2011 காலண்டரின் சிறப்பு—குடும்ப வழிபாடு
2011 யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டரின் மையக்கரு குடும்ப வழிபாடு. இன்றைய குடும்பங்களின் மற்றும் பூர்வகால குடும்பங்களின் படங்கள் அதில் உள்ளன. அதோடு, தம்பதியர்களும் மணமாகாதவர்களும் யெகோவாவின் வார்த்தையைப் படிப்பதைக் காட்டும் படங்களும் உள்ளன.
அந்தப் படங்களில் உள்ள பைபிள் கதாபாத்திரங்கள் யெகோவாவின் வார்த்தையை வாசிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்; அவர்கள் எதிர்ப்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க அதுவே அவர்களுக்குப் பேருதவியாய் இருந்தது. (சங். 1:2, 3) ஒவ்வொரு படத்தையும் நாம் கூர்ந்து பார்க்கும்போது அவை குடும்ப வழிபாட்டின் முக்கியத்துவத்தை நமக்கு நினைப்பூட்டுகின்றன; நம்முடைய குடும்பம் சிறியதோ பெரியதோ, எல்லாரும் சத்தியத்தில் இருக்கிறார்களோ இல்லையோ குடும்ப வழிபாடு முக்கியம் என்பதைக் காட்டுகின்றன. குடும்ப வழிபாட்டிற்காக நீங்கள் ஒதுக்கியிருக்கும் நாளைக் குறிப்பிடுவதற்கு காலண்டரில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை பூர்த்திசெய்துவிட்டீர்களா?