கற்றுக்கொள்ளும் விஷயங்களை கடைப்பிடிக்க உதவி செய்யுங்கள்
1. இயேசு சொல்லிக்கொடுத்ததை கேட்ட மக்கள் என்ன செய்தார்கள்?
1 இயேசு ஒரு சமயம் வசனங்களுக்கான அர்த்தத்தை விளக்கி சொன்னபோது, அவருடைய சீடர்கள் அதை நன்றாகப் புரிந்துகொண்டார்கள். (லூக். 24:32) இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்களை மக்கள் எப்போதுமே நன்றாக புரிந்துகொண்டார்கள்; வாழ்க்கையில் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்று தெரிந்துகொண்டார்கள். நம்முடன் பைபிள் படிப்பவர்கள், கடவுளுக்கு பிடித்த மாதிரி வாழவேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது, அதை அவர்களாகவே செய்ய வேண்டும். அதனால், எந்தவொரு விஷயத்தையும் நன்றாக புரிந்துகொள்ளும் விதத்தில் சொல்லிக்கொடுப்பது ரொம்ப முக்கியம். அப்போதுதான் அவர்களாகவே யோசித்து வாழ்க்கையில் மாற்றங்களை செய்வார்கள்.—ரோ. 6:17.
2. நாம் எப்படி சொல்லிக்கொடுக்க வேண்டும்?
2 எப்படி சொல்லிக்கொடுப்பது? எது சரி, எது தவறு என்று மட்டுமே சொன்னால் ஒருவர் எல்லாவற்றையும் சரியாக செய்துவிடுவார் என்று சொல்ல முடியாது. அடுக்கடுக்காக வசனங்களை காட்டி அவர் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டினால், நாம் சொல்வதை ஆர்வமாகக் கேட்க மாட்டார். முதலில், ஒரு விஷயத்தை பற்றி அவர் என்ன நினைக்கிறார், ஏன் அப்படி செய்கிறார் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, நன்றாக யோசித்து, சரியான கேள்விகளை கேட்க வேண்டும், அவர் மனதை காயப்படுத்தும் விதத்தில் எதையும் கேட்கக் கூடாது. அப்போதுதான் மனதில் இருக்கும் விஷயங்களை வெளிப்படையாக சொல்வார். (நீதி. 20:5) பிறகு, பைபிளில் இருந்து அவருக்கு ஏற்ற வசனங்களை எடுத்துக் காட்டலாம். இப்படி செய்தால், அவர் கற்றுக்கொள்ளும் விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடிப்பார். சிலர் உடனே மாற்றம் செய்ய மாட்டார்கள். மாற்றங்களை செய்ய யெகோவாவுடைய சக்தி அவர்களுக்கு உதவி செய்யும்வரை பொறுமையாக இருங்கள்; அவர் மீது உண்மையான அக்கறை காட்டுங்கள்.—நீதி. 25:15; மாற். 4:26-29.
3. நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள எப்படி உதவி செய்யலாம்?
3 நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள உதவுங்கள்: யெகோவா எவ்வளவு நல்லவர், நம்மீது எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறார் என்று பைபிளிலிருந்து காட்டுங்கள். அப்போது அவர்களும் அதேபோன்ற குணங்களை வளர்த்துக்கொள்வார்கள். சங்கீதம் 139:1-4, லூக்கா 12:6, 7 போன்ற வசனங்களை காட்டி நம் ஒவ்வொருவர்மீதும் யெகோவாவுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்று சொல்லுங்கள். யெகோவா காட்டியிருக்கும் அன்பையும் இரக்கத்தையும் புரிந்துகொண்டால் அவருக்கு எப்போதும் நன்றியோடு இருப்பார்கள்; அவர்மீது அன்பு காட்டுவார்கள்; அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். (ரோ. 5:6-8; 1 யோ. 4:19) யெகோவாவுக்கு பிடித்தமாதிரி நடந்துகொள்ளும்போது அவர் சந்தோஷப்படுவார், இல்லையென்றால் வருத்தப்படுவார். இதை புரிந்துகொள்ளும்போது அவருக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டார்கள்; அவருக்கு புகழ் சேர்ப்பதுபோல் நடந்துகொள்வார்கள்.—சங். 78:40, 41; நீதி. 23:15.
4. நாம் ஏன் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது?
4 யெகோவா கொடுக்கும் ஆலோசனைகளை கடைப்பிடிக்க சொல்லி அவர் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அப்படி கடைப்பிடிப்பதால் என்ன நன்மை என்றுதான் சொல்கிறார், அதையும் அன்பாக சொல்கிறார். (ஏசா. 48:17, 18) நாமும் மக்களுக்கு சொல்லிக்கொடுக்கும்போது, அவர்களே யோசித்து ஒரு முடிவுக்கு வர உதவி செய்ய வேண்டும். அவர்களே மாற்றங்களை செய்யும்போதுதான் அவர்களுடைய முடிவில் உறுதியாக இருப்பார்கள். (ரோ. 12:2) நம் இருதயத்தின் எண்ணங்களையும் யோசனைகளையும் நன்றாக புரிந்து வைத்திருக்கிற யெகோவா அப்பாவோடு நல்ல நண்பர்களாகவும் ஆவார்கள்.—நீதி. 17:3.