தவறாகக் கொள்ளப்பட்ட தயவுக்கு எதிராக காத்துக்கொள்ளுங்கள்
1 யெகோவாவின் மக்கள் அவர்களுடைய தயவிற்கும் தாராள குணத்திற்கும் அறியப்பட்டிருக்கிறார்கள். இயேசு பேசிய இரக்கம் காட்டிய சமாரியனைப் பற்றிய மனதைத்தொடுகிற உவமையை நாம் பின்பற்றும்போது, பெரும்பாலும் இது பொருள் சம்பந்தமான முறையில்தானே வெளிப்படுத்தப்படுகிறது. (லூக். 10:29-37) என்றபோதிலும், பொருள் சம்பந்தமான உதவிக்குத் தகுதியாயிராத சிலர் நம்முடைய தயவை அனுகூலப்படுத்திக்கொள்ள முயற்சிசெய்யலாம். ஆகையால், மற்றவர்களுக்கான நம்முடைய அன்பு, “திருத்தமான அறிவினாலும் முழுப் பகுத்துணர்வினாலும்” சமநிலைப்படுத்தப்பட வேண்டும்.—பிலி. 1:9, NW.
2 சபைக்குள்ளேயே: உதாரணமாக, உதவியை வேண்டுவதற்காக ஒருவர், தனக்கு வேலையில்லை என்பதையோ மற்ற காரணங்களையோ சொல்லலாம். சில சமயங்களில் இந்தத் தனிப்பட்ட ஆட்கள் வேலைக்காக சுறுசுறுப்பாகத் தேடுவதில்லை, ஆனால் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை வெறுமனே மற்றவர்கள் அளிக்கும்படி விரும்புகிறார்கள். இப்படிப்பட்டவர்களைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் கட்டளையிட்டார்: ‘ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது.’—2 தெ. 3:10.
3 “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” நம் அனைவருக்கும் நேரிடுகிறது; ஆகவே நாம் பொருள் சம்பந்தமான தேவையிலிருந்தால், ‘இந்த நாளுக்குரிய அப்பம்’ இல்லாதிருந்தால், நாம் மிக அதிகமாக கவலைப்படக்கூடாது; ஏனென்றால் அவரை நேசித்து, அவருடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு யெகோவா அளிக்கிறார். (பிர. 9:11, NW; மத். 6:11, 31, 32) தேவையிலிருக்கும் ஒருவர் மூப்பர்களில் ஒருவரிடத்தில் பேசுவதை நன்மையாகக் காணலாம். உதவியளிப்பதற்காக நிறுவப்பட்டிருக்கிற அரசாங்கத் திட்டங்களை மூப்பர்கள் ஒருவேளை அறிந்தவர்களாயிருக்கலாம், விண்ணப்பங்களைப் பூர்த்திச்செய்வதற்கு அல்லது இப்படிப்பட்ட திட்டங்களுக்கானத் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவிசெய்யும் நிலையில் ஒருவேளை இருக்கலாம். எப்படியிருந்தாலும், உதவியை வேண்டுகிற ஒவ்வொருவரின் சூழ்நிலைமைகளை மூப்பர்கள் சீர்தூக்கிப் பார்த்து, என்ன செய்யப்படலாம் என்பதைத் தீர்மானிக்கலாம்.—1 தீமோத்தேயு 5:3-16-ஐ ஒத்துப்பாருங்கள்.
4 சுற்றிவரும் எத்தர்கள்: சபையிலுள்ள சிலருடைய பணமும் பொருள் சம்பந்தமான காரியங்களும் சுற்றிவரும் எத்தர்களால் ஏமாற்றப்பட்டிருக்கின்றன என்ற அறிக்கைகளைச் சங்கம் தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்கிறது. இது நம்மை ஆச்சரியமடையச் செய்யக்கூடாது. ஏனென்றால், “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவு”மிருப்பார்கள் என்று வேதவசனங்கள் எச்சரிக்கின்றன. (2 தீ. 3:13) தாங்கள் இக்கட்டில் உட்பட்டிருப்பதாகவும் வீடு திரும்பிவர போக்குவரத்துச்செலவும் உணவைப் பெறுவதற்காகப் பணமும் தேவை என்று அடிக்கடி இந்த எத்தர்கள் வாதிடுகின்றனர். அவர்கள் சொல்வது உண்மையானதுபோல் இருந்தாலும்கூட, அநேகருடைய விஷயங்களில் அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாகக்கூட இல்லை, ஆனால் அவ்விதமாக வெறுமனே பாசாங்கு செய்பவர்களாய் இருக்கிறார்கள்.
5 உதவிக்காக அந்நியன் ஒருவன் கேட்பானாகில், சபையின் மூப்பர்களில் ஒருவரை கலந்துபேசுவது ஞானமானது. இந்த ஆள் நம்முடைய சகோதரரா என்பதைத் தீர்மானிப்பதில் அவர் வழிநடத்துதலைக் கொடுப்பார். அந்த ஆளுடைய நிலைநிற்கையை உறுதிப்படுத்தும்படிக்கு, பொதுவாக அந்தச் சபையிலுள்ள மூப்பர்களில் ஒருவருக்கு ஃபோன் செய்யவேண்டும். எதிர்பாராத விதமாகத் தேவையில் இருப்பதாகத் தங்களைக் காண்கிற உண்மையுள்ள சகோதரர்களும் சகோதரிகளும், இந்த விதமான விசாரணை சம்பந்தப்பட்ட அனைவரின் பாதுகாப்புக்காகச் செய்யப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வார்கள். மறுபட்சத்தில், இப்படிப்பட்ட கவனமான ஆராய்ச்சியின்மூலம் எத்தர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள். நமக்குத் தெரியாதவர்கள் அனைவரையும் மட்டுக்குமீறி சந்தேகிக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால் பொல்லாத எத்தர்களுக்கு எதிராக நாம் எச்சரிப்பாக இருக்கவேண்டும்.
6 ஞானியாகிய சாலொமோன் இவ்வாறு புத்திமதி கூறினார்: “நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.” (நீதி. 3:27) நம்முடைய ஞானமான பகுத்துணர்வின்மூலம், தவறாகக் கொள்ளப்பட்ட தயவிற்கு எதிராக எச்சரிப்பாய் இருப்பதோடு, நாம் தொடர்ந்து இரக்கமுள்ளவர்களாயும் இருக்கமுடியும்.