பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 10-11
சமாரியனைப் பற்றிய உவமை
“மற்றவர்கள் உண்மையில் யார்?” என்ற கேள்விக்குப் பதில் கொடுப்பதற்காகத்தான் இயேசு இந்த உவமையைச் சொன்னார். (லூ 10:25-29) சமாரியர்கள் மற்றும் கலிலேயர்கள் உட்பட ‘எல்லா விதமான மக்களும்’ கிறிஸ்தவ சபைக்குள் வருவார்கள் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. (யோவா 12:32) இந்த உவமையின் மூலம், மற்றவர்கள் மீது அன்பு காட்ட, அதுவும் வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்த மக்களிடம் அன்பு காட்ட, கடினமாக முயற்சி எடுக்க வேண்டும் என்ற பாடத்தை இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:
‘வேற கலாச்சாரத்தை சேர்ந்த சகோதர சகோதரிகள பத்தி நான் என்ன நினைக்கிறேன்?’
‘நிறைய விஷயங்கள்ல என்கூட ஒத்துப்போற சகோதரர்களோட மட்டும்தான் நான் நிறைய நேரம் செலவு பண்றேனா?’
‘வித்தியாசமான பின்னணிய சேர்ந்த சகோதரர்களோட பழகுறதுக்கு நான் இன்னும் என்ன செய்யலாம்?’ (2கொ 6:13)
யாரை நான் கூப்பிடலாம்?
என்னோடு ஊழியம் செய்வதற்கு . .
வீட்டுக்குச் சாப்பிடுவதற்கு . .
குடும்ப வழிபாட்டுக்கு . .