கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
நவம்பர் மாதத்தில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்துவதற்கு ஒரு விசேஷ ஏற்பாடு
“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும்” என்று இயேசு சொன்னார். (லூ 4:43) அந்த அரசாங்கத்துக்காக ஜெபம் செய்யவும் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத் 6:9, 10) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்துவதற்கு நவம்பர் மாதத்தில் ஒரு விசேஷ ஏற்பாடு செய்யப்படும். (மத் 24:14) இந்த விசேஷ ஊழியத்தில் முழுமையாகக் கலந்துகொள்ள இப்போதே திட்டம் போடுங்கள். அந்த மாதத்தில் துணைப் பயனியராக சேவை செய்பவர்கள் 30 அல்லது 50 மணிநேரம் ஊழியம் செய்யலாம்.
உங்கள் ஊழியப் பகுதியில் நீங்கள் சந்திக்கிற ஒவ்வொருவருக்கும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்கிற ஒரு வசனத்தைக் காட்ட முயற்சி செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது நீங்கள் சந்திக்கும் நபர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை மனதில் வையுங்கள். யாராவது ஆர்வம் காட்டினால், அவருக்கு காவற்கோபுரம் எண் 2, 2020 பொது இதழைக் கொடுங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அவரை மறுபடியும் சந்தித்து “கற்பிப்பதற்கான கருவிகளில்” இருக்கிற ஒரு பிரசுரத்தைப் பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். கடவுளுடைய அரசாங்கத்தை எதிர்க்கிற எல்லா அதிகாரங்களையும் அது நொறுக்கப்போகும் காலம் ரொம்பப் பக்கத்தில் வந்துவிட்டது. (தானி 2:44; 1கொ 15:24, 25) அதனால், யெகோவாவையும் அவருடைய அரசாங்கத்தையும் ஆதரிப்பதற்கு நமக்குக் கிடைத்த இந்த விசேஷ வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றும்!