கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
அவர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
நீங்கள் சமீபத்தில் ஒரு உதவி ஊழியராக அல்லது மூப்பராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்களா? ஒருவேளை, மற்ற உதவி ஊழியர்களுக்கும் மூப்பர்களுக்கும் இல்லாத திறமைகளோ படிப்பறிவோ உங்களுக்கு இருக்கலாம். ஆனாலும், அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். சொல்லப்போனால், முதுமை, உடல்நலப் பிரச்சினை, அல்லது குடும்பப் பொறுப்புகள் காரணமாக இனியும் பொறுப்பில் இல்லாத முதிர்ச்சியுள்ள சகோதரர்களிடமிருந்துகூட நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.
அனுபவம் வாய்ந்தவர்களை மதியுங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
1. சகோதரர் ரிச்சர்ட் எப்படிச் சகோதரர் பெல்லோவுக்கு மதிப்புமரியாதை காட்டினார்?
2. பென் என்ன தவறு செய்தார், ஏன்?
3. எலிசாவின் உதாரணத்திலிருந்து பென் என்ன கற்றுக்கொண்டார்?
4. நீங்கள் ஒரு சகோதரராக இருந்தாலும் சரி, சகோதரியாக இருந்தாலும் சரி, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களுக்கு எப்படி மதிப்புமரியாதை காட்டலாம்? அவர்களிடமிருந்து எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?