டிசம்பர் 27-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 27-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 25-28
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள். “2011 காலண்டரின் சிறப்பு—குடும்ப வழிபாடு.” பேச்சு.
10 நிமி: ஊழியத்தில் குறிப்புத்தாளைப் பயன்படுத்துவது நமக்கு எப்படி உதவியாய் இருக்கும். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 167 முதல் 168, பாரா 1 வரையுள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. அடுத்த மாத அளிப்பை எப்படிக் கொடுக்கலாம் என்பதை ஒரு பிரஸ்தாபி தனக்குத் தானே பேசிக்கொள்ளும் நடிப்பில் செய்துகாட்டுகிறார்; அதில், ஊழியத்திற்குச் செல்வதற்கு முன்பு என்ன பேச வேண்டுமென்பதை ஓரிரு நிமிடங்கள் தயாரிக்கிறார்.
10 நிமி: நரைமயிரானது மகிமையான கிரீடம். (நீதி. 16:31) யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 2010, பக்கம் 110, பாராக்கள் 2-4-ன் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு அனுபவத்தையும் சிந்தித்த பிறகு சபையார் என்ன கற்றுக்கொண்டார்கள் எனக் கேளுங்கள்.
10 நிமி: ஜனவரியில் பத்திரிகைகளை அளிக்க தயாரியுங்கள். கலந்தாலோசிப்பு. பத்திரிகைகளிலுள்ள கட்டுரைகளை அலச ஓரிரு நிமிடங்களை எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு, இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஊழியத்தில் பயன்படுத்த என்னென்ன கேள்விகளையும் வசனங்களையும் உபயோகிக்கலாம் என சபையாரிடம் கேளுங்கள். ஒவ்வொரு பத்திரிகையையும் எப்படிக் கொடுக்கலாமென நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.