உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/90 பக். 3
  • உங்களுடைய வழக்கம் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுடைய வழக்கம் என்ன?
  • நம் ராஜ்ய ஊழியம்—1990
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள்
  • கூட்டங்கள் தரும் நன்மைகள்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • நாம் ஏன் கூட்டங்களுக்கு வரவேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • கிறிஸ்தவக் கூட்டங்களை நன்றியோடு மதித்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • கூட்டங்களில் சந்தோஷ வெள்ளம் பெருக்கெடுக்க
    நம் ராஜ்ய ஊழியம்—1999
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1990
km 6/90 பக். 3

உங்களுடைய வழக்கம் என்ன?

1 கிறிஸ்தவ கூட்டங்கள் யெகோவாவை வணங்கும் நமது வணக்கத்தின் ஒரு முக்கியமான பாகமாக இருக்கிறது. சபைக் கூடிவருதலைச் “சிலர் விட்டுவிடும் வழக்கத்தைக் கொண்டிருப்பதைப் போல்” நாமும் விட்டுவிடக்கூடாது என்று பவுல் சரியாகவே நம்மை ஊக்குவிக்கிறான்.—எபி. 10:25, NW.

2 கிறிஸ்தவக் கூட்டங்களில் உங்களுடைய சகோதரர்களோடு கூட்டுறவு கொள்வதைக் குறித்து இதே விதமான விருப்பார்வத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா? இவ்விஷயத்தில் உங்கள் வழக்கம் எதை வெளிப்படுத்துகிறது? சபை புத்தகப் படிப்பு உட்பட, எல்லாக் கூட்டங்களுக்கும் நீங்கள் ஒழுங்காக ஆஜராகிறீர்களா? அல்லது நீங்கள் கூட்டங்களை வழக்கமாக தவறவிடுவதை காண்கிறீர்களா? கூட்டங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன இடத்தை வகிக்கின்றன? கூட்டங்களுக்குத் தவறாமல் வரும்படி நீங்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறீர்களா? ஞாபகார்த்த ஆசரிப்பில் கலந்துகொண்டவர்களை கூட்டங்களுக்கு ஒழுங்காக வரும்படி நீங்கள் உற்சாகப்படுத்தி வந்திருக்கிறீர்களா?

3 நமது அன்றாட செயல்கள் எதுவாயிருப்பினும் பவுலினுடைய அறிவுரையை குறைவாக மதிப்பிட முடியாது. மோசமான உடல்நிலை அல்லது அவருடைய கட்டுப்பாட்டை மீறிவிடும் மற்ற சில சூழ்நிலைகளின் காரணமாக ஒரு கிறிஸ்தவன் அவ்வப்போது கிறிஸ்தவ கூட்டங்களைத் தவறவிடுபவனாக இருக்கக்கூடும் என்பது விளங்கத்தக்கதே. என்றாலும் அது நிச்சயமாகவே அவர் வழக்கமாக அவ்வாறு தவறவிடுபவராக இருக்கக்கூடாது. (ரோ. 2:21) அநேக தேவராஜ்ய நடவடிக்கைகளை உட்படுத்தும் மிகுதியான பொறுப்புகளை கவனிக்க வேண்டியவனாக இருந்தபோதிலும், ஒரு கிறிஸ்தவன் மிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்வது அவசியம். (பிலி. 1:10) ஒரு கிறிஸ்தவனுக்கு, மிக முக்கியமான காரியங்களுள் கூட்டங்களும் உட்படுகின்றன. நமது ஆவிக்குரிய தேக ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியமானவை.

ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள்

4 பவுல் ரோமருக்கு எழுதுகையில் அவர்களைக் காண வாஞ்சையாக இருப்பதாக குறிப்பிட்டான். ஏன்? அவர்கள் “ஸ்திரப்படுவதற்காக” சில ஆவிக்குரிய வரங்களைக் கொடுப்பதற்கே. (ரோ. 1:10, 11) அவர்கள் வாசிப்பதற்கென்று எழுதப்பட்ட தகவல்களைக் கொண்ட வெறும் கடிதத்தை அனுப்புவதோடு அவன் திருப்தியடைந்துவிடவில்லை. ஆனால் கூட்டுறவு மிக முக்கியமானது, ஆம் அவசியம் என்பதை அவன் உணர்ந்தான். ஏனெனில் அவன் தொடர்ந்து சொன்னதாவது: “ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தும்படி” (NW) அல்லது ஒத்துவாக்கிய பைபிள் அடிக்குறிப்பு சொல்லுகிறபடி “ஒன்றுகூடி உற்சாகமடைவதற்கு.” (ரோ. 1:11) கிறிஸ்தவ கூட்டுறவின் மூலம் உற்சாகமடைவதற்கான அவசியத்தை அப்போஸ்தலனாகிய பவுலும்கூட உணர்ந்தான்.

5 அதே போன்ற நம்முடைய கிறிஸ்தவ கூட்டங்களில் நாம் ஒருவரையொருவர் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவவேண்டும். சிநேகபான்மையுள்ள புன்முறுவலும் அனலான வாழ்த்துதலும் மற்றவர்கள் மீது நல்விளைவைக் கொண்டிருக்கக்கூடும். கட்டியெழுக்கக்கூடிய பதில்களும், நிகழ்ச்சிநிரலில் நன்கு தயாரிக்கப்பட்ட பகுதிகளும் மற்றவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுவதைக் காண்பதும் மேலும் கூட்டங்களில் வெறுமென சகோதரர்கள் மத்தியில் கூடியிருப்பது தானே அதிக உற்சாகமூட்டுவதாயிருக்கக்கூடும். நாளின் முடிவிலே நாம் களைப்பாக இருந்தாலும்கூட வழக்கமாக கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜரான பின்பு அதிக புத்துயிரளிக்கப்பட்டவர்களாக உணருவதை நாம் காணக்கூடும். கிறிஸ்தவ நட்பும் நமது சகோதரர்கள் நம்மீது காட்டும் அன்பும் “நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடுவதற்கு” நம்மை உற்சாகப்படுத்தக்கூடும். (எபி. 12:1) கடவுளுடைய வார்த்தைக்குக் கவனமாய் செவிகொடுப்பதன் மூலம் நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்க ஆயத்தமாயிருக்கலாம். மெய்யாகவே கூட்டங்களில் இருப்பதன் மூலம் அநேக ஆசீர்வாதங்கள் வருகின்றன.

6 இப்பொழுது முன்னிருந்ததைக் காட்டிலும் நமது விசுவாசத்தை நாம் உறுதியாக பற்றியிருக்க வேண்டும். மேலும் மற்றவர்களை அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவவேண்டும். எல்லாச் சபைக் கூட்டங்களுக்கும் ஆஜராகும்படியான நமது முயற்சியில் ஊக்கமாக இருக்க வேண்டும். சபைக் கூடிவருதலை விட்டுவிடும் ஒரு வழக்கத்திற்குள் அல்லது பழக்கத்திற்குள் விழுந்துவிட நாம் விரும்புகிறதில்லை. ஞாபகார்த்த தினத்தன்று ஆஜரானவர்கள் உட்பட, எல்லாரையும் ஒழுங்காக கூட்டங்களுக்கு வரும்படி உற்சாகப்படுத்துவதற்கும் உதவி செய்வதற்கும் உள்ளார்ந்த முயற்சி நாம் எடுக்க வேண்டும். இந்த முறையில் மற்றவர்கள் மீது நமது அன்பையும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கான நமது போற்றுதலையும் நாம் காண்பிப்போமாக.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்