உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஏப்ரல் பக். 5
  • செயலற்ற பிரஸ்தாபியை நீங்களும் உற்சாகப்படுத்தலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செயலற்ற பிரஸ்தாபியை நீங்களும் உற்சாகப்படுத்தலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • செயலற்றவர்களை மறந்துவிடாதீர்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2007
  • “என்னிடம் திரும்பி வாருங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • தாமதமின்றி உடனே திரும்ப உதவுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • மந்தையைவிட்டுப் பிரிந்துபோனவர்களுக்கு உதவுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஏப்ரல் பக். 5

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

செயலற்ற பிரஸ்தாபியை நீங்களும் உற்சாகப்படுத்தலாம்

ஒரு மேய்ப்பன் காணாமல்போன ஆட்டை காப்பாற்ற முயற்சி செய்கிறார்

ஒவ்வொரு வருடமும் நினைவு நாள் நிகழ்ச்சியில் பல செயலற்ற பிரஸ்தாபிகள் கலந்துகொள்கிறார்கள். இவர்கள் வாழ்வுக்கான ஓட்டத்தை ஓட ஆரம்பித்தார்கள். ஆனால், ஏதோ சில பிரச்சினைகளால் ஓட்டத்தில் பின்தங்கிவிட்டார்கள். அவர்கள் எதிர்ப்படும் சில பிரச்சினைகளைப் பற்றி திரும்பி வந்துவிடுங்கள் என்ற சிற்றேடு விளக்குகிறது. (எபி 12:1) செயலற்றவர்களும் யெகோவாவின் கண்ணில் பொக்கிஷம்தான். இவர்களையும் தன் மகனின் இரத்தத்தால் யெகோவா வாங்கியிருக்கிறார். (அப் 20:28; 1பே 1:18, 19) அவர்கள் சபைக்கு திரும்பிவர நாம் எப்படி உதவலாம்?

காணாமல்போன ஆட்டை கண்டுபிடிக்க ஒரு மேய்ப்பன் எந்தளவு முயற்சி எடுக்கிறாரோ அதேபோல மூப்பர்களும் செயலற்ற பிரஸ்தாபிகளை தேடி கண்டுபிடிக்க முயற்சி எடுக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவியை செய்கிறார்கள். (லூ 15:4-7) யெகோவா எந்தளவுக்கு செயலற்றவர்கள்மீது அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. (எரே 23:3, 4) மூப்பர்கள் மட்டுமல்ல நாம் எல்லாருமே செயலற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும். அவர்கள்மீது அன்பையும் அனுதாபத்தையும் காட்ட நாம் முயற்சி எடுத்தால் யெகோவா சந்தோஷப்படுவார். அப்படி செய்யும்போது நல்ல பலன்களும் கிடைக்கும். (நீதி 19:17; அப் 20:35) அதனால், யாரை நீங்கள் உற்சாகப்படுத்தலாம் என்று யோசித்து பார்த்து, அவர்களை உற்சாகப்படுத்த உடனடியாக முயற்சி எடுங்கள்.

லாரா ஜன்னல் வழியாக பார்க்கிறார், ஆபி ஜெபம் செய்கிறாள், லாராவும் ஆபியும் அரவணைக்கிறார்கள், சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கொள்கிறார்கள்

சபைக்கு சரியா வராதவங்களுக்கு உதவி செய்யுங்க என்ற வீடியோவை பார்த்த பிறகு கீழே இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:

  • தனக்கு அறிமுகமில்லாத ஒரு சாட்சியை பார்த்தவுடன் ஆபி என்ன செய்தாள்?

  • செயலற்ற பிரஸ்தாபிக்கு உதவி செய்வதற்கு முன் நான் ஏன் இதைப் பற்றி மூப்பர்களிடம் பேச வேண்டும்?

  • லாராவை இரண்டாவது முறை போய் சந்திப்பதற்கு முன் ஆபி என்னவெல்லாம் செய்தாள்?

  • விடாமுயற்சி, பொறுமை, அன்பு போன்ற குணங்களை ஆபி எப்படி காட்டினாள்?

  • லூக்கா 15:8-10-ல் சொல்லப்பட்டிருக்கும் இயேசுவின் உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • ஆபியும் மற்றவர்களும் எடுத்த முயற்சிகளுக்கு என்ன பலன் கிடைத்தது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்