உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/14 பக். 3
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2014
  • இதே தகவல்
  • சந்தோஷமான குடும்பம்​—பகுதி 2
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • பெற்றோர்களே! யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • ஆவிக்குரிய விதத்தில் பலமான குடும்பத்தைக் கட்டுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • நம் வெப்சைட்டை பயன்படுத்தி பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2013
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2014
km 5/14 பக். 3

கேள்விப் பெட்டி

◼ ஆன்மீக முதிர்ச்சியைப் பெற பிள்ளைகள் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?

பிள்ளைகளை, ‘யெகோவாவுக்கு ஏற்ற முறையில் கண்டித்து, அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்க’ கிறிஸ்தவ பெற்றோர் தங்களாலான எல்லாவற்றையும் செய்கிறார்கள். (எபே. 6:4) உதாரணத்திற்கு, ஒவ்வொரு நாளும் காலையில் பிள்ளைகளோடு சேர்ந்து தினவசனத்தைப் படிப்பது பலனளித்திருக்கிறது. ஒருவேளை, குடும்ப வழிபாட்டில் அல்லது மற்றச் சமயங்களில் குடும்பத்திலுள்ள எல்லோரும் சேர்ந்து அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவைப் பார்க்கலாம், அதைப் பற்றி கலந்தாலோசிக்கலாம். இளைஞர் கேட்கின்றனர் கட்டுரைகளிலுள்ள சில தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து அதைப் பற்றி பேசலாம். பைபிள் சம்பவம் ஒன்றை நடித்துக்காட்டலாம் அல்லது ஒத்திகை பார்க்கலாம். ஆனால் பிள்ளைகள், “முதிர்ச்சியை நோக்கி வேகமாய் முன்னேற” ஆழமான பைபிள் சத்தியங்களையும் பெற்றோர் கற்றுத்தர வேண்டும்.—எபி. 6:2.

ஊழியத்தில் மற்றவர்களுக்கு நாம் என்ன கற்றுத்தருகிறோம் என்று யோசித்துப் பாருங்கள். முதல் சந்திப்பிலோ மறுசந்திப்பிலோ பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைப் பயன்படுத்தி பைபிள் படிப்பு ஆரம்பிக்கிறோம். அந்தப் புத்தகத்தை முடித்த பிறகு, ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ புத்தகத்தைப் பயன்படுத்துகிறோம். ஏன்? அடிப்படை பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்வதற்கு, பைபிள் கற்பிக்கிறது புத்தகம் உதவுகிறது. அன்றாட வாழ்க்கையில் பைபிள் நியமங்களை எப்படிப் பின்பற்றலாம் என்பதைக் கற்றுக்கொள்வதற்கு ‘கடவுளது அன்பு’ புத்தகம் உதவுகிறது. புதியவர்கள், கிறிஸ்துவில் “வேரூன்றியவர்களாகவும்” “விசுவாசத்தில் பலப்படுகிறவர்களாகவும்” இருக்க இந்த இரண்டு பிரசுரங்களும் உதவுகின்றன. (கொலோ. 2:6, 7) இவை நம் பிள்ளைகளுக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்! பிள்ளைகளுக்கும் மீட்பு பலி, கடவுளுடைய அரசாங்கம், இறந்தவர்களின் நிலை பற்றியெல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டும். கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதிக்கிறார், கடைசி நாட்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்பதைப் பற்றியும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். யெகோவாவின் சாட்சிகளிடம்தான் உண்மையான சத்தியம் இருக்கிறது என்பதை அவர்கள் உறுதியாக நம்ப வேண்டும். இளைஞர்கள் பைபிள் நியமங்களைப் புரிந்துகொள்வதோடு தங்கள் “பகுத்தறியும் திறன்களை” எப்படிப் பயிற்றுவிப்பது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். (எபி. 5:14) பிள்ளைகளுடைய வயதையும் புரிந்துகொள்ளும் திறனையும் பெற்றோர் மனதில் வைத்து அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். என்றாலும், அநேக பிள்ளைகளுக்கு, சிறு வயதிலேயே ஆழமான பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்ளும் திறமை இருக்கிறது.—லூக். 2:42, 46, 47.

பெற்றோருக்கு உதவ, jw.org-ல் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் அடிப்படையில் சில கட்டுரைகள் வெளியிடப்படும். நம்முடைய வெப் சைட்டில் பைபிள் டீச்சிங்ஸ் > டீனேஜர்ஸ் என்ற பகுதியில் இதைப் பார்க்கலாம். சீக்கிரத்தில், ‘கடவுளது அன்பு’ புத்தகத்தின் அடிப்படையிலும் சில கட்டுரைகள் வெளியிடப்படும். வெப் சைட்டிலுள்ள கட்டுரைகளோடு சேர்த்து, பைபிள் கற்பிக்கிறது மற்றும் கடவுளது அன்பு புத்தகங்களையும் பெற்றோர் பயன்படுத்தலாம். இவற்றை எப்போது பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அதாவது, குடும்ப வழிபாட்டின்போதா பிள்ளைக்கு பைபிள் படிப்பு நடத்தும்போதா அல்லது தனிப்பட்ட படிப்பு படிப்பதற்கு பயிற்சி அளிக்கும்போதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்