கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
இளைஞர்களே—‘நல்ல செயல்கள் செய்வதில் வைராக்கியமுள்ளவர்களாக’ இருங்கள்
அப்போஸ்தலன் பவுல் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் தீத்துவுக்குக் கடிதம் எழுதினார். அதில், தீத்து உட்பட இளைஞர்கள் எல்லாரும் “நல்ல செயல்கள் செய்வதில் எல்லா விதத்திலும் முன்மாதிரியாக” இருக்க வேண்டும் என்று சொன்னார். (தீத் 2:6, 7) பிறகு அதே அதிகாரத்தில், யெகோவாவின் மக்கள் எல்லாரும் ‘நல்ல செயல்கள் செய்வதில் வைராக்கியமுள்ளவர்களாக’ ஆவதற்கு சுத்தமாக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். (தீத் 2:14) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதும், கற்பிப்பதும் அந்த நல்ல செயல்களில் அடங்கும். நீங்கள் ஒருவேளை இளைஞராக இருந்தால், துணைப் பயனியர் அல்லது ஒழுங்கான பயனியர் செய்வதற்கு உங்கள் பலத்தைப் பயன்படுத்த முடியுமா?—நீதி 20:29.
நீங்கள் ஒருவேளை பயனியராகச் சேவை செய்ய விரும்பினால், எல்லாவற்றையும் எதார்த்தமாகத் திட்டமிடுங்கள். (லூ 14:28-30) உதாரணத்துக்கு, முழுநேர ஊழியம் செய்துகொண்டு, உங்கள் செலவுகளை எப்படிச் சமாளிப்பீர்கள்? உங்கள் பயனியர் மணிநேரத்தை எப்படி எட்டுவீர்கள்? உங்களுக்கு உதவி செய்யும்படி யெகோவாவிடம் கேளுங்கள். (சங் 37:5) உங்களுடைய திட்டத்தைப் பற்றி உங்கள் அப்பா அம்மாவிடமும், பயனியர் ஊழியத்தில் அனுபவம் பெற்றவர்களிடமும் சொல்லுங்கள். பிறகு, உங்கள் குறிக்கோளை அடைவதற்குத் தேவையான படிகளை எடுங்கள். பக்திவைராக்கியத்தோடு நீங்கள் செய்யும் சேவையை யெகோவா கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்!
இளைஞர்கள் யெகோவாவை மகிமைப்படுத்துகிறார்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
பயனியர் ஊழியம் செய்ய சிலருக்கு என்ன சவால்கள் இருந்திருக்கின்றன, அவற்றை அவர்கள் எப்படிச் சமாளித்திருக்கிறார்கள்?
ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய பிள்ளைகளுக்குப் பெற்றோர் எப்படி உதவலாம்?
ஊழியம் செய்வதற்கு ஏன் அட்டவணை தேவை?
சபையில் இருப்பவர்கள் பயனியர்களை எப்படி உற்சாகப்படுத்தலாம், அவர்களுக்கு எப்படி உதவலாம்?
பயனியர் சேவை செய்கிறவர்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்ன?
பயனியராகச் சேவை செய்ய வேண்டுமென்ற குறிக்கோளை நான் எப்படி அடைவது?