கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
திறமையான வேலையாளாக இருங்கள்
திறமையான ஒரு மர ஆசாரிக்குத் தன் கருவிகளை நன்றாகப் பயன்படுத்த தெரியும். அதேபோல், “எதற்காகவும் வெட்கப்படாத வேலையாளாக” இருப்பவருக்கு, கற்பிக்கும் கருவிகளை நன்றாகப் பயன்படுத்த தெரியும். (2தீ 2:15) ஊழியத்துக்காகப் பயன்படுத்தப்படும் சில கருவிகளைப் பற்றி நீங்கள் எந்தளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று கண்டுபிடிக்க இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
இந்தக் கருவி யாருக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது?—mwb17.03 பக். 5 பாரா. 1-2
பைபிள் படிப்பை நடத்த இந்தக் கருவியை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம்? —km 7/12 பக். 3 பாரா 6
ஞானஸ்நானம் எடுக்க உங்கள் மாணவரைத் தயாராக்குவதற்கு வேறு எந்தக் கருவி தேவைப்படுகிறது?—km 7/12 பக். 3 பாரா 7
கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!
பைபிள் படிப்புக்கு உதவும் மற்ற கருவிகளிலிருந்து இந்தக் கருவி எப்படி வித்தியாசப்படுகிறது?—km 3/13 பக். 4-5 பாரா. 3-5
இந்தச் சிற்றேட்டைக் கொடுக்கும்போது என்ன செய்ய முயற்சி எடுக்க வேண்டும்? —km 9/15 பக். 3 பாரா 1
இதைப் பயன்படுத்தி நீங்கள் எப்படி பைபிள் படிப்பு நடத்தலாம்?—mwb16.01 பக். 8
பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது? புத்தகத்திலிருந்து எப்போது படிப்பை ஆரம்பிக்கலாம்?—km 3/13 7 பாரா 10
பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
ஒவ்வொரு அதிகாரத்தின் முக்கியக் குறிப்புகளையும் பின்குறிப்புகளையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும்?—mwb16.11 பக். 5 பாரா. 2-3
இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
இந்தக் கருவியை எப்போது பயன்படுத்த வேண்டும்?—mwb17.03 பக். 8 பாரா 1
இதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?—mwb17.03 பக். 8, பெட்டி