-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
விழிப்புடன் இருங்கள்: இதற்கான கிரேக்க வார்த்தையின் அடிப்படை அர்த்தம், “தூங்காமல் இருப்பது.” ஆனால், நிறைய வசனங்களில், “கவனமாக இருப்பது; ஜாக்கிரதையாக இருப்பது” என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்தேயு இந்த வார்த்தையை மத் 24:43; 25:13; 26:38, 40, 41 ஆகிய வசனங்களில் பயன்படுத்தியிருக்கிறார். விழிப்பாக இருப்பதற்கு ‘தயாராக இருப்பது’ அவசியம் என்பதை மத் 24:44-ல் அவர் காட்டியிருக்கிறார்.—மத் 26:38-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
-