உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மார்ச் பக். 13
  • கஷ்டங்கள் எல்லாம் காலாவதியாகிவிடும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கஷ்டங்கள் எல்லாம் காலாவதியாகிவிடும்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • சோதனைகளைத் தாங்கிக்கொள்ள யெகோவா நமக்கு உதவுகிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • எப்போதும் பொறுமையாக இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • நீங்கள் பொறுமையோடு காத்திருப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மார்ச் பக். 13
படத்தொகுப்பு: “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. 1. ஒரு மாநாட்டில் கருப்பு இனத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் மட்டும் இருக்கிறார்கள். 2. கருப்பு இனத்தையும் வெள்ளை இனத்தையும் சேர்ந்த மூப்பர்களும் அவர்களுடைய மனைவிகளும் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். 3. வித்தியாசமான வயதையும் பின்னணியையும் சேர்ந்த இரண்டு சகோதரிகள் பொது ஊழியம் செய்கிறார்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கஷ்டங்கள் எல்லாம் காலாவதியாகிவிடும்

கஷ்டங்கள் வரும்போது நாம் அப்படியே உடைந்துபோய்விடுகிறோம். அதுவும் அந்தக் கஷ்டங்கள் நீடித்துக்கொண்டே போனால் சொல்லவே வேண்டாம்! தாவீதை சவுல் ராஜா படாத பாடு படுத்தினார். ஆனாலும், அவர் கொடுத்த கஷ்டங்கள் எல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரும் என்பது தாவீதுக்குத் தெரிந்திருந்தது. அதோடு, யெகோவா சொன்ன மாதிரியே தன்னால் சிம்மாசனத்தில் உட்கார முடியும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. (1சா 16:13) விசுவாசம் இருந்ததால் தாவீதுக்கு பொறுமையோடு இருந்தார். தன்னுடைய சூழ்நிலையை யெகோவா மாற்றும்வரை காத்திருந்தார்.

நமக்குக் கஷ்டங்கள் வரும்போது, பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களின்படி அவற்றைச் சமாளிப்பதற்கு நாம் முயற்சி செய்யலாம். சாமர்த்தியமாக நடந்து, நமக்குக் கிடைத்த அறிவையும் யோசிக்கும் திறனையும் பயன்படுத்தி நம்முடைய சூழ்நிலையை மாற்ற நாம் நினைக்கலாம். (1சா 21:12-14; நீதி 1:4) ஆனாலும், சில கஷ்டங்கள் தீராமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் நாம் பொறுமையாக இருக்க வேண்டும், யெகோவாவுக்காக காத்திருக்க வேண்டும். சீக்கிரத்தில் நம்முடைய கஷ்டங்களை எல்லாம் நீக்கி, நம்முடைய ‘கண்ணீரையெல்லாம் அவர் துடைத்துவிடுவார்.’ (வெளி 21:4) யெகோவா தலையிட்டு நம்முடைய கஷ்டத்தைத் தீர்த்தாலும் சரி, வேறு எப்படியாவது அது தீர்ந்தாலும் சரி, ஒன்று மட்டும் உறுதி. நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் காலாவதியாகிவிடும்! இதைக் கேட்கும்போது நம் மனதுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!

வேற்றுமையில் ஒற்றுமை என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் இருக்கிற சகோதர சகோதரிகள் சிலருக்கு என்ன கஷ்டங்கள் வந்தன?

  • அவர்கள் எப்படிப் பொறுமையாகவும் அன்பாகவும் நடந்துகொண்டார்கள்?

  • ‘மிக முக்கியமான காரியங்களுக்கு’ அவர்கள் எப்படித் தொடர்ந்து முதலிடம் கொடுத்தார்கள்?—பிலி 1:10

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்