தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஏப்ரல் 26, 2010-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 20 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது மார்ச் 1 முதல் ஏப்ரல் 26, 2010 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
1. நகோமி எதை மனதில் வைத்து, ‘கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தினார்’ என்று சொன்னார்? (ரூத் 1:21) [w05 3/1 பக். 27 பாரா 2]
2. ரூத்தின் என்ன பண்புகள் அவளை “குணசாலி” ஆக்கின? (ரூத் 3:11) [w05 3/1 பக். 28 பாரா 6]
3. “பத்துக் குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா” என்று எல்க்கானா சொன்ன வார்த்தைகள் அவருடைய மனைவியை எப்படிப் பலப்படுத்தின? (1 சா. 1:8) [w05 3/15 பக். 22, பாரா 3]
4. இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென கேட்டது ஏன் தவறு? (1 சா. 8:5) [w05 9/15 பக். 20, பாரா 17]
5. சாமுவேல், ‘கிழவனும் நரைத்தவனுமாக’ இருந்தபோதிலும் மற்றவர்களுக்காக ஜெபம் செய்வதில் எப்படி முன்மாதிரியாய் விளங்கினார், இது எதைச் சிறப்பித்துக் காட்டுகிறது? (1 சா. 12:2, 23) [w07 6/1 பக். 29, பாரா. 14-15]
6. கேனியருக்கு சவுல் ஏன் தனிச் சலுகை காட்டினார்? (1 சா. 15:6) [w05 3/15 பக். 22 பாரா 10]
7. 1 சாமுவேல் 16:17-23-ஐக் கவனிக்கையில், தாவீது யாருடைய மகன் என சவுல் ஏன் கேட்டார்? (1 சா. 17:58) [w05 3/15 பக். 23 பாரா 8]
8. காத் ஊரில் பெரிய பிரச்சினையை தாவீது சமாளித்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (1 சா. 21:12, 13) [w05 3/15 பக். 24 பாரா 4]
9. யோனத்தான் தன்னுடைய நண்பனான தாவீதுக்கு ஆதரவும் உற்சாகமும் தேவைப்பட்ட சமயத்தில் எப்படி அன்பையும் மனத்தாழ்மையையும் காட்டினார்? (1 சா. 23:17) [lv பக். 33, பாரா 10 அடிக்குறிப்பு]
10. சவுல் எந்தோரிலிருந்த குறிசொல்லும் பெண்ணைச் சந்தித்த பதிவிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம்? (1 சா. 28:8-19) [w05 3/15 பக். 24 பாரா 7]