நேரம் தவறாதீங்க
1. யெகோவா எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்கிறார் என்று எப்படி சொல்லலாம்?
1 யெகோவா எல்லா விஷயத்தையும் சரியான நேரத்திற்கு செய்கிறார். உதாரணத்திற்கு, அவர் தம்முடைய அடிமை மூலமாக “ஏற்ற வேளையில்” நமக்கு பைபிள் விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறார். (மத். 24:45) நமக்கு சரியான “சமயத்தில் உதவி” செய்கிறார். (எபி. 4:16) அர்மகெதோனையும் சரியான நேரத்தில் கொண்டுவருவார். (ஆப. 2:3) இப்படி யெகோவா எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்வதால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது என்று யோசித்து பாருங்கள்! (சங். 70:5) ஆனால், மனிதர்களால் யெகோவாவைப் போல் இருக்க முடியாது. இருந்தாலும், எல்லாவற்றையும் சரியான நேரத்திற்கு செய்ய நாம் கற்றுக்கொள்ளலாம்.
2. நேரம் தவறாமல் இருப்பது ஏன் நல்லது?
2 இன்று நிறைய பேர் சுயநலமாக நடந்துகொள்கிறார்கள். ‘எனக்கு என் வேலைதான் முக்கியம்’ என்று நினைக்கிறார்கள்; சொன்ன நேரத்துக்கு எதையும் செய்வதில்லை. (2 தீ. 3:1-3) ஆனால், நாம் யெகோவாவின் சாட்சியாக இருப்பதால் வேலைக்கு சரியான நேரத்திற்கு போகிறோம்; யாராவது வரச் சொல்லியிருந்தால் சொன்ன நேரத்திற்கு அங்கு போகிறோம். இதையெல்லாம் பார்க்கிறவர்கள் யெகோவாவை புகழ்கிறார்கள். (1 பே. 2:12) ஒருவேளை, நாம் வேலைக்கு சரியான நேரத்திற்கு போகலாம்; ஆனால், கூட்டதிற்கு தாமதமாக போகிறோமா? பாட்டும் ஜெபமும் ஆரம்பிப்பதற்கு முன்பே போகிறோமா? சரியான நேரத்திற்கு போனால்தான் யெகோவாவை பின்பற்ற முடியும்.—1 கொ. 14:33, 40.
3. எல்லாவற்றையும் சரியான நேரத்திற்கு செய்வது மற்றவர்களுக்கு எப்படி உதவியாக இருக்கும்?
3 நாம் எல்லாவற்றையும் சரியான நேரத்திற்கு செய்யும்போது மற்றவர்களுக்கும் அது உதவியா இருக்கும். (பிலி. 2:3, 4) கூட்டத்துக்கோ ஊழிய கூட்டத்துக்கோ நாம் தாமதமாக போனால் மற்றவர்களுக்கும் தொந்தரவாக இருக்கும். தாமதமாக போவதே பழக்கமாக இருந்தால் மற்றவர்கள் நம்மை தப்பாக நினைப்பார்கள்; ‘நமக்கு நிறைய வேலை இருக்கிற மாதிரியும், மத்தவங்களுக்கு வேலையே இல்லாத மாதிரியும் நடந்துக்கிறோம்’ என்று நினைப்பார்கள். எல்லாவற்றையும் சரியான நேரத்திற்கு செய்தால் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள். அதோடு, ‘பொறுப்பானவங்க, நம்பகமானவங்க, சுறுசுறுப்பா இருக்கிறவங்க’ என்று நாம் பேர் எடுப்போம்.
4. நாம் எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்ய எப்படி பழகிக்கொள்ளலாம்?
4 நீங்கள் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்தால், எதனால் அப்படி செய்கிறீர்கள் என்று யோசித்து பாருங்கள். எந்தெந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என்று எழுதி வையுங்கள். (பிர. 3:1; பிலி. 1:10) யெகோவாவிடம் உதவி கேளுங்கள். (1 யோ. 5:14) நாம் நேரம் தவறாமல் இருக்கும்போது யெகோவாமேலும் மற்றவர்கள்மேலும் அன்பு வைத்திருப்பதை காட்டுவோம்.—மத். 22:37-39.