நன்கு பயன்படுத்துங்கள். பேச்சும் நடிப்புகளும். சிற்றேடுகள் எப்படி ஊழியத்தில் சிறப்பாக உதவுகின்றன என்பதை விளக்கவும். அவை பல தலைப்புகளில், பல்வேறு மக்களுக்கு ஏற்றவாறு, ஒரே கருப்பொருளை சுருக்கமாகவும், வேதாகம போதனைகளை எளிமையாகவும் விளக்குகின்றன. இம்மாதம் ஊழியத்தில் அளிக்கவிருக்கும் சிற்றேடுகளையும் சபையின் கையிருப்பில் நிறைய இருக்கும் சிற்றேடுகளையும் குறிப்பிடவும். உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ்-ல் “அளிப்புகள்” என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளில் இரண்டு மூன்றை சுருக்கமாக நடித்துக்காட்டவும்.
பாட்டு 181, முடிவு ஜெபம்.
ஜூலை 12-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: “முன் தயாரிப்பால் உள்ளத்தில் பொங்கும் சந்தோஷம்.” பேச்சும் பேட்டிகளும். வெளி ஊழியத்திற்கு ஏன் முன் தயாரிப்பு அவசியம் என்பதையும், அவ்வாறு செய்யும்போது சந்தோஷம் பொங்கும் என்பதையும் விளக்குங்கள். (பள்ளி துணைநூல், பக்கம் 39, பாராக்கள் 1-3-ஐக் காண்க.) இரண்டு அல்லது மூன்று திறம்பட்ட பிரஸ்தாபிகளை பேட்டி காணவும். அவர்கள் எவ்வாறு வெளி ஊழியத்திற்கு செல்வதற்கு முன்பு தயாரிக்கிறார்கள், எவ்வாறு அது ஊழியத்தில் உதவுகிறது என்று கேளுங்கள். வெளி ஊழியத்திற்கு தயாரிப்பதில் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பேருதவியாக இருந்ததை சுட்டிக்காட்டிய அனுபவம் ஏப்ரல் 15, 1993, ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 30-ல் உள்ளது. அதை எடுத்துக்கூறவும்.
20 நிமி: “நேரடியாக விஷயத்துக்கு வருவோம்!” சபையாரோடு கலந்தாலோசிப்பும் நடிப்புகளும். வீட்டுக்காரரின் கவனத்தை ஈர்க்க என்ன சொல்லலாம் என்ற ஒவ்வொரு ஆலோசனையையும் எடுத்துக்கூறவும். கைமேல் பலன் தரும் பல முன்னுரைகளை அனுபவமிக்க பிரஸ்தாபிகளை நடித்துக்காட்ட சொல்லுங்கள். உள்ளூர் சூழ்நிலைக்கு நன்றாக ஒத்துவரும் கூடுதலான ஆலோசனைகளையும், அனுபவங்களையும் சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 183, முடிவு ஜெபம்.
ஜூலை 19-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: நான் ஓர் அமைப்பில் சேர வேண்டுமா? நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில், பக்கங்கள் 280-4-ல் கொடுத்திருக்கும் விஷயத்தை சபையாரோடு கலந்துபேசுங்கள். ராஜ்ய செய்தியை நன்றாக கேட்கும் பலர், ஒரு மத அமைப்பில் “சேரவேண்டும்” என்ற எண்ணத்தை அறவே வெறுப்பதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். “அமைப்பு” என்றால் என்ன, யெகோவாவின் காணக்கூடிய அமைப்பை அடையாளம் காட்டும் ஏழு அம்சங்கள் என்னென்ன என்று எடுத்துரைக்கவும். இது எவ்வாறு மற்ற அமைப்புகளிலிருந்து வேறுபடுகிறது, இவ்வமைப்பில் கூட்டுறவு கொள்வதால் எப்படி ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று விளக்கவும்.
பாட்டு 189, முடிவு ஜெபம்.
ஜூலை 26-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜூலை மாத ஊழிய அறிக்கையைப் போடும்படி அனைவருக்கும் நினைப்பூட்டவும். கேள்விப் பெட்டி.
15 நிமி: நாம் சீஷர்களை உருவாக்குகிறோமா? பிப்ரவரி 15, 1996, காவற்கோபுரம், பக்கங்கள் 19-22-ல் கொடுத்திருக்கும் குறிப்புகளை ஊழியக் கண்காணி ஒன்று அல்லது இரண்டு உதவி ஊழியர்களோடு கலந்தாலோசிக்கிறார். நம் பிராந்தியத்தில் ஏன் நாம் பாத்திரவான்களை, அதாவது தகுதியானவர்களை தேடிப்பிடித்து சீஷர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்கு வேதப்பூர்வ காரணங்களை சிறப்பித்து கூறுங்கள். (மத். 10:11) இத்தகைய மக்கள், இந்தப் பொல்லாத உலகில் நடந்துவரும் தேவபக்தியற்ற செயல்களை கண்டு உள்ளம் குமுறிக்கொண்டிருப்பவர்கள். யெகோவாவின் கோபத்தின் நாள் வரும்முன் அவரைத் தேடும் மனச்சாய்வு உள்ளவர்கள். (எசே. 9:4; செப். 2:2, 3) இவர்கள் மத்தியிலேயே, ‘நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்களும்’ வசிக்கிறார்கள். (அப். 13:48) இயேசு கட்டளையிட்ட அனைத்தையும் எல்லா மக்களுக்கும் கற்றுத்தர வேண்டியது, அவர்களை சீஷர்களாக உருவாக்க வேண்டியது நம் கடமை. (மத். 24:14; 28:19, 20) நாம் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது, சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது, தெருவில் ஊழியம் செய்யும்போது மக்களுக்கு ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வத்தையே இலேசாக கிளறிவிடுகிறோம். ஆனால் அவர்களை மறுபடியும் போய் போய் சந்தித்தால்தான் சீஷர்களாக உருவாக்க முடியும். இதைச் செய்ய நடைமுறையான ஆலோசனைகளை கூறுங்கள்.
20 நிமி: “நம் கடவுளுடைய வீட்டை அசட்டை செய்யக் கூடாது.” மூப்பரால் கொடுக்கப்படும் ஊக்கமான பேச்சு. ஜனவரி 1997 நம் ராஜ்ய ஊழியம், உட்சேர்க்கை, பக்கங்கள் 3-6-ன் அடிப்படையிலானது. ஒரு சொந்த ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்கு உங்களுடைய சபையாரை உற்சாகப்படுத்துங்கள். ஏற்கெனவே இருந்தால், அதை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கும், நாடு முழுவதிலுமுள்ள எல்லா சபைகளும் சொந்த ராஜ்ய மன்றத்தைக் கொண்டிருப்பதற்கு உதவும்படியும் உற்சாகப்படுத்துங்கள். உட்சேர்க்கை பக்கம் 6-ல் உள்ள பெட்டிக்கு கவனத்தைத் திருப்புங்கள்.
பாட்டு 118, முடிவு ஜெபம்.