உங்களிலிருக்கிற நம்பிக்கைக்கு நீங்கள் காரணம் கொடுக்கிறீர்களா?
1 சமீபத்தில் ஒரு சகோதரரிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது, “உங்களுடையது மட்டுமே சரியான மதம் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” அதற்கு அவர்: “மெய்தான் நான் அவ்வாறே நம்புகிறேன். நான் அவ்வாறு நம்பாவிட்டால் நான் அதில் போய் சேர்ந்திருக்கமாட்டேனே,” என்று பதிலளித்தார். பின்பு யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகள் என்ன என்பதையும் அவற்றிற்கு வேத ஆதாரம் என்ன என்பதையும் அவர் தயவாக விளக்க ஆரம்பித்தார். அவர் பின்வரும் புத்திமதியை பின்பற்றினார்: “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.”—1 பேதுரு 3:15.
2 நம்முடைய நம்பிக்கைக்குக் காரணம் கொடுக்க தினமும் வாய்ப்புகள் இருக்கின்றன. வேலை செய்யுமிடத்தில், அவர்களுடைய கீழ்த்தரமான உரையாடல்களில் நீங்கள் ஏன் பங்கு கொள்ளுகிறதில்லை என்று உங்கள் உடன் வேலையாட்கள் யோசிக்கக்கூடும். பள்ளியில், பண்டிகை கொண்டாட்டங்களில் ஏன் நீங்கள் பங்கு கொள்ளுகிறதில்லை என்று ஆசிரியர்களோ அல்லது சக மாணவர்களோ கேட்கக்கூடும். ஏன் நீங்கள் அடிக்கடி கூட்டங்களுக்குப் போகிறீர்கள் என்று அயலகத்தார் கேட்கக்கூடும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் அப்போஸ்தலனாகிய பேதுருவின் அறிவுரையைப் பின்பற்றுவதற்கு வாய்ப்பை திறக்கக்கூடும். இதற்குப் பதிலளிக்க நீங்கள் முன்கூட்டியே ஆயத்தம் செய்திருந்தால், நம்மோடு சேர்ந்து யெகோவாவை சேவிக்க கற்றுக் கொள்வதற்கு உண்மை மனதோடு கேள்வி கேட்கும் ஆட்களுக்கு நாம் உதவி செய்யலாம்.
செவி கொடுப்போரின் இருதயத்தை எட்டுதல்
3 ஜனங்களோடு உரையாடுவதற்காக வேண்டி, ஒரு பொது மேடையை அமைப்பது இருவருக்கும் பொதுவாயுள்ள காரியங்களைப் பற்றி பேசுவது அவசியம். வெளி ஊழியத்திலானாலுஞ்சரி, அல்லது சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும் போதானாலுஞ்சரி இதையே செய்ய வேண்டும். அப்போஸ்தலர் 17:22-31-ல் மிகச் சிறந்த ஓர் பைபிள் உதாரணம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே பவுல் எப்படித் திறமையோடு ஒரு பொது மேடையை அமைத்தார் என்பதையும் தன் சம்பாஷணை முழுவதிலும் எப்படி அதை தொடர்ந்து காத்து வந்தார் என்பதையும் கவனியுங்கள். அதன் விளைவாக சிலர் சத்தியத்தை ஏற்றுக் கொண்டார்கள்.—ஸ்கூல் கைட் புத்தகம் பக்கங்கள் 156-8, பாராக்கள் 15-24.
4 பிப்ரவரி மாதத்தில் நீங்கள் வீட்டுக்குவீடு ஊழியத்தில் ஈடுபடுகையில் உரையாடலை ஏற்படுத்துவதற்கு இருவருக்கிடையிலான பொதுவான காரியங்களைப் பாருங்கள். வீட்டுக்காரர் எதிர்ப்படும் பிரச்னைகள் எதுவோ அதையே நாமும் எதிர்ப்படுகிறோம். நம்முடைய பிள்ளைகளின் பாதுகாப்பு, அவர்களுடைய எதிர்காலம், உண்மையான சமாதானமின்மை, குற்றச்செயலின் அதிகரிப்பு, மருந்துகளின் துர்ப்பிரயோகம் ஆகியவை பற்றிய கவலையை வெளிப்படுத்துங்கள். கடவுளுடைய ராஜ்யமே இவற்றிற்கு பரிகாரம் தரும், எனவே நமது சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள் ராஜ்ய ஆசீர்வாதங்கள் சிலவற்றை சிறப்பித்துக் காட்டுகிறது.
5 விசேஷ அளிப்புக்கென்று குறிக்கப்பட்டிருக்கும் 192-பக்க புத்தகங்களைக் கையிருப்பில் கொண்டிருக்கும் சபைகள் ஒவ்வொன்றையும் ரூ.5.00 நன்கொடைக்கு அளிக்கலாம். இப்படிப்பட்ட பிரசுரங்களை அளிக்கையில் கடவுளுடைய ராஜ்யத்தின் பேரில் கவனத்தை ஊன்ற வைக்கும் திட்டவட்டமான தகவலை சிறப்பித்துக் காட்டுங்கள். உதாரணமாக, நீங்கள் ராஜ்யம் வருவதாக புத்தகத்தைக் காண்பிக்க விரும்பக்கூடும். பக்கம் 201-ல் வெளிப்படுத்துதல் 21:4 காட்சிப்படுத்திக் காட்டக்கூடிய உலகத்தைப்பற்றி விவரிக்கிறது. இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? இதற்கு ஒத்த தகவலை 218-220-ல் பேசுகிறது. பழைய புத்தகங்கள் இல்லாவிட்டால் வேறு ஏதாவது 192-பக்க புத்தகங்கள் ஒன்று ரூ.10.00 நன்கொடைக்கு அளிக்கப்படலாம்.
மறு சந்திப்புகளில்
6 ஆர்வத்தை வளர்க்க நீங்கள் மறுசந்திப்பு செய்கையில், உங்கள் நம்பிக்கைக்கான காரணத்தை மிகுதியான அளவில் விளக்கிக் காட்டுவதற்கு ஆயத்தமாயிருங்கள். நீங்கள் ஏற்கெனவே வீட்டுக்காரரிடம் ஏற்படுத்திவிட்ட பொதுவான காரியங்களை அடிப்படையாக கொண்டு தொடர்ந்து பேசுங்கள். அவருடைய கருத்துக்குச் செவி கொடுங்கள் அவர்களிடம் நியாயத்தை எடுத்துக் காட்டுங்கள். நான் மறுபடியும் உங்களைச் சந்திக்கையில் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை கட்டியமைக்கக்கூடிய இன்னும் அதிக நிறைவான தகவல்களை நான் சொல்ல விரும்புகிறேன். என்ற எதிர்பார்ப்புடன் அவரை விட்டு வாருங்கள்.
7 நம்மிடமிருக்கும் நம்பிக்கைக்குக் காரணம் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அதை அனுகூலப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் இளைஞராக இருந்தாலும் முதியோராக இருந்தாலும் நம்முடைய நம்பிக்கைக்கு நாம் ஆதாரமுள்ள தெளிவான சம்மதிக்கச் செய்யும் காரணங்களைக் கொடுக்கும் நிலையிலிருக்க வேண்டும் வைராக்கியத்துடன் நம்முடைய நம்பிக்கைக்குக் காரணங்களைக் கொடுப்பதன் மூலம் நாம் அனைவரும் பலமான விசுவாசத்தை நடப்பித்துக் காட்டுவோமாக.