பைபிளில் இருக்கும் புதையல்கள்
பெண்கள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அக்கறையைத் திருச்சட்டம் எப்படிக் காட்டியது?
ஒரு கணவர் கல்யாணமாகி ஒரு வருஷத்துக்கு படையில் சேவை செய்யாமல் தன் மனைவியோடு இருக்க வேண்டும் (உபா 24:5; it-2-E பக். 1196 பாரா 4)
விதவைகளின் அத்தியாவசிய தேவைகள் கவனித்துக்கொள்ளப்பட்டன (உபா 24:19-21; it-1-E பக். 963 பாரா 2)
விதவையாகிவிட்ட ஒரு பெண்ணுக்குக் குழந்தைகள் இல்லையென்றால், அவள் மறுமணம் செய்துகொண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு தரப்பட்டது (உபா 25:5, 6; w11-E 3/1 பக். 23)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னோட குடும்பத்திலயும் சபைலயும் இருக்குற பெண்கள்கிட்ட நான் எப்படி அக்கறையா, மரியாதையா நடந்துக்கலாம்?’